Monday, November 17, 2014

'பெருநாள் காலை' - தாஜ்:

ஆனாலும் பாரு.. என் சின்னப் பொண்ணு மும்தாஜுக்கு, வீட்டோடு மாப்பிளையா பார்த்து கட்டிக் கொடுத்ததுக்கு பொறவு ஆண்டவனா கண்பார்த்து இவனை கொடுத்தான். எம் பேரன் இவனப் பாக்கிறப்ப, எம் மெவனப் பாக்குற மாதிரியே இருக்கு! அவனோட ஜாடை, நடை, அதே பேச்சு, புத்தியெல்லாம்கூட அப்படியப்படியே இருக்குதுன்னா பாத்துகியேன்!

*
சமயங்கல நினைச்சுப்பார்த்தா திக்குங்குது. இந்த துனியாவுல எல்லாம் ஹொதரத்தாதான் இருக்கு போயேன்! அல்லாதான் இவனுக்காவது நல்லப் புத்திய கொடுத்து நீடித்த ஆயுசயும் நிறைஞ்ஜ பரக்கத்தையும் கொடுத்து காவந்துப்பண்ணித் தரணும்."
*
"ஆமாக்கா... அல்லா, இந்தப் புள்ளையையாவது உனக்கு தந்து, உன் மனசில பால்வார்த்தானே! அல்ஹம்துரில்லா! அல்லா போதுமானவன்! நா, வரமாசம் ஹஜ்ஜுக்கு போறேங்கா.., சீய்யாழியில எங் கொளுந்துனாவுடைய தாய்புள்ளைங்க இருக்கு. அங்கேயும் போய் சொல்லிட்டுவரதுதான் நல்லதுன்னு கிளம்பினப்போ, சீய்யாழி போனா, யெந்தோழி ரஹமானியக்காகிட்ட முதல்ல சொல்லிட்டு அப்புறமா நீ யாரிட்டவேணுமுன்னாலும் சொல்லிட்டுவாடி'ன்னு எங்க அம்மா சொன்னாங்க.

*
மாகனாம்பட்டுலேந்து கொள்ளடம் வந்து, பதினோருமணி ரயிலப்பிடுச்சு சீய்யாழியில எறங்கின கையோடு, முதலுல இங்க சொல்லிட்டுதான் போவனுமுன்னு எனக்கு தோனவும், அப்படியே விசாரிச்சுகிட்டே வந்து சேர்ந்தேங்கா. இங்க வந்துப்பாரு... உங்கதைய கேட்க வச்சுருக்கான் ஆண்டவன்!"

*
"அப்ப நீ, பாத்திமுத்து ஜொஹரான் மகளா நீ! அவள பாத்து எம்புட்டு காலமாச்சு! உங்கம்மா இந்தப்பக்கம் வந்தாபோனா என்னப் பாக்காம இருக்கமாட்டா? என் மேல உயிரத்தான் உடுவா! அப்படியொரு தோழி நாங்க! நல்லா இருக்காளா உங்க அம்மா?"

*
"அல்லா உதவியால நல்லா இருக்காங்கக்கா, நான்தாக்கா அவுங்கள வைச்சுப் பாத்துக்கிறேன்! அப்புறங்கா, உங்கமகளா சொல்றேன் கவல படாதக்கா... நீ படவேண்டிய கஷ்டத்தல்லாம் பட்டு முடிச்சுட்டே. உன் பேரனை வேணுமுன்னா பாரு, நீ நெனைச்சா மாதிரி நிறைஞ்சி இருப்பான்.இந்த ஜில்லாவையே ஆளுரான இல்லையான்னுப் பாரு!"

*
"நானும் நேத்திகடன் பாத்தியாவாதான் இருக்கேன். அவன அல்லாதான் கண் பாக்கணும். நம்ம கையில என்ன இருக்கு! எப்பவும் பாரு இவென் நினப்பாதான் இருக்கு! கபுருல கொண்டுபோயி கட்டை வச்சாகூட, தறிக்காது போலிருக்கு!"

*
குறிப்பு: 1
பெருநாள் காலை - சிறுகதை - 01.10.2012
நன்றி: ஆபிதீன் பக்கங்கள்





குறிப்பு: 2
புகைப்படம் - மும்தாஜ் அம்மாவோடு
 ****************************
'பெருநாள் காலை' - தாஜ்:
என் சிறுகதையில் இருந்து ஓர் கீற்று - 4

Taj Deen

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails