ஈது பெருநாள் வருவது முஸ்லிம்களுக்கு மிகவும் மகிழ்வாகவே இருக்கும். காரணம் முஸ்லிம்கள் கொண்டாடுவதே முக்கியமாக இரண்டே பெருநாட்கள்தான். ஒன்று ஈகைத் திருநாளாக இருக்கும் ரமதான் பண்டிகை மற்றொன்று தியாத் திருநாளாக இருக்கும் ஈத் பெருநாள் .
பலநாடுகளில் இஸ்லாமிய பெண்கள் பெருநாளைக்கு பள்ளிவாசலுக்குச் சென்று மகிழ்வோடு இறைவனைத் தொழுது வருவார்கள் .அந்த வாய்ப்பு தமிழ் நாட்டில் குறைவு . மார்க்கம் அனுமதிக்கப் பட்ட ஒன்றை இவர்கள் கடைபிடிக்காமல் வீட்டிலேயே தொழுது கொள்கின்றார்கள் .அந்த மகிழ்வான ஒன்று கூடும் வாய்ப்பினை இழக்கின்றார்கள்.
ஆண்கள் தொழுதுவந்த பின் குர்பானி கொடுத்துவிட்டு வேண்டிய நண்பர்களை விருந்துக்கு அழைகின்றார்கள்.