Friday, January 12, 2018

சீன இஸ்லாமிய கழகம்

Aashiq Ahamed




படத்திற்கு நன்றி: தைவான் நியுஸ் ஊடகம்.
சீன இஸ்லாமிய கழகம், தன்னுடைய 80-ஆம் ஆண்டு நிறைவு தினத்தை ஒட்டி ஒரு வித்தியாசமான நிகழ்வை, தைவானின் தைபே நகரில் இருDecember 23, 2017 தினங்களுக்கு முன்பாக தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியை தைபே நகர சுற்றுலா கழகமும் இணைத்து நடத்துகிறது. இந்நிகழ்வுக்கு பெயர் "இஸ்லாமிய மார்கெட்". இஸ்லாமிய மார்க்கம் வேகமாக பரவியதற்கான காரணம், உலகின் பல்வேறு கலாச்சாரங்களையும் எளிதில் அது அரவணைத்துக் கொண்டதே ஆகும். இதனை பறைச்சாற்றும் விதமாகவே இந்நிகழ்ச்சி அமைக்கப்பட்டிருக்கிறது.

சுமார் 60 நாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள முஸ்லிம் வியாபாரிகள், தங்களின் விற்பனை பொருட்கள் மூலம் அவர்களின் கலாச்சார பின்னணியை பார்வையாளர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். மேலும் இஸ்லாம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரமும் மேற்கொள்ளப்படுகின்றது. 'தைவான் நியுஸ்' ஊடக செய்தியின்படி, இந்த கண்காட்சி அதிகப்படியான மக்களை கவர்ந்துதிழுத்துள்ளது. பலரும் ஆர்வமுடன் பங்கேற்று விபரங்களை பெறுவதாக அந்த ஊடகம் மேலும் தெரிவிக்கின்றது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகள்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails