மகன் லாமின் முஹம்மது ப்ரோக்ரஸ் ரிப்போர்ட் சைன் பண்ண போயிருந்தோம். சிக்ஸ்த் படிக்கிறான். வழக்கமாக 70-80 மார்க் தான் வாங்குவான். போன முறை 6த் ரேங்க் வாங்கியிருந்தான். மாஷா அல்லாஹ் இந்த முறை ஃபர்ஸ்ட் ரேன்க். பரிச்சை பேப்பர் வீட்டுக்கு கொடுக்க மாட்டாங்க. இன்னிக்கு தான் ஸ்கூல்ல பார்த்தேன். அப்டியே அள்ளிக்கலாம் போல மார்க் வாங்கி இருக்கார் சாரு. மேத்ஸ்ல 99, சயின்ஸ்ல 98, தமிழ்ழ 91, சோஷியல்ல 96, இங்கிலீஷ்ல 94 இப்படி....
எனக்கு சந்தோஷத்துல அழுகையே வந்திருச்சு. காரணம் வீட்டுல புக்கை எடுத்து வெச்சு படிக்கற பழக்கமே இல்ல. எப்ப பாரு கார்ட்டூன் சேனல் தான். ஹோம்வொர்க் மட்டும் தான் செய்வான். நானும் வீட்ல படி படின்னு புஷ் பண்ண மட்டேன். சொல்லித் தரவும் மாட்டேன். மாஷா அல்லாஹ் எப்டி எப்போ படிக்கிறான்னு புரிய மாட்டேங்குது. கேட்டா மிஸ் நடத்தும் போதே புரிஞ்சுக்குது, நான் மனப்பாடம்லாம் பண்ண மாட்டேன், சொந்தமா தான் எழுதுவேன்னு சொல்றான்.
Showing posts with label மகிழ்வு. Show all posts
Showing posts with label மகிழ்வு. Show all posts
Wednesday, October 15, 2014
Friday, December 3, 2010
நண்பா எங்கிருந்தாலும் வாழ்க !
உண்மையான நண்பன் நம்முடன் இருக்கும்பொழுது நமக்குள் ஒரு தைரியம் உண்டாகின்றது .
நாளாகும் நட்பை வளர்க, நிமிடம் போதும் நறுக்க.
பொறுமை, பாசம்,அன்பு ,நேசம் ,விட்டுக்கொடுக்கும் மனது இருப்பின் நட்பு வளரும் .
உண்மையான நண்பன் யார் என்பதனை நமக்கு ஒரு சோதனை வரும்பொழுதான் அறிய முடிகின்றது .
மகிழ்வுக்கு உடன் வருவார் , துக்கத்திற்கு ஆறுதல் சொல்வார் ,அவசரத்திற்கு பணம் கேட்டால் ஓடி விடுவார் இவரையும் நண்பர் என்று எண்ணி இருந்து ஏமாந்து நிற்போம் .
நண்பா உன்னை நம்புகின்றேன் ,என்னுடன் வா .நீ இருக்கும்பொழுது என் மனம் மகிழ்வாகவும் அமைதியாகவும் இருகின்றது,
நண்பா எங்கிருந்தாலும் வாழ்க.

நட்பு குறள் 786:
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்துகலைஞர் உரை:
அகநக நட்பது நட்பு.
இன்முகம் காட்டுவது மட்டும் நட்புக்கு அடையாளமல்ல; இதயமார நேசிப்பதே உண்மையான நட்பாகும்.மு.வ உரை:
முகம் மட்டும் மலரும் படியா நட்பு செய்வது நட்பு அன்று, நெஞ்சமும் மலரும் படியாக உள்ளன்பு கொண்டு நட்பு செய்வதே நட்பு ஆகும்.சாலமன் பாப்பையா உரை:
பார்க்கும்போது மனம் மகிழாமல், முகம் மட்டுமே மலரப் பழகுவது நட்பு அன்று. அன்பால் மனமும் மலரப் பழகுவதே நட்பு.
Labels:
இன்முகம்,
எங்கிருந்தாலும் வாழ்க.,
நண்பன்,
மகிழ்வு
Subscribe to:
Posts (Atom)





