இஸ்லாமிய சமூகம் இலக்கற்று பயனித்துக் கொண்டிருக்கின்றது. நோக்கம்
மறந்த நகர்வுகளால் இலக்குகள் தவறிப் போகும் அபாயத்தை அடிக்கடி நமது
உள்ளத்திற்கு உணர்த்த வேண்டியது கட்டாயத் தேவை. முஹம்மது நபி (ஸல்) அவர்கள்
உருவாக்கிய அந்த தன்னிகரற்ற சமூகமானது பரந்த மனப்பான்மையோடும், நடுநிலை
பேனும் முக்கியமான பன்போடும், எந்த விடயத்தையும் நிதானமாக அனுகும்
போக்கோடும் சிறந்து விளங்கியதால் தான் அவர்களால் தம் இலக்கை இலகுவாக எய்த
முடிந்தது.
நாம் எல்லோரும் சத்தியத்தைத் தேடி ஓயாப் பயணம்
மேற்கொண்டிருக்கின்றோம். இல்லை சத்தியத்தில் தான் இருந்து
கொண்டிருக்கின்றோம். ஆனால் ஒரு துரதிஸ்ட நிலை யாதெனில், மார்க்கத்திலுள்ள
சில அம்சங்களை அனுகும் விதத்தில் ஏற்பட்ட முரண்பாடுகள் எம்மை சுக்கு நூறாக
உடைத்து சிதறவைத்துள்ளன.
