Thursday, May 5, 2011

உயர் கல்விக்கு உதவி!

டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் தலைமையின்கீழ் இயங்கும் 'இஸ்லாமிக் ரிஸர்ச் ஃபவுண்டேஷன் - Islamic Research Foundation (IRF)", உயர்கல்வி பயில விரும்பும் ஏழை மாணவர்களுக்காக ஒரு கோடி ரூபாயை 2011 - 2012 ஆண்டுக்கான உதவித் தொகையாக அறிவித்திருக்கிறது.

நூறு விழுக்காடு கல்வி உதவித் தொகையான இதைப் பெறத் தக்க மாணவர்களின் தகுதிகள்:
  • மார்க்கப் பற்றாளராகவும் கடமைகளில் பேணுதல் உடையவராகவும் இருக்க வேண்டும்.
  • உயர்கல்வி பயில்வதற்குப் பணம் செலுத்திப் படிக்க முடியாத ஏழ்மை நிலையில் இருக்க வேண்டும்.
  • கல்வியில் மிக்க ஆர்வம் உடையவராகவும் நல்ல மதிப்பெண்கள் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
  • உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி பயின்றவராக இருக்க வேண்டும்.

மேற்காணும் தலையாய தகுதிகள் பெற்ற, மருத்துவம், பொறியியல், கற்பித்தல், நிர்வாகம் ஆகிய துறைகளில் உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்கள் உதவித் தொகை வேண்டி Islamic Research Foundation எனும் சுட்டியிலிருந்து விண்ணப்பத்தைத் தரவிறக்கி, நிரப்பி அனுப்ப வேண்டும்.

தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு 29.5.2011 இல் மும்பை, புனே, பெங்களூரு, சென்னை, டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத், அவ்ரங்காபாத், அகோலா மற்றும் மலேகோன் ஆகிய நகர்களில் எழுத்துத் தேர்வு இருக்கும். அத்தேர்வில் 75 விழுக்காடு வினாக்கள் இறைமறை குர் ஆனின் அடிப்படையில் அமைந்திருக்கும்.

எழுத்துத் தேர்வில் தேறிய மாணவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு, உதவி வழங்கப்படுவர், இன்ஷா அல்லாஹ். கூடுதல் விபரங்களுக்கு :
Source : http://nnassociation.blogspot.com/2011/05/blog-post_05.html

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails