Showing posts with label கணவன்-மனைவி. Show all posts
Showing posts with label கணவன்-மனைவி. Show all posts

Sunday, September 4, 2011

கணவன்-மனைவி" உனக்குள் ஒரு சுரங்கம் -நீடூர். S.A.மன்சூர் அலியுடன் நேர்காணல்

கணவன்-மனைவி" உனக்குள் ஒரு சுரங்கம் -
நீடூர். S.A.மன்சூர் அலியுடன் நேர்காணல்.
நீடூர். S.A.மன்சூர் அலியுடன் நேர்காணல் - by: ஹாஜி.S.அக்பர் அலி

நீடூர் மன்சூர் அலி M.A., B.Ed., அவர்கள் சென்னை வண்டலூர் கிரஸன்ட் மேல் நிலைப்பள்ளியில் இஸ்லாமிய பாடவியல் (Islamic Studies) ஆசிரியராகவும், மாணவர் நல ஆலோசகராகவும், மனித வள மேம்பாட்டுப் பயிற்சியாளராகவும் பணியாற்றியவர்.

மன்சூர் அலி அவர்கள் தி கார்டன் அகாடமி (The Garden Academy)Please visit :http://www.thegardenacademy.in/) எனும் மனித வள மேம்பாட்டுக் கல்வி நிறுவனத்தை நடத்தி வருகிறார். மேலும் கல்வி நிறுவனங்களின் அழைப்புகளை ஏற்று, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு மனித வள மேம்பாட்டுப் (Human Resource Development) பயிற்சி அளித்து வருகிறார்.

S.E.A. முஹம்மது அலி ஜின்னா
Jazakkallahu Hairan
நன்றி : http://niduronline.com/

Tuesday, March 1, 2011

அளவற்ற அருளாளன் .. நிகரற்ற அன்பாளன்.

  by டாக்டர் ஹிமானா சையத்
"அல்லாஹ்வை அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன்"
என்கிறோம். என்றாலும் மனித மனம் அந்த அளவு என்ன? என்று அளந்து
பார்க்க முயல்வது இயல்புதானே? அந்த வகையில் உங்கள் விளக்கம் என்ன? " என்று கேட்டார் நண்பர்.

   "எந்த அளவுகோலைக் கொண்டு அளந்து பார்க்க நினைக்கிறீர்கள்?
மனிதன் படைத்த  ஸ்கேல், தராசு இவற்றாலா? அல்லது பிற அளவுகோல் கருவிகளின் துணையுடனா? " என்று அவரிடம் திருப்பிக் கேட்டேன்.

அவர் பதில் சொல்லாமல் புன்முருவலுடன் என்னையே கூர்ந்து நோக்கினார்.

  பதில்பெறத்துடிக்கும் மாணவனின் துடிப்பையும்,ற்றுத் தர முனையும் ஆசிரியர் ஒருவரின் முனைப்பையும் ஒரு சேர அவரது கண்கள் என்னுள் பாய்ச்சின.என் கிளினிக்கில் சில வாரங்களுக்கமுன் நிகழ்ந்த ஒரு உரையாடல் சம்பவம் என் நினைவுக்கு உடனே வந்தது.
  வெளிநாட்டில் தொழில் புரியும் என் நண்பர் அவர். அவரது மனைவியின்
உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து தாயகம் வந்திருந்தார். என் பரிந்துரையில் மதுரை, சென்னை நகரங்களுக்கு விரிவான மருத்துவ ஆய்வுகளுக்கும் சிகிச்சைக்கும் சென்றுவிட்டு இரண்டு மாதங்கள் கழித்து சிறப்பு மருத்துவ நிபுணர்கள் கொடுத்த இரண்டு பெரிய கோப்புகளைச் சுமந்து கொண்டு அவர் வந்திருந்தார். அவரது மனைவிக்கு சிறுநீரகக் கோளாறு. ரத்தத்திலிருந்து உடலுக்குத் தேவையற்ற -அப்படித் தங்கினால், தீமை விளைவிக்கும் நச்சுப் பொருட்களை அப்புறப்படுத்தும் தனது
தலையாய பணியிலிருந்து இரண்டு சிறுநீரகங்களும் முற்றிலுமாகத்
தவறிவிட்டன. நோயாளி உயிர்வாழ வேண்டுமானால், அந்த நச்சுப்
பொருட்களை செயற்கையாக வெளியேற்றியாக வேண்டும். வாரம்
இருமுறை அல்லது மும்முறை!
  "ஒரு முறை அப்படி நச்சுப் பொருட்களை வெளியேற்றும் சிகிச்சை செய்து கொள்வதற்கு கிராமத்திலிருந்து அருகிலுள்ள மதுரை நகருக்குச் சென்று வர எவ்வளவு செலவு பிடிக்க்லாம்? " நண்பர் கேட்டார்.

Thursday, February 3, 2011

இல்லற வாழ்வில் புரியாத பாஷை


கணவன்-மனைவிக்கிடையில் நடைபெறும் சில உரையாடல்களும், பேச்சுக்களும் மறுதரப்பால் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகின்றன. ஒருவன் பாவிக்கும் ஒரு வார்த்தை, அதை அவன் உச்சரிக்கும் தொணி, பேசும் நேரம், அதன் போது அவன் வெளியிடும் உணர்வு என்பவற்றுக்கு ஏற்ப அர்த்தம் மாறுபடும். இது இயல்பானதுதான். ஆனால் கணவன் அல்லது மனைவி பேசும் போது அவர் பேசும் பேச்சுக்கு அல்லது வார்த்தைக்குத் தவறான அர்த்தத்தை ஒருவர் எடுக்கும் போது இல்லறத்தில் கலவரம் மூழ்குகின்றது.
இதைப் புரிந்துகொள்ளப் பின்வரும் ஹதீஸை முழுமையாகப் படியுங்கள்!
அபூபக்கர்(ரலி) அவர்களது மகன் காசிம் (ஆயிஷா(ரலி) அவர்களின் சகோதரர்) அறிவிக்கின்றார்கள்;
(ஒருமுறை கடுமையான தலைவலியினால் சிரமப்பட்ட) ஆயிஷா(ரலி), “என் தலை(வலி)யே!” என்று சொல்ல, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், “நான் உயிரோடிருக்கும் போதே உனக்கு அது (இறப்பு) ஏற்பட்டு விட்டால் உனக்காக நான் (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புக் கோரி உனக்காக (மறுமை நலன் கோரிப்) பிரார்த்திப்பேன்” என்று கூறினார்கள். ஆயிஷா(ரலி), “அந்தோ! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் (விரைவில்) இறந்து போய் விடுவதையே நீங்கள் விரும்புகிறீர்கள் என்று எண்ணுகிறேன். நான் இறந்து விட்டால் அந்த நாளின் இறுதியிலேயே (என்னுடைய இல்லம் சென்று) நீங்கள் உங்களுடைய (மற்ற) துணைவியரில் ஒருவருடன் மணவறை காண்பீர்கள். (என்னை மறந்து விடுவீர்கள்)” என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் (புன்னகைத்து விட்டு) “இல்லை (உனக்கு ஒன்றும் ஆகாது.) நான்தான் (இப்போது) “என் தலை(வலி)யே!” என்று சொல்ல வேண்டியுள்ளது. (உண்மையில் உன் மீதும், உன் குடும்பத்தார் மீதும் அதிக மதிப்பு வைத்துள்ளேன். எனவேதான் உன் தந்தை) அபூபக்ருக்கும், அவரின் புதல்வருக்கும் ஆளனுப்பி (வரவழைத்து எனக்குப் பின் என் பிரதிநியாகச் செயல்படும்படி) அறிவித்து விட விரும்பினேன். (தாம் விரும்பியவரைக் கலீஃபா என) யாரும் சொல்லி விடவோ, (தாமே கலீஃபாவாக ஆகவேண்டும் என) எவரும் ஆசைப்பட்டு விடவோ கூடாது என்பதற்காகவே (இவ்வாறு விரும்பினேன்). ஆனால், பின்னர் (அபூ பக்ரைத் தவிர வேறொருவரைப் பிரதிநிதியாக்க) அல்லாஹ் அனுமதிக்க மாட்டான்; இறைநம்பிக்கையாளர்களும் (அதை) ஏற்க மாட்டார்கள் என (எனக்கு நானே) சொல்லிக் கொண்டேன். (எனவேதான் அறிவிக்கவில்லை)” என்று கூறினார்கள். (புகாரி 5666)
மேற்படி நபிமொழியில் நபி(ஸல்) அவர்கள், “நீ மரணித்தால் உனக்காக நான் பிரார்த்திப்பேன்” என்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் கூறுகின்றார்கள். இது கேட்டுச் சந்தோசப்பட வேண்டிய ஆயிஷா(ரலி) அவர்கள் “அந்தோ! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் (விரைவில்) இறந்து போய் விடுவதையே நீங்கள் விரும்புகிறீர்கள் என்று எண்ணுகிறேன். நான் இறந்து விட்டால் அந்த நாளின் இறுதியிலேயே (என்னுடைய இல்லம் சென்று) நீங்கள் உங்களுடைய (மற்ற) துணைவியரில் ஒருவருடன் மணவறை காண்பீர்கள். (என்னை மறந்து விடுவீர்கள்)” என்று கூறுகின்றார்கள். அவர்கள் தலைவலி என்று தனது வருத்தத்தைக் கூறிய போது நபி(ஸல்) அவர்கள் கூறிய சந்தோசமான வார்த்தைக்குத் தவறான அர்த்தத்தை அவர்கள் கற்பிக்கின்றார்கள்.
இது கேட்ட நபி(ஸல்) அவர்கள் ஆத்திரமடையாமல் அமைதியாகத் தனது கூற்றின் அர்த்தத்தையும், அதற்கான காரணத்தையும் விளக்குகின்றார்கள். நபி(ஸல்) அவர்கள், ஆயிஷா(ரலி) அவர்களது வார்த்தையை நூலுக்கு நூல் சட்டப்படி அணுகினால் ஆயிஷா(ரலி) அவர்கள், நபி(ஸல்) அவர்களது இயல்பிலும், குணத்திலும் குறை கூறி விட்டார்கள் என அவர்களுக்கு “வழிகேட்டு” அல்லது “முர்த்தத்” பட்டம் கொடுத்திருக்கலாம்.
ஆத்திரத்திலோ, அவசரத்திலோ அல்லது உள்ளமும், உடலும் நலிந்து போகின்ற சூழ்நிலையிலோ பேசக்கூடிய பேச்சுக்களுக்கெல்லாம் சட்டரீதியான தீர்வு காணமுடியாது.

LinkWithin

Related Posts with Thumbnails