அன்பான இஸ்லாமிய உறவுகளே...
உங்களது முஹல்லாவில் உங்களது தீனுடைய காரியங்களுக்காக உங்களுக்காகவே அயறாது உழைத்துக் கொண்டிருக்கும் தியாகிகளான உங்களது பள்ளிவாயல் இமாம்கள், முஅத்தின்களுக்காக ரமழான் மாதத்திலாவது உங்களால் வழங்கப்படும் ஹதியாக்கள் உரிய முறையில் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதில் உங்களிடம் இருவேறு கருத்துக்கள் இல்லையென்றே நினைக்கின்றோம்.
என்றாலும் (சில) பள்ளிவாயல் நிருவாகிகள் அவ்வாறு அவர்களுக்காகவே சேரும் ஹதியாக்களை பள்ளிவாயல் பைதுல்மாலில் சேர்த்து விடுகின்ற பல வேடிக்கையான/கவலையான/கசப்பான/தந்திரமான நிகழ்வுகளும் சமகாலத்தில் சிற்சில இடங்களில் நடைபெறாமலில்லை!!!
வருடம் முழுவதும் கஷ்டப்பட்டு கிடைக்கின்ற ஊதியத்தில் வாழ்வாதாரத்தை மிகவும் கஷ்டத்தோடு வாழ்க்கையை ஓட்டிச் செல்லும் இவர்களுக்காக வருடத்தில் ஒரு முறையாவது சேருகின்ற ஹதியாக்களை முழுமையாக ஒப்படைக்க ஏன் தடையாக இருக்கிறார்கள்? என்பதுதான் வருத்தமாகவுள்ளது.
எனவே ஊர் ஜமாஅத்தினர்கள் மனமுவர்ந்து வழங்குகின்ற ஹதியாக்களை உங்களது இமாம்கள், முஅத்தின்கள் அகமகிழ கொடுத்து உதவலாமல்லவா???
ஹதியாக்களாக சேரும் பணத்தை பைதுல்மாலில் சேர்ப்பது பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?
இது கூடுமா???
எனவே வருடத்தில் வரும் ரமழானிலாவது இவர்களுக்காக சேரும் ஹதியாக்களை கொடுத்து உதவுவோம்!
உங்களது தீனுடைய விடயங்களுக்காக இவர்கள் செய்யும் அற்பணிப்புகளுக்கு உபகாரமாக அவர்களையும் எமது ஸதகா/ஸகாத்தில் கூட்டிணைத்துக் கொள்வோம்.
"அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக"
இப்படிக்கு
*உலமாக்களின் தோழன்*
No comments:
Post a Comment