ஆனாலும் பாரு.. என் சின்னப் பொண்ணு மும்தாஜுக்கு, வீட்டோடு மாப்பிளையா பார்த்து கட்டிக் கொடுத்ததுக்கு பொறவு ஆண்டவனா கண்பார்த்து இவனை கொடுத்தான். எம் பேரன் இவனப் பாக்கிறப்ப, எம் மெவனப் பாக்குற மாதிரியே இருக்கு! அவனோட ஜாடை, நடை, அதே பேச்சு, புத்தியெல்லாம்கூட அப்படியப்படியே இருக்குதுன்னா பாத்துகியேன்!
*
சமயங்கல நினைச்சுப்பார்த்தா திக்குங்குது. இந்த துனியாவுல எல்லாம் ஹொதரத்தாதான் இருக்கு போயேன்! அல்லாதான் இவனுக்காவது நல்லப் புத்திய கொடுத்து நீடித்த ஆயுசயும் நிறைஞ்ஜ பரக்கத்தையும் கொடுத்து காவந்துப்பண்ணித் தரணும்."