Monday, September 12, 2011

கொரியண்டர் சிக்கன்

தேவையான பொருட்கள் :
சிக்கன் : அரை கிலோ
பச்சைமிளகாய் : 8
தயிர் : 1 கப்
சீரகம் : ஒரு டீஸ்பூன்
தனியா : 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி & பூண்டு பேஸ்ட் : 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி பேஸ்ட் : 4 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் : தேவையான அளவு
மல்லி இலை : 2 கப்
கறிவேப்பிலை : தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
* முதலில் மல்லி இலை, பச்சைமிளகாய், கறிவேப்பிலை மூன்றையும் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
* வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் சீரகத்தைப் போட்டு பொரிந்த பிறகு தனியாவை மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக பொடித்து போடவும்.
* பிறகு அரைத்த மல்லி இலை பேஸ்ட், இஞ்சி & பூண்டு பேஸ்ட், முந்திரி பேஸ்ட், தயிர் எல்லாவற்றையும் ஒன்றன்பின் ஒன்றாக போட்டு எண்ணெய் பிரிந்து வரும்வரை வதக்கவும்.
* இறுதியாக சிக்கனைப் போட்டு, உப்பு சேர்த்து பத்து நிமிடம் மூடிவைத்து சிம்மில் வேக விடவும்.
* சிக்கன் வெந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும். சுவையான கொரியண்டர் சிக்கன் தயார்.
- இன்றைய ரெசிப்பி ஆலோசனை வழங்கியவர் : இனியவள்
Source : http://www.inneram.com/ ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

1 comment:

ஆயிஷா அபுல். said...

அஸ்ஸலாமு அலைக்கும்
அருமை .பகிர்ந்தமைக்கு நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails