Thursday, September 4, 2014

தர்மங்கள் .........புண்ணியங்கள் ...கையறிந்து கொடுத்தால்..

சற்று முன் ...
தோஹா விலிருக்கும் என் நண்பன் போன் செய்தான் ..அதாவது

அவன் ஒரு காரியத்தை நாடியிருந்ததாகவும் அது நடந்து விட்டால் குறிப்பிட்ட பணம் தர்மம் செய்ய நினைத்திருந்ததாகவும் ...இன்று அது நடந்து விட்டதால் நினைத்தபடி தர்மம் செய்ய வேண்டும் அதுவும் இங்கேயே........ஆகயால் யாருக்கு கொடுக்கலாம் ஆலோசனை சொல் ....என்று ...

நான் சொன்னேன் நல்லவேளை நீ கேட்டாய் .....சரி கேள்

ஞாயிறு முதல் வியாழன் வரை தோஹா சிட்டியில் ஆபீஸ்கள் இருக்கும் தெருக்கலில் நீ காரில் போய் ஒரு ரவுண்டு பார் ...அங்கே தோளில் லேப்டாப் பேக் கோடு கையில் பைலுமாக பஸ்ஸூக்காகவும் நடையுமாக சிலர் இருப்பார்கள் நடந்து கொண்டிருப்பார்கள் குறிப்பாக நமது இந்தியர்கள்...அவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக பிரித்து கொடு ..புண்ணியமாயிருக்குமென்றேன் .......அவனுக்கு புரியவில்லை
ஆமாடா ....அவர்கள் தான் ப்ரீ விசாக்களில் வந்து வேலை தேடி அலையும் கை கொடுக்க ஆளில்லா அனாதைகள் வேலை கிடைக்கும் வரை.......என்றேன் .....இப்போது அவனுக்கு புரிந்தது.

உண்மைகள் ..இதெல்லாம் நானும் 2003 ல் ரியாத்தில் அனுபவித்ததாச்சே .............வாழ்க்கையில் சில விஷயங்கள் மறக்க முடியாதவை அதில் இதுதான் முக்கியமானது..ஆம்

அவர்கள் எங்காவது தங்கி விடுவார்கள் ஆனால் வயித்துக்கு உண்பார்களா தெரியாது அது அவர்களுக்கும் அவர்களின் இறைவனுக்குமே (கடவுளுக்குமே) தெரிந்த விஷயம்.

தர்மங்கள் .........புண்ணியங்கள் ...கையறிந்து கொடுத்தால்..
-----------------------
அவர்கள் யாரிடமும் யாசகம் கேட்க மாட்டார்கள் நடுத்தரவாதிகள் மானம் காப்போர் ........அதே நேரம் நாமாக கொடுத்தால் அதை மறுக்கும் நிலை அப்போது அவர்களுக்கிருப்பதில்லை தான்

 

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails