மறக்க நினைப்பதே நெஞ்சில்
நிறைந்து நிற்கும்
கொஞ்சம் கொஞ்சமாக
செய்ய ஆரம்பித்த செயைகளே
மடியும் வரை தொடரும்
கொஞ்சம் கொஞ்சமாக
சேமித்த பொருளே
செல்வமாக செழித்தோங்கும்
கொஞ்சம் கொஞ்சமாக
ஆரம்பிக்கும் ஆரோக்யமற்ற போட்டிகளே
பொறாமையாக மாறும்
கொஞ்சம் கொஞ்சமாக
ஏறும் விஷம் போன்ற எதிமறை எண்ணங்கள்
முன்னேற்றத்தை கொல்லும்
கொஞ்சம் கொஞ்சமாக
நீருட்டப் பட்ட பயிர்
முழு விளைச்சல் தரும்
கொஞ்சம் கொஞ்சமாக
தினமும் வாசிக்கும் பழக்கம் பெரும் காவியங்களையும் மனனம் செய்யத் தூண்டும்
கொஞ்சம் கொஞ்சமாக
செய்யும் தருமம்
தக்க சமயத்தில்
உயிர்காக்கும்
கொஞ்சம் கொஞ்சமாக
தினமும் செய்யும் இறைவணக்கம்
சுவர்க்கம் கொண்டு சேர்க்கும்.
ராஜா வாவுபிள்ளை ---------------------------------
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:"நற்செயல்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானது எது?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் "(எண்ணிக்கையில்) குறைவாக இருந்தாலும் (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே"என்று விடையளித்தார்கள்.
ஸஹீஹ் புகாரி ஹதீஸ் 1434.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நற்செயல்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானது (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே ஆகும். அது (எண்ணிக்கையில்) குறைவாக இருந்தாலும் சரியே.
ஸஹீஹ் புகாரி ஹதீஸ் 1436.
No comments:
Post a Comment