Showing posts with label சீரழிக்கும் சீரியல். Show all posts
Showing posts with label சீரழிக்கும் சீரியல். Show all posts

Wednesday, February 16, 2011

பெற்றோர்களே மனம் திறந்து பேசுங்களேன்

கடந்த சில நாட்களாக மாணவிகள் தற்கொலை என்ற செய்தி அன்றாடம் தொலைக்காட்சியில் காணமுடிந்தது. அன்மையில் பள்ளி ஆசிரியர் கண்டித்ததால் சென்னையை சேர்ந்த மாணவி ஒருவரும், கும்பகோணத்தில் பள்ளி தலைமையாசிரியர் திருட்டு விசாரனை என்று ஒரு மாணவியை கண்டித்து தண்டித்ததால், தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர், இந்த மாணவிகள் மன உளச்சலுக்குள்ளாகி தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள் என்பது மிக வேதனையான செய்தியே.

பெற்றோர்களே பள்ளிக்கு செல்லும் தங்களின் பிள்ளைகளிடம் இது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளியில் ஆசிரியர்கள் விதிமுறைக்கு உட்பட்டு கண்டிப்பது சகஜமே என்றாலும் பள்ளியிலிருந்து வீட்டுக்கு வரும் தம் பிள்ளைகளை தங்களின் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும். அவர்களின் stress levelயை கண்டறியவேண்டும்.

மாணவிகள் தற்கொலை என்ற செய்தி, மக்களிடையே அந்த மாணவிகளுக்கு அனுதாபங்கள் ஏற்படுத்தி வருகிறது என்பது உண்மை. ஆசிரியர்களின் கண்டிப்புகளால் சிறிதளவு பாதிக்கப்பட்ட உங்கள் பிள்ளைகளின் மனதில் இது போன்ற செய்திகள் ஏதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம்.

LinkWithin

Related Posts with Thumbnails