பாங்கோசை
நான் முதன் முறையாக மதினா சென்றபோது நள்ளிரவு மணி ஒன்றாகி விட்டது. “பைத்துன் நபவி” பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள இருப்பிடம் இதுவென்று சொல்லி எங்களை ஒரு ஹோட்டலில் இறக்கி விட்டார்கள். விடியற்காலை தொழுகைக்கு கிளம்பினோம். பள்ளிவாசலுக்கு எப்படி போவது? வழி தெரியாதே என்ற கவலை எனக்கு. ரிசப்ஷனில் வீற்றிருந்த எகிப்து நாட்டு பேர்வழியிடம் அப்பாவித்தனமாக “பள்ளிவாசலுக்கு எப்படி போக வேண்டும்?” என்று விசாரித்தேன். என்னை அவர் ஒருமாதிரியாக ஏற இறங்க பார்த்தார். “விளங்காதவானாக இருப்பான் போலும்” என்று மனதிற்குள் அவர் என்னைப் பற்றி. நினைத்திருக்கலாம். “எல்லோரும் எப்படி போகிறார்களோ அப்படி போனால் போதும் பள்ளிவாசல் வந்து விடும்” என்றார். ஹோட்டலை விட்டு வெளியே வந்து பார்த்தபின்தான் நான் இந்த கேள்வியைக் கேட்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை என்பதை உணர்ந்தேன். காரணம், சாரை சாரையாக செல்லும் ஊர்வனங்கள் போல ஆயிரக் கணக்கில் அன்பர்கள் பள்ளிவாசலை நோக்கி சென்று கொண்டிருந்தார்கள். கூட்டத்தோடு கூட்டமாக நானும் என் குடும்பத்தாரும் நேராக பள்ளிவாசல் சென்றடைந்தோம். அந்த கண்கொள்ளாக் காட்சியைக் கண்டபோது என் மனதில் உதித்த கவிதை இது:
