Thursday, November 6, 2014

ஏஞ்சலினா ஜோலியின் முயற்சியில் மனிதம் வெல்லட்டும். வாழ்த்துவோம்.

உலகில் வாழும் மனிதர்கள் விஞ்ஞானத்தின் வியத்தகு வளர்ச்சியில் தனது எல்லாத் தேவைகளையும் இலகுவாக அனுபவித்து நாகரிகத்தின் உச்சியைத் தொட்டுவிட்டதாக நினைத்து வாழ்ந்துவரும் இதேக் காலத்தில்தான் கிட்டத்தட்ட 15 மில்லியன் எண்ணிக்கையில் உலகின் பல் பாகங்களில்
தனி மனித அடிப்படை உரிமைகளைக் கூட பெறமுடியாமல் நாடற்ற அகதிகளாக வாழ்ந்து வருகிறார்கள்.

இவர்களுக்கு எந்த நாட்டின் குடியுரிமையும் கிடையாது. இவர்களுக்கு கடவுச்சீட்டும் கிடையாது. ஓட்டுரிமையும் இல்லை.
இவர்கள் இருக்குமிடத்திலிருந்து வேறு நாடுகளுக்குப் பயணிக்கும் வாய்ப்பும் கிடையாது, எனவே இவர்கள் வாழ்வில் முன்னேற்றம் என்பதே எண்ணமுடியாப் பெருங்கனவே.
கல்வி,வேலைவாய்ப்பு, மருத்துவ வசதி
என மனிதர்களுக்குத் தேவையான அடிப்படை உரிமைகள் அவர்கள் வாழும் நாட்டிலேயே குடியுரிமை இல்லாதக் காரணத்தினால் மறுக்கப்பட்டு வாழ்க்கை சிதைக்கப்பட்டிருக்கிறது.

இவர்கள் மனிதர்களாக வாழ்வதுவேக் குற்றம் என் எண்ணும் வகையில் நாடற்றவர்களின் நிலை நாதியற்றுக் கிடக்கிறது.

ஐக்கிய நாட்டு சபையின் புள்ளிவிவரப்படி பத்து நிமிடங்களுக்கு ஒரு குழந்தை உலகில் எந்தவொரு நாட்டிலும் குடியுரிமை அற்றக் குழந்தையாகப் பிறக்கிறது.

இப்படி நாடற்றவர்கள் அதிகம் வாழும் நாடாக நேபாளம், மியான்மர், தாய்லாந்து, சிரியா,ஈராக்,எஸ்தோனியா,கென்யா ஆகியனவாகும்.

இத்தகைய எந்த நாடும் சொந்தம் கொண்டாடாத மக்கள் உருவாவதற்கு பெரும்பாலும் போர்களும் இனச் சண்டைகளும் காரணமாக இருக்கின்றன.
மியான்மரில் மட்டும் கிட்டத்தட்ட 10 இலட்சம் ரோகிங்யா மக்கள் இப்படி நாடற்றவர்களாக வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த இழி நிலையைப் போக்கும் நோக்கில் ஐக்கிய நாட்டுச்சபை இன்னும் பத்தாண்டுகளில் எல்லோருக்கும் குடியுரிமைப் பெற்றுத் தரவேண்டும், நம்மைப் போல் அவர்களும் அடிப்படை உரிமைகளைப் பெறவேண்டும்
என்று முயன்று வருகின்றது.
இந்த முயற்சியை உலக நாடுகளில் முன்னெடுக்க பிரபலமானவர்களை இந்தத் திட்டத்துக்கு தூதுவர்களாக நியமித்திருக்கிறது.

அவர்களில் ஒருவர்தான் ஏஞ்சலினா ஜோலி.

இவர்களின் முயற்சியில் மனிதம் வெல்லட்டும் வாழ்த்துவோம். 

Mohamed Salahudeen

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails