Sunday, May 20, 2018

நாம் நோன்பு காலத்தில் செய்யும் மாபெரும் தவறுகள்...



நோன்பு வைப்பதே  நம் உள் உறுப்புகளின் ஓய்வுக்காக

11 மாதங்கள் இடைவிடாது வேலை செய்தவைகள் ஒரு மாதம் ஓய்வுபெறவே இம் மாதம் கடமையாகியது 

ஆனால்நாமோ..
வழக்கமாக.3 வேலை 
சாப்பிட்டு வரும் ..
உணவை நோன்பு வைக்கிறேன் என்று

ஸஹரில்..கறி.. கோழி..மீன்.

தயிர்....பழம்... என ஒரு கட்டு கட்டி...
புளித்த ஏப்பம் கொள்ள வைத்து  இப்தார் ..என்ற பெயரில்..பிரியாணி 
எண்ணையில் பொறித்த 
உள்ளே கறி வகைகள் வைத்த சமோசா...வடை..பஜ்ஜி..
வாடா போண்டா
என்ற ...அத்தனை வகைகளையும்..
ஒரு வெட்டு வெட்டி விட்டு...
பற்றா குறைக்கு கூல் ட்ரிங்க்ஸ் என்ற பெயரில்
உடலை குளிர வைக்க தேவையான 

கடல்பாசி (அகர் அகர்.)
பாதாம் பிசின்..
சப்ஜா ..விதை நன்னாரி... ரூஹப்ஸா...
என  குடித்து தள்ளி விட்டு...

இரவுநேரத் தொழுகை.. முடித்த பின் ஒரு சின்ன உணவாக பரோட்டா..கறி... தோசை.. இட்லி..பூரி...என அல்லது ஒரு ஹெவியான சாப்பாடை..
சாப்பிட்டு  விட்டு...
இருப்பது தான் நோன்பா..??

4 வேலை சாப்பாட்டை ..2 வேளைகளில் சாப்பிடுவது தான் நோன்பா..?

ஆரோக்கியமான...
நோன்பு என்றால்...
வயிறு காய்ந்து இருக்க விடணும்...
அதற்க்கு ஸஹர்...உணவை அளவோடு...சாப்பிடணும்
கண்டிப்பா..

கொஞ்சமாக சாப்பிட்டு.. ஓர் ஆப்பிள்...3 பேரீச்சை பழம்  தண்ணீர்.... மட்டும்... குடித்து நிய்யதை அல்லாஹூக்காக நோன்பு வைக்கிறேன் என்று மனதில் நினையுங்கள் போதும் .அல்லாஹ் எல்லாம் அறிந்தவன்
அவ்வளவாக வாய் நாற்றம் இருக்காது..

தயிர் சாப்பிட்டால்..வயிறு குளிர்ந்து விடும்..

வயிறு சூட்டில் காயனும்.
என்பதே..நோன்பின் முக்கிய  செயல்..

காய்ந்த  வயிற்றில்..
நோன்பு திறந்ததும்
எளிதாக ஜீரணிக்க...நம் முன்னோர்கள் 
செய்ததே...நோன்பு கஞ்சி...

அதாவது.
வெறும் அரிசியை குழைவாக வேக வைத்து வெந்தயம் ...சேர்த்து..பூண்டு சேர்த்து....கறிவேப்பிலை சீரகம் சேர்த்து கொஞ்சம் தேங்காய் சேர்த்து .

பண்ணும் கஞ்சி தான் நோன்பு கஞ்சி ..யாகும்
சில பணக்கார முஸ்லீம் ஊர்களில்..

பிரியானிக்கு போடும் அத்தனை பொருட்களையும்
போட்டு கஞ்சி யாக்கி...
அதையும் வாய்க்கு ருசியாக செய்து சாப்பிட பழக்கி யதும்
அல்லாமல்...
அதை சென்னை யில் பிரபல படுத்தி இப்பொழுது 
எல்லா ஊர் களிலும்
நோன்பு கஞ்சி என்பதை 
"தண்ணி பிரியாணி"
ஆக்கி விட்டார்கள்...

இதை காய்ந்த வயிற்றில்  குடிப்பது மிக மிக கெடுதல்....
நோன்பு திறந்ததும்

சர்க்கரை....
பால்..கலக்காத ....
ஒரு லிக்விட் ஜுஸ்
எலுமிச்சை..அல்லது ஆரஞ்ச் 
அல்லது...மாதுளை
என ..
சாப்பிடுவது மிக மிக ஏற்றது.
காரட்...புதினா.
எலுமிச்சை...பீட்ரூட் 
போன்றவை சாரு பிழிந்து சில.துளி.எலுமிச்சை.சாரு விட்டு தேன் கலந்து .

2 குவளை சாப்பிட்டு விட்டு
மஹ்ரிப் தொழுது விட்டு 
1 மணி நேரம்.கழித்து 
சாலிட்...உணவு ஏதாவது அளவாக சாப்பிட்டு விட்டு.
இரவுநேரத் தொழுகை தொழுத பின் பசித்து வந்தால் மட்டும் ஒரு குவளை பால்.அல்லது 

நோன்பு திறந்து 
வெறும் பழ சாறு அருந்தி 
1 மணி நேரம் கழித்து
சாப்பிடுங்கள் ரப்பு
சொன்ன நோன்பின்
நோக்கம் நிறைவேறும்
ஆரோக்கிய த்தால்.

இந்த நோன்பில்
இருந்தாவது
பணக்கார முஸ்லீம்
ஊர் களின் பழக்கத்தை .
கை விட்டு பாருங்கள்
வயிறு பசியுடன் இருந்து அமல் செய்யும் போது

இறை சிந்தனை.. தெளிவாகஆகும்...
புது புது....அறிவுகள்
ரப்பின் சிந்தனைகள்
தோற்றுவிக்கும்
என்பது உறுதி..

உங்க பிள்ளைகளை
இந்த முறையில்
நோன்பிருக்க..
பழக்கி விட்டால்
இல்லங்கள் சிறக்கும்

*இன்ஷா அல்லாஹ் இந்த வருடம் முழு ரமாலானின் பாக்கியத்தை நாம் அனைவரும் அடைய இறைவன் நமக்கு  அருள்புரிவானாக ஆமீன்*

*இதை முழுமையாக படித்து  முடித்தவர்கள் உங்கள் நண்பர்களுக்கும்  , உறவினர்களுக்கும் இன்ஷா அல்லா  அதிகபடியாக சேர் செய்யுங்கள் பயன் அடையட்டும். உங்களுடைய துவாவில் என்னையும்  , என் குடும்பத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள் சகோதரர்களே , சகோதரிகளே மறந்துவிடாதீர்கள்....*

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails