Tuesday, August 24, 2010

ஏழைகள் ஹஜ் மற்றும் உம்ராஹ் செய்ய அறிய வாய்ப்பு !

ஏழைகள் ஹஜ் மற்றும் உம்ராஹ் செய்ய அறிய வாய்ப்பு !

 அன்புள்ள கொள்கை சகோதர, சகோதரிகளுக்கு !

JAQH TRP பிரான்ச் இன்          அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) !

இக்கடிதம் தாங்களை பூரண உடல் நலத்துடனும் , முழு சந்தோசத்துடனும் சந்திக்கட்டுமாக !

ஏழைகள் ஹஜ் மற்றும் உம்ராஹ் செய்ய அறிய வாய்ப்பு சவூதி அரேபியாவில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அறிய வாய்ப்பு 60 - 70 வயதுடைய ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவருக்கும் உண்டு. இந்த வாய்ப்பு பொருளாதாரக் பற்றாக் குறையினால் தங்களுடைய ஹஜ் மற்றும் உம்ராஹ் கடமையினை நிறைவேற்ற முடியாதவர்களுக்கு மட்டுமே.

இதை அனைத்து ஏழை எளிய மக்களும் பயன்படுத்தி மறுமையில் வெற்றியடைய உங்களால் முடிந்த அளவுக்கு உதவுங்கள் (இந்த செய்தியை கொண்டு போய் சேருங்கள்)

இந்த அறிய வாய்ப்பினை MUHAMMADH NATION GROUP, ஜித்தாஹ் என்ற அமைப்பு மேற்கொண்டு வருகின்றது.

தொடர்பு எண் : 00966 – 2691 9999

மற்றவை பின்பு,

என்றும் மக்கள் சேவையில்,

JAQH TRP பிரான்ச்
by  mail fromfarook ali

Monday, August 23, 2010

உயிர் வலிக்க வலிக்க ......

/>

அல்லா 'ஸ் மிர்ரக்கில்ஸ். எ மிர்ரக்கில் இஸ்லாம் இன் நேபால்.3gp -Allah's Mircales. A miracle of Islam in Nepal.3gp

இந்த செயலின் பின்னணியில் யார்!

இந்த நிகழ்வு நேபாளத்தில் நடந்தது. இதை நடத்தியது யார்!

நேபால உள்ளூர் முஸ்லிம்கலுக்கு மினாரா கலசம் (டோம்) அமைக்க கனரக இயந்திரம் தேவை. உபயோகபடுத்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அந்த கலசம் வைக்க வேண்டிய இடத்தில் வைக்கப்பட்டது. இந்த செயலின் பின்னணியில் யார்!

Sunday, August 22, 2010

வீணாகும் நேரமும் உணவும்

வீணாக்க வேண்டாம்
மீண்டும் ஒரு ரமளான்: பிறை 11
இறைவணக்கத்திலும் மறை ஓதுவதிலும் கழிய வேண்டிய ரமளானின் இரவும் பகலும் பலருக்கு வீண் அரட்டை அடிப்பதிலும் வெறுமனே ஊர் சுற்றுவதிலும் கழிவதைப் பார்க்கிறோம். இந்த ஒரு நொடி நம் வாழ்வில் மீண்டும் வராது; இதை நாம் வீணாகக் கழித்து விடக் கூடாது என்ற எச்சரிக்கையுடன் கூடிய நேர்ச்சிந்தனை நம் அனைவருக்கும் தேவை.
நோன்பு நாட்களிலோ மற்ற நாட்களிலோ இன்னொரு முக்கியமான விஷயத்தையும் நாம் கவனத்தில் கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றோம். எதிலும் வீண் விரயமோ பகட்டோ, தற்பெருமையோ கலக்காமல் "இக்லாஸ்" எனும் உளத்தூய்மையுடன், இறைப்பொருத்தத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு எந்நேரமும் செயல்பட நாம் கடமைப்பட்டுள்ளோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 7 : 31)
இன்னும், உறவினருக்கு அவருடைய உரிமைகளைக் கொடுப்பீராக. மேலும், ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும், (அவரவர்களுக்கு உரியதைக் கொடுத்து விடுவீராக!) வீணாகப் (பொருளை) விரயம் செய்யாதீர். (அல்குர்ஆன் 17: 26)
நிச்சயமாக விரயம் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள்; ஷைத்தானோ தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 17 : 27)
நோன்பு துறக்கும் இப்தார் விருந்துகள் முதல், தனி நபர் வாழ்க்கையில் அவரவர் உண்ணும் போதும் பருகும் போதும் வீண் விரயம் செய்யும் விஷயத்தில் முறையாக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், இம்மாதத்தில்தான் முஸ்லிம்களின் இல்லத்திலிருந்து அதிகமான உணவுகள் வீணாகி, குப்பைக்குப் போகின்றன என்று ஒரு புள்ளி விபரம் கூறுகிறது.
உலகில் நோன்பில்லாத நிலையிலும் பசியிலும் பட்டினியிலும் தாகத்திலும் மக்கள் வாடும் நிலையில், அதை மறந்தவர்களாக நாம் செயல்படாமல், அந்நிலையில் இருப்போருக்குச் செலவிட நமது பொருட்களை ஒதுக்குவது இம்மாதத்தில் அதிகம் நன்மைகள் பெற்றுத்தர வல்லது. மேலும் இயன்றால் தொடர்ந்து நாம் செய்யவேண்டிய நல்லறங்களில் ஒன்று இது என்பதை கவனத்தில் வைக்க வேண்டும்.
ஆங்காங்கே, நாம் சந்திக்கும் ஏழைகள், எளியவர்களுக்கு நமது செலவத்திலிருந்து செலவழிப்பது உண்மையில் செலவு அல்ல; நமது மறுமைக்கான முதலீடு (investment) என்பதனைக் கருத்தில் கொண்டு நமது அணுகுமுறைகளைச் சீராக்கி இந்த இலாபகரமான முதலீட்டை அதிகமாக்க வேண்டும்.
- தொடரும் இன்ஷா அல்லாஹ்
ஆக்கம்: இப்னு ஹனீஃப்

பள்ளிவாசல் இமாம்களுக்கு சம்பளம்: லாலு வலியுறுத்தல்

ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் 17 வருடங்களுக்கு முந்தைய உச்சநீதிமன்றம் ஆணையான அரசாங்கம் நிதிபெறும் பள்ளிவாசல்களில் பணிபுரியும் இமாம்களுக்கு சம்பளம் தர வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்த கூறியுள்ளன. காங்கிரஸ் சிறுபான்மையினரின் வோட்டு வங்கிக்காக மட்டுமே அவர்களிடம் கரிசனம் காட்டுகிறது. உணமையில் அவர்கள் மேல் அக்கறை இல்லை என ராஷ்டிரிய ஜனதா தளத்தின் லாலு பிரசாத் யாதவ் நாடாளும்னரத்தின் வெளியே பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.
ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாடி பார்ட்டி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகியவை ஜீரோ நேரத்தில் இமாம்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுருத்தியது. உச்சநீதிமன்ற அரசாங்கம் நிதிபெறும் பள்ளிவாசல்களில் பணிபுரியும் இமாம்களுக்கு சம்பளம் தர வேண்டும் என்பதையும், நிதிபெறாத பள்ளிவாசல்களில் பணிபுரியும் இமாம்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என்பதையும் 6 மாதங்களுக்குள் நடைபடுத்த வேண்டும் என்று 1993ல் தீரிப்பளித்துள்ளது என்பதை லாலு பிராசாத் யாதவ் தெரிவித்தார். "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதை நடைமுறை படுத்துவோம் என அவர் கூறினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பிஜேபியினருக்கு பதில் அளித்த அவர் "வேண்டுமென்றால் நீங்களும் சாதுகளுக்கும், சன்யாசிகளுக்கும் சம்பளம் பெற உச்ச நீதிமன்றத்தை அணுகி கொள்ளாலாம்" எனறார் அவர். அரசு இதை சீக்கிரம் நடைமுறை படுத்த்வில்லை என்றால் போராட்டம் செய்வோம் என்றும் கூறினார் அவர்.
மேலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் சுதிப் பந்த்யோபத்யே இதற்கு தாங்களும் ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறிய அவர் " மேற்கு வங்காளத்தில் இமாம்கள் மோசமான நிலையில் உள்ளார்கள் என்றும் மேலும் பொருளாதாரத்தில் மிகவும் நலிவடைந்து உள்ளனர் என்றும் கூறினார்.
http://www.inneram.com/2010082210201/2010-08-22-06-20-00

இழந்த சக்தியை மீட்க‌ எடுக்கப்படும் தவறான முடிவு.

இழந்த சக்தியை மீட்க‌ எடுக்கப்படும் தவறான முடிவு.

வருடத்தில் பதினொன்று மாதங்கள் மனிதன் தன் உடலின் தேவைக்கேற்ப திட, திரவப்பொருட்களை உணவாக தேவையான                         நேரத்தில் பொருளாதார வசதிக்கேற்ப‌ உட்கொள்கின்றான். உயிரை வளர்ப்பதாக கூறி தன் வயிற்றை வளர்ப்பவர்களும் அதில் உண்டு. இஸ்லாம் அரபு மாதங்களில் ஒன்பதாவது மாதத்தை புனித ரமளானாக்கி அதை மனிதர்கள் காலை முதல் மாலை வரை உணவு, நீரின்றி பசித்திருந்து உணவு, குடிநீரின்றி அன்றாடம் வாடும் எத்தனையோ வரியவர்களின் சொல்லாத்துயரங்களையும், வேதனைகளையும் உள்ளவர்களும் உணரச்செய்ய வேண்டி ஒரு மாத காலம் இறைவன் இந்த சிறந்த ஏற்பாட்டை முந்தைய சமுதாயங்கள் போல் கடைசி மனித சமூகம் வரை வர இருக்கும் அனைவருக்கும் கட்டாயக்கடமையாக‌ ஏற்படுத்தித்தந்துள்ளான்.

மற்ற பிற மாதங்களுக்கு இல்லாத தனிச்சிறப்பை இம்மாதத்திற்கு வழங்கி உள்ளான். மாமறை திருக்குர்'ஆன் இறக்கப்பட்டது முதல் மனிதன் மனிதனாக வாழ தேவையான எல்லா வாழ்க்கைப்பாடத்தையும் எம்பெருமானார் நபி ஸல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூலம் நமக்கு கற்றுத்தருகிறான்.

அல்ஹம்துலில்லாஹ் நாமும் அந்த புனித மாதத்தில் பயணித்து வருகின்றோம். மார்க்கம் முறையே போதித்தது போல் நாமும் அதிகமதிகம் நற்கருமங்களையும், நல்ல பல அமல்களையும் செய்து ஈருலக பாக்கியங்கள் எல்லாவற்றையும் நம்மை படைத்தவனிடமே சன்மானமாக பெற்றிடுவோம் இன்ஷா அல்லாஹ்...

நோன்பு திறக்கும் சமயம் நாம் காலையிலிருந்து மாலை வரை பசித்திருந்து, தாகித்திருந்து வரும் உடல் மற்றும் மனச்சோர்வை போக்க உடலுக்கு (தற்காலிக) உடனடி சக்தி தருவதாக சொல்லப்படும் பல செயற்கையான‌ வேதியியல் பொருட்களால் உருவாக்கப்படும் குளிர்பானங்கள் (பைசன், ரெட் புல், பவர் ஹார்ஸ் போன்ற) உடலுக்கு பல பக்க விளைவுகளை குறிப்பாக நுரையீரல், சிறுநீரக கோளாறுகளையும் இன்ன பிற உடல் உபாதைகளையும் தருவதாக அறிவியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்து அதை தவிர்க்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறார்கள். ( அரபு நியூஸின் ஆங்கிலக்கட்டுரை) (நம்மூரில் பெரும்பாலான வீடுகளில் இஞ்சை தட்டிப்போட்டு காய்ச்சப்படும் தேத்தண்ணி தரும் உடனடி சுறுசுறுப்பையும், விறுவிறுப்பையும் அவர்கள் அறியமாட்டார்கள் போலும்).

நோன்பு திறக்கும் சமயம் நம்மில் பெரும்பாலானோர் (ஆக்கப்பொறுத்தவன் ஆரப்பொறுக்க வில்லை) என்று பெரியவர்கள் சொல்வது போல் காலையிலிருந்து பொறுமையுடனும், சகிப்புத்தன்மையுடனும் பல நல்ல அமல்கள் செய்து விட்டு நோன்பு திறக்கும் சமயம் பல விசயங்களில் பொறுமை இழந்து விடுகிறோம். எளிதில் கோபம் வந்து விடுகிறது. நோன்பு திறக்கும் சமயம் வாகன ஓட்டிகளுக்கு கோபம் இன்னும் அதிகமாக வருகிறது. அதனால் பல விபத்துக்கள் அரபு நாடுகளில் அன்றாடம் நடந்து வருவதாக‌ சமீபத்திய ஓர் ஆய்வு தெரிவிக்கின்றது.

நம் மார்க்கம் இஸ்லாம் எக்காலத்திற்கும் அறிவியலோடு ஒத்துப்போகக்கூடிய மற்றும் அறிவியலே வியந்து தன் மூக்கில் கைவைக்கும் அளவுக்கு பல பொக்கிஷத்தகவல்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

இஸ்லாத்திற்கு விரோதமான சக்திகள் சொல்வது போல் இஸ்லாம் ஒரு கண்மூடித்தனமான, காட்டுமிராண்டியான மார்க்கமாக இருந்திருந்தால் தன் கட்டாயக்கடமையான புனித ரமளான் நோன்பை பச்சிளம் குழந்தை முதல், சிறுவர், சிறுமியர், தீராத நோயுடையோர், மாதவிடாய் பெண்கள், புத்தி சுவாதீனமானவர்கள், தாய்ப்பால் புகட்டும் தாய்மார்கள் என எல்லோரையும் கட்டாயம் பிடிக்க கட்டளையிட்டிருக்குமல்லவா? நிச்சயமாக இஸ்லாம் மனிதன் தன் சக்திக்கு அப்பாற்பட்டு எதையும் செய்ய ஒரு போதும் ஏவியதில்லை..

சிந்திப்போமாக....

ந‌ம் எல்லோரையும் அல்லாஹ் பாதுகாப்பானாக, நம் எல்லா நல்லமல்களையும் ஏற்றுக்கொள்வானாக....ஆமீன்....

--மு.செ.மு. நெய்னா முஹம்மது.
Source : http://adirainirubar.blogspot.com/2010/08/blog-post_22.html

Saturday, August 21, 2010

3000 வருட ஹிஜ்ரி நாட்காட்டி (எக்ஸெல் மெ

From:    Faizur Hadi
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அன்பான சகோதர சகோதரிகளுக்கு,

3000 வருடத்திற்கான ஹஜ்ரி நாட்காட்டி எக்ஸெல் பக்கத்தில் இணைத்து செயல்படுத்துவதற்கு வசதியாக இம்மென்பொருள் உறுவாக்கப்பட்டுள்ளது.

ஹிஜ்ரி 1431 ரமளான் அன்பளிப்பாக இதை  மனித சமுதாயத்திற்கு வழங்குகிறோம்.

இதை  எல்லா மொழி பேசும் மக்களும் உபயோப்படுத்தும் வகையில் நீங்கள் உலகத்தில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும். 

இதில் குறைபாடுகள் இருந்தால் தெரிவிக்கவும்.

நமது இணையத்தளத்தில் எக்ஸெல் பக்கத்தில் இணைக்கும் முறைகளுடன்

http://lunarcalendar.in/?p=1086

நேரடி தளம்
http://coachexcel.webs.com/downloads.htm

இப்படிக்கு
நிர்வாகி
இந்திய ஹிஜ்ரி கமிட்டி

LinkWithin

Related Posts with Thumbnails