அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்;
-2:29. குர்ஆன்
குழந்தை இவ்வுலகில் வர இறைவனது அருள் வேண்டும். அந்த எல்லாம் வல்ல,கருணை மிக்க எங்கும் நிறைத்த இறையோனைப் பற்றி தெரித்துக் கொள்ள சிறந்த ஆசிரியர் தேவை. அந்த ஆசிரியர் இறைபக்தி உடையவராக இருப்பது நல்லது .
முதலில் இறைவனது பெயரைச் சொல்லியும் அவனது அருள் நாடியும் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...குழந்தைக்கு பெயர் சூட்டுவதோடு தாய் தனது பாலை தன் குழதைக்கு ஊட்டிவிடுகின்றாள். அது தொடர்கின்றது அதுவே அந்த குழந்தை இறைவனின் பெயரைச் சொல்ல ஆரம்பிக்கின்றது .
கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம், என்று அவர்கள் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக்கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள். -3:7.-குர்ஆன்
அந்த குழந்தை வளர வளர ஒரு ஆசிரியர் அதற்கு அவசியம் தேவைப்படுகிறது. இந்த உலகில் இறைவனைப் பற்றியும் அவனது படைப்புகளின் ஆற்றல் அறிய வருகின்றான் .கல்வயின் மீது நாட்டம் கொள்கின்றான்
“இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!” என்றும் நீர் பிரார்த்தனை செய்வீராக! 20:114.-குர்ஆன்
என்ற திருமறையின் வார்த்தையை மனனம் செய்து அதன் நம்பிக்கையோடு படிக்கும் போது அவனது கல்வி அறிவு வளர்சியடைகின்றது
எது நல்லது எது கெட்டது என்பதனை தெரிந்து நல்லது நாடி கெட்டதை விட்டு விலகி வாழ முயல்கின்றான். அந்த ஆசிரியரும் ,தாயும்,தந்தையும் மற்றும் உடன் இருப்போரும் நல்லவர்களாக இருந்து விடும்போது அவனது வாழ்வும் சிறப்படைகின்றது . அதுவே மாற்றமாக இருக்க நேரிட்டால் அனைத்தும் கெட்டு அவனது வாழ்வு மோசமாகிவிடும் . அதனால் நாம் ஆசிரியரை தெரிவு செய்வதில் கவனம் தேவை.
'
நம் வாழ்வு உயர்வாக அமைய சிறந்த ஆசிரியர் அவசியம் தேவை.
தான் பெற்ற அறிவை மற்றவருக்கு ஏற்றி வைத்தவர் உங்களில் உயர்ந்தோர் - நபி மொழி
மனிதனுக்கு அறிவை தந்த இறைவன் தனி மனிதனுக்குள் அடைத்து வைக்காமல் மற்றவருக்கும் பகிர்ந்தளிப்பதையே விரும்புவான். அது தேடிக் கிடைக்கும் போது சிறப்பாக அமையும் .
எப்படி கற்பது
கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக - திருக்குறள்
கற்றுக் கொடுப்பவர் எப்படி இருக்க வேண்டும்
விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.- திருக்குறள்
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்.- திருக்குறள்
தாயின் மகிழ்வு
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.( குறள் எண் : 69 )
விளக்கம்
மு.வ : தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.
வார்த்தைகளால் வருணிக்க முடியாத வகையில் அழகிய பண்புகளையும், சிறந்த குணங்களையும் கொண்டவர்களாக நபி (ஸல்) திகழ்கிறார்கள்.
வார்த்தைகளால் வருணிக்க முடியாத வகையில் அழகிய பண்புகளையும், சிறந்த குணங்களையும் கொண்டவர்களாக நபி (ஸல்) திகழ்கிறார்கள்.
மு.வ : தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.
1 comment:
கருத்துகள் செறிந்த பதிவு. ரசித்தேன்.
Post a Comment