Showing posts with label மோதினார். Show all posts
Showing posts with label மோதினார். Show all posts

Wednesday, February 18, 2015

தலைத் துண்டு - அபு ஹாஷிமா

காலையில் பஜ்ர் தொழுகை முடிந்து தொழுகையாளிகளெல்லாம் பள்ளியை விட்டுப் போனபிறகு அவசர அவசரமாக கிளம்பினார் பிலால் ஹசன் சாஹிப் .

" இப்பவே நேரம் வெளுத்துப்போச்சே" என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டவர் புஹாரி டீக் கடையில் வழக்கம்போல் ஒரு சாயா வாங்கிக் அவசர அவசரமாகக் குடித்துவிட்டு நடக்க ஆரம்பித்தார்.

அவரது நடையில் இன்றைக்கு கொஞ்சம் தளர்ச்சி.
நேத்து சாயங்காலம் மையத்தை கசப் இறக்கி குளிப்பாட்டி கபன் பொதிந்து அடக்கம் செய்வது வரை கூடவே நின்றதில் உடம்பெல்லாம் பயங்கர அசதி.

அது என்னவோ ஒவ்வொருமுறை மைய்யத்துக்கான காரியங்களை செய்து முடிக்கும்போதும் உடம்பெல்லாம் அப்படி ஒரு தளர்ச்சி வந்து ஒட்டிக் கொள்வது பிலால் சாஹிபுக்கு இன்றுவரை புரியாத ஆச்சரியமாகவே இருக்கிறது.

Saturday, August 27, 2011

மோதினார் அப்பாவின் கதை அல்ல நிஜம்


ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய நெஞ்சை சுடும் நிஜம்
[ நினைவில் கொள்ளுங்கள் மறுமையில் கஸ்தூரி மலைக்குமேல் வீற்றிருக்கும் பாக்கியம் பெற்றவர்கள் மோதினார்கள் என்பது நபிமொழி. அதுமட்டுமின்றி மாபெரும் கலீஃபாவான உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களாலேயே ''எங்களது தலைவர்'' என்று மரியாதையுடன் அழைக்கப்பட்ட பிலால் ரளியல்லாஹு அவர்களின் வாரிசுகள் மோதினார்கள் என்பதை மறந்திட வேண்டாம். அதை மறந்தாலும் ஒவ்வொருவரும் மரணித்த பின்பு ஆணாக இருந்தால் அவர்களைக் குளிப்பாட்டி தூய்மைப் படுத்தி கபனிட்டு; ஆணானாலும் பெண்ணானாலும் கபுரில் அடக்கம் செய்த பிறகு தண்ணீர் தெளித்து இறை வசனங்களை உச்சரித்து மறு உலகிற்கு தூய்மையுடன் அனுப்பி வைக்கும் மகத்தான பணியை மேற்கொள்கின்றவர்களல்லவா? இதை மறக்க முடியுமா? மறுக்கத்தான் முடியுமா? அதற்கான நன்றிக்கடனை நாம் மரணித்தபிறகு அவர்களுக்குத் தீர்க்கத்தான் முடியுமா? என்பதனை சற்றேனும் நாம் எண்ணிப்பார்த்ததுண்டா?]

மோதினார் அப்பாவின் கதை அல்ல நிஜம் .

LinkWithin

Related Posts with Thumbnails