தீனிசைத் தென்றல் தேரிழந்தூர் தாஜுதீன் இன்னிசை.
அபுதாபியில் "தீனிசைத் தென்றல்", "காவியக் குரலோன்" தேரிழந்தூர் தாஜுதீன் அவர்களின் இன்னிசை மாலை. தீனிசைத் தென்றல் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்களின் ஒலி, ஒளி குருந்தகடு வெளியீடும் இன்னிசை மாலையும் நிகழ்வில் ஒரு பகுதி.
அபுதாபியில் சங்கமம் தொலைக்காட்சி வழங்கிய காட்சியினை அன்பளிப்பு தந்து உதவிய அண்ணன் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்களுக்கு நம் வாழ்த்துகள்.
Jazakkallahu Hairan நன்றி



துபாய் : அரேபிய வர்த்தகம் எனும் வளைகுடா வணிக இதழ் வளைகுடாவில் உள்ள சக்தி வாய்ந்த இந்திய பிரபலங்களை பற்றிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. ஆறு மாதங்களாக நடைபெற்ற இவ்வாய்வில் 500 நபர்களை தேர்ந்தெடுத்து பின் அதிலிருந்து வடிகட்டி 100 நபர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் இடம் பெறும் நபர்களை அவர்களின் நிறுவனத்தின் செல்வாக்கு, வணிகம், மக்களுடன் உள்ள நெருக்கம் என பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
சில்லறை வணிக சக்ரவர்த்தியான யூசுப் அலிக்கு அடுத்தபடியாக இரண்டாவதாக 15 நாடுகளில் 900 கடைகளை வைத்துள்ள லேண்ட் மார்க் குழுமத்தின் நிறுவனர் முகேஷ் ஜெக்தானியும் ஸ்டாண்டார்ட் சார்டர்ட் வங்கியின் ஆப்பிரிக்க, ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கின் பணிகளை நிர்வகிக்கும் சங்கர் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளார். நியூ மெடிகல் சென்டர் மற்றும் யூ. ஏ. ஈ எக்ஸ்சேன்ஜ் உரிமையாளர் ஷெட்டி நான்காம் இடத்திலும் 70 வருடங்களுக்கு முன்னாலேயே துபாய்க்கு வந்து அரேபியன் டிரேடிங் ஏஜென்ஸி எனும் வர்த்தக நிறுவனத்தை நடத்தி வரும் பஞ்சோலியா ஐந்தாம் இடத்திலும் உள்ளனர்.