இந்த பிரபஞ்சம் மிகப் பெரியது அது விரிவடையச் கூடியது. அதுபோல உங்கள் ஆழ்மனம் மிகப்பெரியது விரிவடையச் கூடியது அதுமட்டுமல்ல பிரபஞ்சத்திடம் எதையும் பெறக்கூடிய சக்தி உங்கள் ஆழ்மனதிற்கு உண்டு.
இந்த பிரபஞ்சத்திடத்தில் உங்கள் ஆழ்மனம் எதுகேட்டாலும் உங்களுக்கு கொடுக்கும் அது நல்லது கெட்டது என்று அது பார்க்காது. நீங்கள் வாழ்கின்ற வாழ்க்கையை வைத்து புரிந்து கொள்ளுங்கள் உங்கள் ஆழ்மனதில் எப்படி வாழ்ந்து வருகிறீர்கள் அந்த வாழ்க்கை மூலம் எதைக் கேட்டு பெற்று இருக்கிறீர்கள் என்று.
فَمَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَّرَهٗ
ஆகவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர், (அங்கு) அதனையும் கண்டுகொள்வார்.
وَمَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَّرَهٗ
(அவ்வாறே) எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தானோ, அதனையும் அவன் (அங்குக்) கண்டுகொள்வான்.
(அல்குர்ஆன் : 99:7,8)
வருமையான வாழ்க்கை என்பது அது ஒரு மனநோய்; உங்கள் மனம் சின்னதாக ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக அது பெரிய வருமை நிலையில் இருக்க வைத்து விடும். ஏனென்றால் ஒரு ஏழை ஏன் ஏழ்மை நிலையில் காலம் முழுவதும் இருக்கிறார் ?. செல்வேந்தர் ஏன் அவர்கள் செல்வம் தொழில் விரிவடைந்து கொண்டே போகிறது ஏன் ?. ஏழை ஒவ்வொரு நாளும் தனக்கு கிடைக்கும் வருமானம் போதும் என்று பொருந்திக் கொண்டு நிறுத்தி விடுகிறார். ஆனால் செல்வேந்தர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு நிமிடமும் தனது தொழிலை வேண்டும் வேண்டும் என்று விரிவடையச் செய்துக் கொண்ட போகிறார் இதுதான் ஒவ்வொருவரின் ஆழ்மதின் வாழ்க்கையின் வெளிப்பாடு. இதில் இன்னோரு விஷயம் என்னவென்றால் பணம் சேமிப்பு சேர்ப்பது பாவமான காரியம் என்று சிறு வயதிலேயே இருந்து சொல்லி சொல்லி மனதில் பதிய வைத்து இருக்கிறார்கள் அதனால்தான் ஏழ்மையான வாழ்க்கை புனிதமானது என்று ஏழ்மையை மிகவும் கஷ்டமாக வாழ்கிறார்கள்.
وَمِنْهُمْ مَّنْ يَّقُوْلُ رَبَّنَآ اٰتِنَا فِى الدُّنْيَا حَسَنَةً وَّفِى الْاٰخِرَةِ حَسَنَةً وَّ قِنَا عَذَابَ النَّارِ
அன்றி "எங்கள் இறைவனே! எங்களுக்கு நீ இம்மையிலும் நன்மை அளிப்பாயாக! மறுமையிலும் நன்மையளிப்பாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் எங்களை நீ பாதுகாப்பாயாக!" எனக் கோருபவர்களும் மனிதர்களில் உண்டு.
(அல்குர்ஆன் : 2:201)
மேலே கூறிய இறைவசனத்தை நல்லா கவனிக்க உங்களுக்கு புரியும். உலக வாழ்வாகட்டும் அல்லது மறுவுலக வாழ்வாகட்டும், அக வாழ்வாகட்டும் புற உலக வாழ்வாகட்டும் நீங்கள் விரிவடைந்தால் மட்டுமே உங்களால் வெற்றி பெற முடியும்.
رَبَّنَآ اٰتِنَا فِى الدُّنْيَا حَسَنَةً وَّفِى الْاٰخِرَةِ حَسَنَةً وَّ قِنَا عَذَابَ النَّارِ
""ரப்பனா ஆதினா fபித்துன்யா ஹஸனதவ் வfபில் ஆகிரதி ஹஸனதவ் வ கினா அதாபன்னார்""
உங்கள் வாழ்க்கையில் வறுமையை வெற்றி பெற ஒவ்வொரு நாளும் அதிகாலையிலும் மாலையிலும் தொடர்ந்து ஓதி வாருங்கள் தண்ணீரில் ஓதி ஊதி வீடு அல்லது கடைகள், ஆபிஸில் தெளித்து விடுங்கள் இன்ஷா அல்லாஹ் வருமை நிலை மாறும்.
உங்கள் ஆழ்மனதில் ஏழ்மையான வாழ்க்கையை மாறி அமையுங்கள். உங்கள் வெளியே மாற்றம் ஏற்படும்.
மௌலவி கலீfபா
அஹமது மீரான் சாஹிப்
உஸ்மானி ஆலிம்
கலீபத்துல் காதிரி வஷத்தாரி
(தல்ஸமாத்)
மேலப்பாளையம்
திருநெல்வேலி
No comments:
Post a Comment