
சத்தியமார்க்கம்.காம் தளத்தில் சகோ. நூருத்தீன் எழுத, தொடராக வெளிவந்து கொண்டிருக்கும் "தோழர்கள்" தொடரிலிருந்து 20 தோழர்கள் அடங்கிய தொகுப்பு, சத்தியமார்க்கம் பதிப்பகத்தின் முதல் வெளியீடாக, "தோழர்கள் - முதலாம் பாகம்" அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 11 செப்டம்பர் 2011 ஞாயிறு காலை 11 மணியளவில் சென்னை அண்ணா சாலையிலுள்ள தேவநேயப் பாவாணர் அரங்கில் நிகழ்ந்தேறியது, அல்ஹம்து லில்லாஹ்!




மேடையை அலங்கரித்தவர்கள்:
1. "தோழர்கள்" நூலுக்கு மதிப்புரை வழங்கிய பன்னூலாசிரியர், கவிஞர் அதிரை அஹ்மது (அமர்வுத் தலைவர்)
2. பேராசிரியர், டாக்டர் அப்துல்லாஹ்
3. பேராசிரியர், அ. மார்க்ஸ்
4. ஜமீல் (இணைய இதழாசிரியர், சத்தியமார்க்கம்.காம்)
5. மறைந்த தொழிலதிபர் கீழக்கரை அஹ்மது யாசீன் அவர்களின் மகனார் நாஸர் (ஹஸ் ஸர்வீஸ், மலேஷியா).
6. நூருத்தீன் ("தோழர்கள்" நூலாசிரியர்)
சத்தியமார்க்கம்.காம் குழுமத்தினரில் ஒருவரும் கணி வல்லுநரும் பல அறிவியல் கட்டுரைகளின் ஆசிரியருமான சகோ. முஹம்மது ரஃபீக் (அபூ ஷைமா), நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வந்த அனைவரையும் வரவேற்றார்.
பன்னூலாசிரியரும்,
பாக்கியாத்துஸ்ஸாலிஹாத் அரபுக் கல்லூரியின் முன்னாள் தமிழாசிரியருமான
கவிஞர் அதிரை அஹ்மது அவர்கள் நிகழ்வுக்குத் தலைமை தாங்கி உரையாற்றும்போது,
கண்ணியமான "தோழர்கள்" பற்றி மிகச் சுருக்கமாக விளக்கி, நூலாசிரியரின்
எழுத்துப் பாரம்பரியத்தின் மீது வெளிச்சம் வீசினார்.
அடுத்ததாக, 'நூல் அறிமுகம்' செய்ய வந்த, சத்தியமார்க்கம்.காம் இணைய இதழாசிரியர் ஜமீல், "தோழர்கள்" நூல் கல்விக்கூடங்களில் வரலாற்றுப் பாடமாக வைக்கப்பட வேண்டிய ஒன்று என அறிமுகப்படுத்திவிட்டு, இன்றுவரை புனிதர்களாகப் பேசப்படும் நபித் தோழர்கள் "லா இலாஹ இல்லல்லாஹ்"வை ஏற்றுக் கொள்வதற்கு முன்னர் எப்படி வளர்க்கப்பட்டிருந்தனர்? எப்படிப்பட்ட மோசமான வாழ்க்கையை வாழ்ந்தனர்?; "லா இலாஹ இல்லல்லாஹ்" அவர்களது வாழ்க்கை முறையை எவ்வாறு தலைகீழாகப் புரட்டிப் போட்டது? எனச் சான்றுகளை முன்வைத்துப் பேசினார்.
எங்கோ
உள்ள எத்தியோப்பியாவில் பிறந்த கறுப்பரும் அடிமையுமான பிலால் (ரலி)
அவர்களை, "எங்கள் தலைவரே!" என்று குலப்பெருமை தலைக்கேறிக் கிடந்த
குரைஷியருள் ஒருவரான உமர் பின் அல்கத்தாப் (ரலி) வாஞ்சையுடன் அழைக்க
வைத்தது எது? என்ற கேள்வியுடன் தொடங்கி, லா இலாஹ இல்லல்லாஹ்வின் முதல்
அழித்தொழிப்பு இலக்கு, தீண்டாமைதான் என்றார். தங்களது இல்லங்களில்
இருக்கும் மதுக் குடங்களின் எண்ணிக்கையைத் தங்களின் பெருமைக்குச் சான்றாகப்
பேசித் திரிந்த அரபியருள், மொடாக் குடியராகத் திகழ்ந்த ஹம்ஸா (ரலி)
அவர்களை ஒழுக்கத்தின் உறைவிடமாக, அல்லாஹ்வின் சிங்கம் என்ற சிறப்புப்
பெற்றவராக மாற்றியமைத்தது லா இலாஹ இல்லல்லாஹ் என்றார்.
அதன்பின், நூல் வெளியீடு தொடங்கியது.

2. பேராசிரியர், டாக்டர் அப்துல்லாஹ்
3. பேராசிரியர், அ. மார்க்ஸ்
4. ஜமீல் (இணைய இதழாசிரியர், சத்தியமார்க்கம்.காம்)
5. மறைந்த தொழிலதிபர் கீழக்கரை அஹ்மது யாசீன் அவர்களின் மகனார் நாஸர் (ஹஸ் ஸர்வீஸ், மலேஷியா).
6. நூருத்தீன் ("தோழர்கள்" நூலாசிரியர்)


அடுத்ததாக, 'நூல் அறிமுகம்' செய்ய வந்த, சத்தியமார்க்கம்.காம் இணைய இதழாசிரியர் ஜமீல், "தோழர்கள்" நூல் கல்விக்கூடங்களில் வரலாற்றுப் பாடமாக வைக்கப்பட வேண்டிய ஒன்று என அறிமுகப்படுத்திவிட்டு, இன்றுவரை புனிதர்களாகப் பேசப்படும் நபித் தோழர்கள் "லா இலாஹ இல்லல்லாஹ்"வை ஏற்றுக் கொள்வதற்கு முன்னர் எப்படி வளர்க்கப்பட்டிருந்தனர்? எப்படிப்பட்ட மோசமான வாழ்க்கையை வாழ்ந்தனர்?; "லா இலாஹ இல்லல்லாஹ்" அவர்களது வாழ்க்கை முறையை எவ்வாறு தலைகீழாகப் புரட்டிப் போட்டது? எனச் சான்றுகளை முன்வைத்துப் பேசினார்.


"தோழர்கள்
- முதல் பாகம்" நூலின் முதல் பிரதியை, அமர்வுத் தலைவர் அதிரை அஹ்மது
அவர்கள் வெளியிட, தொழிலதிபர் A.Y. நாஸர் (மலேஷியா) பெற்றுக் கொண்டார். சகோ.
A.Y. நாஸர் அவர்களின் சென்னை நிறுவனத்தில் நூலாசிரியர் நூருத்தீன் அவர்கள்
பல்லாண்டுகளுக்கு முன்னர் பணியாற்றியவராம்.


அடுத்து,
சிறப்புரையாற்ற வந்த பேரா.அ.மார்க்ஸின் உரை, ஆழமானதாக,
கருத்துச்செறிவுடனும் விவரணங்களுடனும் அமைந்திருந்தது. இயக்கமாகப்
பரிணமித்த இஸ்லாம், தன் குறிக்கோள்களில் அடைந்த வெற்றி பற்றிய ஓர்
ஆய்வுரையாகவும் எளிமையானவர்களையே முன்னிலைப்படுத்திய இஸ்லாம் குறித்த
மதிப்புரையாகவும் உலக இன்பத்தினைப் பொருட்படுத்தாமல், மறு உலக வெற்றி
என்னும் குறிக்கோளினை முன்னிறுத்தி மிக எளிமையாக நபித்தோழர்கள்
வாழ்ந்திருந்தும், பின்வந்த சமுதாயத்தவர் பொருளாசையில் புதையுண்டு போனது
பற்றிய நேர்ப்பார்வையாகவும் பேரா. அ. மார்க்ஸ் அவர்களின் ஆழிய உரை
அமைந்திருந்தது.



சாதாரண
கவுன்ஸிலர் பதவிக்கே மானம் மரியாதையைத் துறந்துவிடத் துணிகின்ற இந்தக்
காலத்தில், ஆளுநர் பதவி வீடுதேடி வந்த போதும் அதைக் கண்டு ஓடி ஒதுங்கிய
நபித்தோழர்களின் பற்றற்ற நிலை பற்றி எடுத்துரைத்தார் பேரா. அப்துல்லாஹ்.
அண்ணலின் தோழர் அபூதர்தா (ரலி) அவர்கள் வாழ்ந்த, நம் கற்பனைக்கு எட்டாத
எளிய வாழ்க்கையை நிகழ்காலத்தோடு ஒப்பிட்டு, வழக்கம்போல் பல உளவியல்
நுட்பங்களைத் தன்னகத்தே கொண்டிருந்த பேரா.அப்துல்லாஹ்வின் பேச்சில்
ஏகத்துவக் கலிமாவைத் “தோழர்கள்” உணர்ந்ததைப் போன்றே முழு முஸ்லிம்
சமுதாயமும் உணரவேண்டுமென்ற வேட்கை இருந்தது.


அமர்வுத்
தலைவர் அதிரை. அஹ்மது அவர்களின் கணீர்க்குரலில் சத்தியமார்க்கம் தளக்
கவிஞர் சபீர் எழுதிய “தோழர்கள்” கவிதை வாசிக்கப்பட்டு வரவேற்புப் பெற்றது:
தோழர்கள்...
சத்தியமார்க்கம் தளம் பதிக்கும்
முத்திரைத் தடம்!
தொடராக வந்த
சுடர்!
போர்க் களங்களைப்
பூக் குளங்களாகக் கண்டு
வாட்களோடு வாழ்ந்த
ஆட்களின் சரிதை!
கொல்லத் துடித்த எதிரிகளை
ஓரிறைக் கொள்கையில்
அடக்கிய நபியை...
ஆயிரம் துண்டுகளாக அறுத்துப்போட்டாலும்
அரணாகக் காத்த
தோழர்கள் சரிதை!
நபித் தோழர்களைப் பற்றி
நம் தோழரின் நூல்!
சாமானிய மனிதர்களின்
ஈமானியத் தியாகங்கள்
இதன்
நாயகர்கள் நடிகர்களல்லர்
எனினும் நட்சத்திரங்கள்!
வரலாற்றுக் குறிப்புகள் வடிவில்
வாழ்க்கை நெறிகள்!
இந்நூல்...
படிப்பதற்கு மட்டுமல்ல
படிப்பினைக்கும்தான்!
முத்திரைத் தடம்!
தொடராக வந்த
சுடர்!
போர்க் களங்களைப்
பூக் குளங்களாகக் கண்டு
வாட்களோடு வாழ்ந்த
ஆட்களின் சரிதை!
கொல்லத் துடித்த எதிரிகளை
ஓரிறைக் கொள்கையில்
அடக்கிய நபியை...
ஆயிரம் துண்டுகளாக அறுத்துப்போட்டாலும்
அரணாகக் காத்த
தோழர்கள் சரிதை!
நபித் தோழர்களைப் பற்றி
நம் தோழரின் நூல்!
சாமானிய மனிதர்களின்
ஈமானியத் தியாகங்கள்
இதன்
நாயகர்கள் நடிகர்களல்லர்
எனினும் நட்சத்திரங்கள்!
வரலாற்றுக் குறிப்புகள் வடிவில்
வாழ்க்கை நெறிகள்!
இந்நூல்...
படிப்பதற்கு மட்டுமல்ல
படிப்பினைக்கும்தான்!

1. பேரா. டாக்டர் அப்துல்லாஹ்
2. பேரா. அ. மார்க்ஸ்
3. பன்னூலாசிரியர் அதிரை அஹ்மது
4. "தோழர்கள்" நூலாசிரியர் நூருத்தீன்
5. "தோழர்கள்" நூலைக் குறுகிய காலத்தில் மிகச் சிறப்புடன் அச்சிட்டுத் தந்த, க்ராஃபிக் பார்க் ஸாதிக் பாட்சா

ஏற்புரை வழங்க வந்த நூலாசிரியர் நூருத்தீன், இஸ்லாம் நிலைபெற, எழுத்தையே வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டிருந்த அர்ப்பணிப்பாளர்களான தம் பாட்டனாரோடும் தந்தையாரோடும், ஓய்ந்த பொழுதில் 'ஏதோ எழுதுகின்ற' தம்மை ஒப்பிடக்கூடாது எனும் வேண்டுகோளுடன் தொடங்கினார். நபித் தோழர்களின் தியாகங்களை எடுத்துச் சொல்லும்போது இடையிடையே உணர்ச்சிப் பெருக்கெடுத்துக் கண்கலங்கி, நம்மையும் கலங்கவைத்தார்.





தோழர்கள் - முதல் பாகம் கிடைக்குமிடங்கள்:
Shajidha Book Center 248 Thambu Chetty Street Mannady, Chennai - 600 001 Tel : +91 44-25224821, Mobile : +91 9840977758 |
Aysha Publications 78 Big Street Triplicane, Chennai - 600 005 Tel : 91 44-43568745 |
Salamath Pathippagam
95, Linghi Chetty Street
Mannady, Chennai 600 001
Tel : +91-44-25211981; 42167320
|
Basharath Publishers
83, Angappa Naicken Street
Mannady, Chennai 600 001
Tel : +91-44-25225028; Mobile : +91-944424035
|
குமரியில் : அன்ஸார், மொபைல் : +91 9786220915
அதிரையில் : அப்துர் ரஹீம், மொபைல் : +91 9944824437
அமெரிக்காவில் : நூருத்தீன், மொபைல் +1 2062726936
தம்மாமில் : நஸ்ருத்தீன், மொபைல் : +966 50-3841699
துபையில் : இம்ரான் கரீம், மொபைல் : +971 55-9739408
குவைத்தில் : அப்துல் கரீம், மொபைல் : +965 97919697
கத்தரில் : முஹம்மத் சர்தார், மொபைல் : +974 55515648
கூடுதல் விபரங்களுக்கு
admin@satyamargam.com எனும் மின் அஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
(நிகழ்ச்சியின் காணொளி விரைவில் பதிவிடப்படும், இன்ஷா அல்லாஹ்).
தோழர்கள் முதலாம் பாகம் நூல் வெளியீடு - நிகழ்ச்சித் தொகுப்புSource : http://www.satyamargam.com/
No comments:
Post a Comment