
கணவன் மனைவி உறவு - சண்டை நடந்தாலும் அழகு, சமாதானம் ஆனாலும் அழகு!
கணவன்மார்கள் சண்டை போட்டால் வால், வாலுன்னு கத்திவிட்டு
ரொம்ப நல்ல பிள்ளை மாதிரி வந்து மன்னிப்பு கேட்பார்கள். அவ்வாறு அவர்கள்
மன்னிப்பு கேட்கையில் அவர்கள் செய்யும் சேஷ்டைகளைப் பார்த்தால் சிரிப்பு
தான் வரும். ஆனாலும் பெண்கள் சிறிது நேரம் சிரிப்பை அடக்கிக் கொண்டு,
கோபமாக இருப்பது போல பாசாங்கு செய்வார்கள். உடனே கணவன் கண்ணே, மணியே என்று
கொஞ்சி சமாதானப்படுத்துவார். இதுக்குத் தானே காத்திருந்தேன் என்பது போன்று
பெண் மனம் உருகிவிடும்.
அதே சமயம் தொண தொணக்கும் மனைவி....! "இவ வாய் இருக்கே, எப்பப்
பார்த்தாலும் தொண தொணன்னு யாரையாவது குறை சொல்லிக்கிட்டே இருக்கும்!"
என்று சில பெண்கள் குறித்துச் சொல்வர்கள். அவர்கள் உள்ளுக்குள் பலாப்பழம்
போல இருந்தாலும் வெளியில் முள்ளாகத் தெரிபவர்கள்.
குறிப்பாக கணவரிடம் எப்போது பார்த்தாலும் பிலுபிலுவென சண்டை
பிடித்தபடி இருப்பார்கள் இந்தப் பெண்கள். வாழ்க்கை முழுவதும் தன்னுடன்
வரும் கணவரை குறை சொல்வதில் இதுபோன்ற மனைவிகளுக்கு ஆத்ம சந்தோஷம்.