"தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அனைத்துப் பிரிவைச் சேர்ந்த பொறியியல் மாணவர்களுக்கும் லேப்-டாப் வழங்கப்படும்,'' என, முதல்வர் கருணாநிதி திருவாரூரில் நேற்று தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அறிவித்தார்.திருவாரூரில் நேற்று தி.மு.க., கூட்டணி சார்பிலான தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் தி.மு.க., தலைவரும், வேட்பாளருமான கருணாநிதி, எந்த மண்ணில் நான் தோழர்களோடு விளையாடி கழித்தேனோ, எந்த மண்ணில் தோழர்களோடு படித்தேனோ, அந்த மண்ணில் வேட்பாளராக நிற்க, எனக்கு ஏற்பட்ட ஆசையின் காரணமாக நான் இங்கு நிற்கிறேன்.