Friday, November 14, 2014

தந்தையின் காலம் / தாஜ்

என் பிள்ளைகள்
படிக்கிறார்கள்
சுமக்க இயலா
சுமக்கப் படிக்கிறார்கள்.

வீட்டிலென்
அசைவுகளிலும்
பார்வை அகலா
சிரத்தையோடு படிக்கிறார்கள்.

மண்ணிலென்
பாதம் பதியும்
இதம் வேண்டி
காலணிகளை விட்டுச் செல்ல
படிப்பாய் தெளிந்தறிகிறார்கள்.

குறுக்கீடு தவிர்க்க
நித்தமும் சப்தமற
காலடிகளை அளந்து
பாதை ஒற்றியே
நடக்க வேண்டியிருக்கிறது.

என் உடுப்புகளில்
கறைபட்ட எச்சங்கள்
இன்னும் அவர்களுக்கு
புலப்படாதது ஆச்சரியம்.

அவர்களது புத்தகக்
குவியலுக்குப் பக்கத்தில்
என்னைக் கண்டு நான் நகலெடுத்த
என் கவிதைத் தொகுப்பொன்று
விரிந்து கிடக்கிறது
இன்னொரு புத்தகமாக.

காலம் காலமாக
எல்லோரும்
கவிதைகளை
விரும்புவதில்லை என்பதும்தான்
எத்தனை சந்தோஷமாக இருக்கிறது.

*
கவிதை காலம்: 1993
 Taj Deen ஆக்கம் தாஜ் தீன் அவர்கள்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails