Showing posts with label காட்சி வழித்தொடர்பியல. Show all posts
Showing posts with label காட்சி வழித்தொடர்பியல. Show all posts

Tuesday, May 10, 2011

இன்னமுமா புரியல ? ! - அனுபவம் பேசுகிறது !

அட.. ! நீங்க நினைச்சீங்கள அதேதாங்க..

அந்த காட்சி வழித்தொடர்பியல (Visual Communication) பத்திதாங்க அசலா அசைபோட போறேன்...

என்ன உங்க கூட பேசி ரொம்ப நாள் ஆச்சே, ஊர்ல எல்லாரும் எப்படி இருக்காங்க ?

எல்லாம் நல்லாத்தான் இருக்காங்க தம்பி. அது சரி... சவூதி அரேபியாவிலிருந்து சவுத் இந்தியாக்கு திடீர்னு காத்தடிக்குதே என்ன சங்கதி!?

ஒன்னும் இல்ல  உங்களைலாம் பார்க்க விண்ணைத்தாண்டி வரமுடியாட்டியும் நம் மண்ணின் நிகழ்வுகளை கண் முன் கொண்டுவரும் நமதூர் வலைப்பூக்கள் மூலம் கல்வி மாநாடு நிகழ்ச்சிய பார்த்தேன், பண்ணன்டாம் கிளாஸ் புள்ளயோல்வலெல்லாம் பொது தேர்வு எழுதி இருக்காக. அடுத்து நம்ம புள்ளைய என்ன படிக்க வைக்கிறதுன்னு யோசிக்க ஆரம்பிச்சாடகன்னு தெரியுது.

அதான் இந்த பாழாப்போன 2G 3G சோனியாஜி'ன்னு மக்கள் காஞ்சி போயிருக்கிறத பத்தி பேசாம, நாம படிச்ச காட்சி வழித்தொடர்பியல் பத்தி நம்ம மக்களுக்கு சொல்லி நாடு உருப்படுதோ இல்லையோ நாம உருப்பட வழியபாபோம்கிற நினைப்புல எழுதிகிட்டு இருக்கேன். நீங்க அப்பறமா நம்ம ஊர் வலைப்பூல வந்து பாருங்க .

இப்போ எழுதபோறேன்…..

ஆம்! வாழ்கையில் நாம் ஒவ்வொருவரும் பல காட்சிகளை கண்டிருப்போம்.பல காட்சிகளில் கோர்வைதான் நம் வாழ்கை. நான் கண்ட/கற்ற காட்சி வழித்தொடர்பியல் (Visual Communication) பட்டப்படிப்பை பற்றி ஒரு அலசல் செய்ய ஆசைபடுகிறேன்.

விசுவல் கம்யுனிகேசன் என்று சொன்னவுடன் சிலருக்கு ஞாபகம் வருவது சினிமாதுரைக்கான படிப்பு என்பதுதான். உண்மையில் இதில் சினிமா என்பது பத்தில் இரண்டு பகுதி எனலாம். மேலும் அறிய கீழே படிப்போமே!!

LinkWithin

Related Posts with Thumbnails