Friday, November 14, 2014

வீரம் ....! / ராஜா வாவுபிள்ளை

 
வெட்டிச் சாய்ப்பது அல்ல விவேகமாய் செயல்பட்டு
வெற்றி வாகை சூடுவது யார் அந்த வீரன் !

வில்லங்கம் பண்ணாமல்
விரோதியை விரட்டி அடிப்பது வீரம்

தங்கு தடைகளை நீக்கி
தெளிவான பாதையில்
இலக்கை நோக்கி
வீறு நடை போட்டு அடைதல் வீரம்

சமூக அவலம் கண்டு
கொதித்தெழுந்து குரல் கொடுப்பது வீரம்

கோபமாய் இருக்கும் போது அமைதி கொண்டு பொறுமையை கையாளுதலே வீரம்

தன்னுடைய நிலைமையில், சக்தியில், பொருளாதாரத்தில் தாழ்ந்து இருப்பவர்களை
அரவணைத்து செல்வதே
வீரம்

போருக்கு தயாராக இருந்தாலும்
அமைதிக்கு முதல் தூதுவ னாய் இருப்பதுவே வீரம்

படைப்பினங்களுக்கு
அஞ்சாமல்
படைத்தவனை அஞ்சி
வாழ்வது வீரம்

 
ஆக்கம் ராஜா வாவுபிள்ளை அவர்கள்
 

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails