அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)
நீண்ட இடைவெளிக்கு பிறகு கடன் தொடர் தொடர்கிறது. தொடர் 12வரை அனைத்து வகையான கடன் கொடுக்கல் வாங்கல் பற்றி பார்த்தோம். இனி நம்முடைய வருமானத்திட்டத்தை பற்றி பார்ப்போம்.
கடன் வாங்காமல் இருப்பதற்கு வருமானத்திட்டம்
எந்தக் காரியத்தையும் திட்டமிட்டுவிட்டு அந்தக்காரியம் நல்லபடியாக நடைபெற அல்லாஹ்விடம் உதவி தேடியபிறகு செயல்படும்பொழுது நம் காரியங்கள் அனைத்தும் இலகுவாகும். நம்மிடம் திட்டமிடும் பழக்கம் மிக குறைவாகவே உள்ளது.ஆனால் அசத்திய கொள்கையை பின்பற்றுபவர்கள் ஒரு வருடம், ஐந்து வருடம் இன்னும் பல வருடங்கள் என்று பல காரியங்களை திட்டமிட்டு செயல்படுத்தி வெற்றி காண்கிறார்கள்.
