அட.. ! நீங்க நினைச்சீங்கள அதேதாங்க..
அந்த காட்சி வழித்தொடர்பியல (Visual Communication) பத்திதாங்க அசலா அசைபோட போறேன்...
என்ன உங்க கூட பேசி ரொம்ப நாள் ஆச்சே, ஊர்ல எல்லாரும் எப்படி இருக்காங்க ?
எல்லாம் நல்லாத்தான் இருக்காங்க தம்பி. அது சரி... சவூதி அரேபியாவிலிருந்து சவுத் இந்தியாக்கு திடீர்னு காத்தடிக்குதே என்ன சங்கதி!?
ஒன்னும் இல்ல உங்களைலாம் பார்க்க விண்ணைத்தாண்டி வரமுடியாட்டியும் நம் மண்ணின் நிகழ்வுகளை கண் முன் கொண்டுவரும் நமதூர் வலைப்பூக்கள் மூலம் கல்வி மாநாடு நிகழ்ச்சிய பார்த்தேன், பண்ணன்டாம் கிளாஸ் புள்ளயோல்வலெல்லாம் பொது தேர்வு எழுதி இருக்காக. அடுத்து நம்ம புள்ளைய என்ன படிக்க வைக்கிறதுன்னு யோசிக்க ஆரம்பிச்சாடகன்னு தெரியுது.
அதான் இந்த பாழாப்போன 2G 3G சோனியாஜி'ன்னு மக்கள் காஞ்சி போயிருக்கிறத பத்தி பேசாம, நாம படிச்ச காட்சி வழித்தொடர்பியல் பத்தி நம்ம மக்களுக்கு சொல்லி நாடு உருப்படுதோ இல்லையோ நாம உருப்பட வழியபாபோம்கிற நினைப்புல எழுதிகிட்டு இருக்கேன். நீங்க அப்பறமா நம்ம ஊர் வலைப்பூல வந்து பாருங்க .
இப்போ எழுதபோறேன்…..
ஆம்! வாழ்கையில் நாம் ஒவ்வொருவரும் பல காட்சிகளை கண்டிருப்போம்.பல காட்சிகளில் கோர்வைதான் நம் வாழ்கை. நான் கண்ட/கற்ற காட்சி வழித்தொடர்பியல் (Visual Communication) பட்டப்படிப்பை பற்றி ஒரு அலசல் செய்ய ஆசைபடுகிறேன்.
விசுவல் கம்யுனிகேசன் என்று சொன்னவுடன் சிலருக்கு ஞாபகம் வருவது சினிமாதுரைக்கான படிப்பு என்பதுதான். உண்மையில் இதில் சினிமா என்பது பத்தில் இரண்டு பகுதி எனலாம். மேலும் அறிய கீழே படிப்போமே!!
பயிற்சி விவரம் :
- Diploma in Visual Communication (6 months)
- B.Sc., Visual Communication (3 years)
- M.Sc., Visual Communication (2 years)
- M.A. Advertising and Public Relation (2 years)
- M.A. Mass Communication and Journalism (2 years)
இப்படிப்பின் 'சபாஷ்(+ve) என்ன? சவால்(-ve)' என்ன? என்பதை பார்போமா?
முதலில் இந்தப்படிப்பைக்கொண்டு எந்தந்த துறைக்கு நுழையலாம், எதையல்லாம் கற்றுக்கொடுப்பார்கள் என்று பார்ப்போம். சாதாரணமாக ஒரு பட்டபடிப்பு படித்தால் அது நம்மை ஒரு துறைக்கோ அல்லது அதிகபட்சமாக மூன்று, நான்கு துறைக்கோ செல்வதற்கு உதவும். ஆனால் இந்தப்படிப்பைகொண்டு பல்வேறு துறையில் கால் பதியலாம்.
அவைகளில் சில :-
- 1. Compeer
- 2. Film Critic
- 3. Editor
- 4. DTP Operator
- 5. Script Writer
- 6. Photographer
- 7. Cinematographer
- 8. film maker (Short film/Documentary/Cinema/Serial)
- 9. Journalist
- 10. Drawing Artist
- 11. 3D Animator
- 12. Web Designer
- 13. Graphic Designer
- 14. Printing Technology
- 15. Copyrighter
- 16. Advertiser
மேலே குரிப்பிடப்பட்டவைகளில் பெரும்பாலானோர் தேர்ந்தெடுப்பது photography, cinematography, film Industry, Graphics / Web / 3D
Designing, Journalism, Advertising. குறிப்பிட்ட துறையில் ஜாம்பவான் ஆவது அவரர் ஆர்வத்திற்கேற்ப அமைத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.
அட..! என்ன ! சட்டுன்னு நாற்காலி நுனில உட்கார்ந்துகிட்டு மானிட்டர முறைச்சு முறைச்சு பார்க்கிறீங்க போல!! ஓஹோ.. மேலும் தெரிஞ்சிக்க ஆசையா இருக்கோ!!
சரி சரி.. 'சட்டு புட்டுன்னு விசயத்துக்கு வாப்பான்னு' நீங்க சொல்றது என் காதுல விழுது.. இதோ உங்களுக்காக..
சபாஷ் (+ve)
- நாளடைவில் ஒருவன் இதை படித்து Journalist ஆனாலும் மற்ற துறைகளை பற்றிய ஞானமும் இருக்கும்.
- ஒவ்வொரு செமெஸ்டர் விடுமுறையிலும் பயிற்சிக்காக நமக்கு விருப்பமான துறையில் அதற்கேற்ற நிறுவனங்களுக்கு சென்று பயிலும் போதே பயிற்சி பெறலாம்
- (ஒருசிலர் பிராஜக்ட் என்ற பெயரில் கல்லூரி பக்கம் எட்டிகூட பார்கமாடார்கள், தேர்வு நாளை தவிர.)
- உதாரணம்: All India Radio, O&M Advertising Agency Visit, Assistant Photographer, Assistant Journalist, Acting, News Reading
- ஆர்வத்தோடு கல்வி கற்கும் முறை.
- அதிகப்படியான துறைகளில் சுயமாக, பகுதி நேரமாக சம்பாதிக்கும் வழிகள் உண்டு.
- உதாரணம்: Web Designing / Logo, Brochure, Business Card Designing, Photography, Videography, etc.,
- படித்து முடித்ததும் நமக்கு போட்டியாக ஆட்கள் குறைவுதான்
- மேல்நிலைப்பள்ளியில் நாம் காமர்ஸ், அறிவியல், கணினி போன்ற எந்த துறையை தேர்ந்தெடுத்து படித்திருந்தாலும் இந்த படிப்பை தேர்ந்தெடுக்க அனுமதி உண்டு.
சவால் (-ve)
- UG படிப்பதற்குகூட PG (Parental Guidance) தேவைப்படும். காரணம் ஹராம்,ஹலாலை பிரித்தெடுத்துக் கூறுவதற்கு.. இப்படிப்பு கொஞ்சம் அப்படித்தான். பொழுதுபோக்கையே ஒரு பிழைப்பாக வைத்திருப்போருக்கு இது வாழைபழத்தை உரித்து வாயில் திணிப்பது போல்தான்.
- நமதூரில் சிலர் (சிலரா? பலரா?) பெருநாள் அன்றுகூட பெரிய (வெள்ளித்) திரைக்கு வெள்ளை வேட்டி உடுத்திக்கிட்டு போகும் கூட்டம் இருக்கிறப்போ இத சொல்லவா வேணும். அவர்களுக்கு இப்படிப்பு பெரிய சினி கோட்டை. (என்னோடு படித்த சிலரிடம் கல்லூரி நூலகத்தில் அவர்கள் எடுத்த புத்தகங்களைவிட பல நூறு மடங்கிற்கு மேல் திரைப்பட சி.டி.க்கள்தான் அதிகம்.)
- ஒரு சிலர் எல்லா துறையையும் அரை குறையாக, ஆற்றில் ஒருகால் சேற்றில் ஒரு கால் என்றமுறையில் கற்று என்னவாகவேண்டும் என்று இறுதி வரை முடிவெடுக்கமுடியாமல் இருக்கும் சூழ்நிலையும் உண்டு.
- இப்படிப்பிற்கு அதிகப்படியான செயல் வடிவ பயிற்சி தேவை என்பதால், இப்படிப்பை தொலைதூர கல்வி மூலம் பயின்றால் வெகு குறைவான அறிவே பெறமுடியும்.
- விரும்பியதை மட்டும் படிக்க உகந்ததல்ல. உதாரணத்திற்கு நிரூபரகவோ, ஓவியராகவோ மட்டும் ஆகவேண்டும் மற்ற பலாய் முசீபத்துகலெல்லாம் நமக்கு வேண்டாம் என்று நினைப்பவர்கள், கலவையாக இருக்கும் இப்படிப்பை படிப்பதற்கு பதில் B. A. Journalism, B. A. Fine Arts போன்ற விரும்பிய தனித்துவ துறைக்கான படிப்பை தேர்ந்தெடுத்து விரும்பிப்படித்து நன்கு தேர்ச்சி பெறமுடியும்.
- என் பிள்ளை 'ஒரே ஊர் சுற்றுகிறான், சினிமாக்கு போறான், காலேஜில 100% வருகை பதிவு வாங்க மாட்டிருக்கான்' என்றெல்லாம் இப்பட்டபடிப்பு ஆசிரியரிடம் நீங்கள் புகார் கூறினால்... உங்களை பட்டப்பகலில் மேலும் கீழும் வேற்றுகிரக வாசியை பார்ப்பதுபோல் பார்த்தாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை. இப்படிப்புகளை கற்றுக் கொடுப்பவர்கள் ஒன்னும் வாவண்ண சாரும், எஸ்.கே.எம்.ஹாஜாமி சாரும் அல்ல. ஹும்ம்.. சீனி விற்பனை செய்கின்ற கடையில் போய் 'என் பையன் அதிகம் சீனி சாபிடுகின்றான் கன்டியுங்கள்' என்று புகார் செய்யும் கதைதான்.
என் கருத்து:
என்னை பொறுத்தவரையில் இப்படிப்பு ஒரு கூர்மையான கத்தியை போல். கத்தியை வைத்து காய்கறி அறிவதும், கழுத்தை அறிவதும் பயன்படுத்துபவரின் மனநிலையை பொறுத்தது. ஆனால், ஜாக்கிரதை இரு முனையிலும் கூர்மை அதிகம்.
WARNING: HANDLE EEMAN WITH CARE
மேலும் தகவல் அறிய பின்னூட்டத்தில்(comments) பின்னி எடுத்தால் அனைவருக்கும் பயனளிக்கும் என நம்புகிறேன்.
இல்லாவிடில் அனுப்புங்க visualmeera@gmail.com என்ற உங்கள் அன்பு சகோதரனின் மின்னஞ்சலுக்கு..
அடுத்து யாரோ அவங்க படிச்சத அலசல் பண்ணுறதுக்கு கச்சல கட்டிக்கிட்டு நிக்கிறதா தெரியுதே!!
சீக்கிரமா வாங்க.. இந்த கல்விக்கான மாதத்தில் உங்களைத்தான் எதிர்பார்த்தோம்.
இப்படிக்கு,
-மு.செ.மு.மீராஷாஹ் ரஃபி அஹமத்
-Web Designer & Digital Media Visualizer
-M.A.Advertising and Public Relation
No comments:
Post a Comment