Thursday, November 27, 2014
அடிமைத்தனமல்ல… அருட்கொடை!
திறந்து கிடப்பதுதான் சிறந்தது என்றால்
அந்தச் சிறப்பு என் தாய்க்குத் தேவையில்லை
கணவன் காண வேண்டியதைகண்டவனும் காண்பதுதான் சுதந்திரம் என்றால்
என் மனைவி அடிமையாகவே இருக்கட்டும்
வரைமுறையற்று வாழ்வதுதான் பெண்ணியம் என்றால்
என் சகோதரி எதிர்பெண்ணியவாதி என்பதில் பெருமையடைகிறேன்
உடலைக் கடைவிரித்துதான் உலகை வெல்ல வேண்டுமா
இல்லை என்பதற்கு அன்னை தெரசா அற்புதச்சான்று
திறந்து கிடக்கும் பண்டத்தை
ஈக்கள்தான் மொய்க்கும்
மூடித்திறக்கும் மலர்களையோ
தேனீக்கள் கூட்டம் மொய்க்கும்
மேகம் மறைத்தால்தான் வானம் அழகு
மோகம் மறைத்தால்தான் காதல் அழகு
சிப்பிக்குள் இருப்பதால்தான் முத்தின் அருமை
அங்கம் மறைப்பதில்தான் பெண்ணின் பெருமை
ஹிஜாப் அடிமைத்தனத்தின் அடையாளமல்ல
அது ஒரு அருட்கொடை
ஓராயிரம் கோடிப் பார்வைகளையும் மறித்துத் தாக்கும் கவசம்
பெருமை அறிந்தவர்களுக்கு அது கற்பூர வாசனை
அறியாதவர்களுக்கு வெறும் காற்று
அபுல் ஹசன் R
9597739200 \From: R.ABUL HASSAN RAJA <jeraabu.88@gmail.com>
by mail from: Muduvai Hidayath <muduvaihidayath@gmail.com>
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment