Showing posts with label சூரத்துல் ஃபாத்திஹா. Show all posts
Showing posts with label சூரத்துல் ஃபாத்திஹா. Show all posts

Sunday, November 27, 2011

''உன்னையே நாங்கள் வணங்குகிறோம் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்''




எம்.ஏ.முஹம்மது அலீ 
 இறைவா! இவர்களிடமிருந்து முஸ்லீம்களைக் காப்பாற்று!

மிகவும் கைசேதப்படவேண்டிய விஷயம் என்னவெனில், இன்று தர்காவை நம்பக்கூடிய ஆலிம்கள் எல்லா இடங்களிலும் வியாபித்துள்ளார்கள்.. இவர்கள் வழிகெட்டுப்போவது மட்டுமின்றி, மார்க்கம் ஒன்றுமறியாத - தெரியாத அப்பாவி மக்களை வழிகெடுப்பதில் முன்னனியில் நிற்கிறார்கள் என்பது அப்பட்டமான உண்மையாகும்.
சுன்னத் வல் ஜமா அத் என்று சொல்லிக்கொண்டு அதற்கு மாற்றமாக நடப்பவர்கள். சமுதாயத்திற்கு மிகப்பெரும் ஆபத்தே இவர்களால்தான்.

ஏனெனில் இதுபோன்ற ஆலிம்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் மதரஸாக்கள் - ஜாமியாக்களிலிருந்து வெளியாகும் ஆலிம்கள் எப்படி இருப்பார்கள் என்று சொல்லித்தெரிய வேண்டிய அவசியமில்லை.
தர்காக்களை நோக்கி ஓடும் ஆலிம்களே!
''உன்னையே நாங்கள் வணங்குகிறோம்
உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்''

மீண்டும் மீண்டும் ஓதக்கூடிய ''சூரத்துல் ஃபாத்திஹா''வில் வரும் இத்திருவசனத்தை எத்தனை முறை ஓதியிருப்பீர்கள்?!
''உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்'' என்று ஆயிரக்கணக்கான முறை தொழுகையிலும் மற்ற நேரங்களிலும் ஓதியது எல்லாம் வெறும் உதட்டசைப்புதானா?! உங்கள் உள்ளத்தில் ஒட்டவே இல்லையா?
ஆலிம்களான உங்களுக்கு அதன் அர்த்தம் விளங்காமல் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை.

ஆக, நிச்சயமாக அதனை விளங்கியிருந்தும் அதனை பின்பற்றவில்லையென்றால் உங்களுக்கு அந்த இறைவசனத்தின் மீது முழுமையாக நம்பிக்கையில்லை என்றுதானே அர்த்தம்?!
அதுவும் ''உன்னிடமே - அல்லாஹ்விடம் மட்டுமே - உதவி தேடுகிறேன்'' என்று சொல்வதில் உங்களுக்கு 100 க்கு 100 சதவீதம் நம்பிக்கையில்லை, திருப்தியில்லை – அதற்கு மேல் ஏதோ ஒருவர் உங்களுக்குத் தேவைப்படுகிறார் என்றுதானே அர்த்தம்!
இவ்வளவு காலமும் அல்லாஹ்வின்மீது முழுமையான நம்பிக்கையில்லாத தொழுகைதான் உங்களுடையது என்று சொல்வதில் என்ன தவறு இருக்க முடியும்?

ஒரு மனிதனுக்கு இதைவிட மிகப்பெரும் கைசேதம் வேறு எதுவாக இருக்க முடியும்! சிந்தியுங்கள்.
ஒரு முஃமின் அல்லாஹ்விடம் கையேந்திவிட்டால் வெறுங்கையுடன் அதனை திருப்பி அனுப்ப அல்லாஹ் வெட்கப்படுகிறான் என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்களே! அது உங்கள் உள்ளங்களில் அழுத்தமாகப் பதியாமல் போனதன் காரணம் என்ன?
கேட்பது உடனே கிடைத்துவிட வேண்டும் என்கின்ற அவசரமோ! அதற்காகாத்தானே தர்காவை நோக்கி ஓடுகிறீர்கள்?!! ''பொறுமையாளர்களுடன் தான் அல்லாஹ் இருக்கின்றான்'' என்கின்ற தித்திக்கும் திருமறையின் வசனங்கள் உங்கள் உள்ளங்களை ஊடுருவாமல் போனதன் காரணம் என்ன்?

LinkWithin

Related Posts with Thumbnails