Tuesday, November 13, 2012

ஹதீது தொகுப்புகள் ஆறு





நபித் தோழர்களும், அவர்களுக்குப்பின் வந்தர்வகளும் ஹதீதுகளைத் தொகுத்தளிக்க ஆரம்பித்தனர்.

அந்த ஹதீதுகள் அவர்களால் முடிந்தவரை மனப்பாடம் செய்யப்பட்டு சில செவி வழிச் செய்திகளாகவும், சில எழுதி வைத்தப் பிரதிகளாகவும் உருவாகின.

முகம்மது நபி இறந்த 200 ஆண்டுகள் தொடங்கி 300 ஆண்டுகள்வரை இஸ்லாத்தில் இணைந்த அரபி அல்லாதவர்கள் ஹதீதுகளின் முக்கியத்துவத்தை அறிந்து அவற்றை நூல்களாகத் தொகுக்க ஆரம்பித்தனர்.

இக்காலக்கட்டத்தில் ஏராளமான ஹதீது தொகுப்புகள் தொகுக்கப்பட்டாலும் முஸ்லிம்களிடையே இன்று ஆறு நூல்கள் மட்டுமே ”உண்மையான ஆறு ஹதீது நூல்களின் தொகுப்பு” எனக் கருதப்பட்டு "ஸிஹாஹ் ஸித்தா" என்ற பெயரில் விளங்கி வருகின்றன.

நூல் 1:   சஹீஹுல் புகாரி
ஹிஜ்ரி 194 - 256 ல் வாழ்ந்த ரஷ்யாவைச் சேர்ந்த புகாரி என்பவரால் தொகுக்கப்பட்டது. நான்கு லட்சம் ஹதீதுகளை இவர் தொகுத்தார். அவற்றுள் சுமார் நாலாயிரம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டன.

நூல் 2: ஷஹீஹ் முஸ்லிம்
ஹிஜ்ரி 206 - 261 ல் வாழ்ந்த ஈரானைச் சேர்ந்த முஸ்லிம் என்பவரால் தொகுக்கப்பட்டது

நூல் 3: ஸூனன் நஸயீ
ஹிஜ்ரி 214 - 303 ல் வாழ்ந்த ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த நஸயீ என்பவரால் தொகுக்கப்பட்டது

நூல் 4: ஸூனன் அபூதாவூத்
ஹிஜ்ரி 202 - 275 ல் வாழ்ந்த இராக்கைச் சேர்ந்த அபூதாவூத் என்ப்வரால் தொகுக்கப்பட்டது

நூல் 5: ஸூனன் திர்மிதீ
ஹிஜ்ரி 209 - 279 ல் வாழ்ந்த ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த திர்மிதீ என்பவரால் தொகுக்கப்பட்டது

நூல் 6: ஸூனன் இப்னுமாஜா
ஹிஜ்ரி 202 - 273 ல் வாழ்ந்த ஈரானைச் சேர்ந்த இப்னுமாஜ்ஜா என்பவரால் தொகுக்கப்பட்டது.

கலீபா அபூபக்கர் ஆட்சிக்காலத்தில் தானும் ஓர் இறைத் தூதர் என்று பொய்யாக அறிவித்த முசைலமாவை அழிக்க நடந்த போரில் குர்-ஆனை மனப்பாடம் செய்து வைத்திருந்த எழுபத்தைந்துக்கும்மேற்பட்ட நபித்தோழர்கள் உயிரிழந்தார்கள்.

இதனால் நபித்தோழர் உமர் கலீபா அபூபக்கரை குர்-ஆனைத் தொகுத்துவிடும்படி கட்டாயப்படுத்தினார்.

முகம்மது நபி அப்படியோர் செயலைச் செய்யவில்லையே செய்யும்படியும் கூறவில்லையே என்று கலங்கிய கலீபா அபூபக்கர் முதலில் மறுத்தாலும் பின்னர் ஒப்புக்கொண்டார்.

ஆனால் நபித்தோழர் உமர், கலீபா அபூபக்கரிடம் ஹதீதுகளைத் தொகுக்கும்படி கேட்டுக்கொள்ளவும் இல்லை அவரின் ஆட்சிக்காலத்தில் தொகுக்கவும் இல்லை.

கலீபா உமர் அவர்கள் தனக்கு ஹதீதுகளைத் தொகுக்கும் விருப்பம் இல்லை என்று அவரின் ஆட்சிக் காலத்தில் கூறியதோடு ஹதீதுகளைத் தொகுக்கக்கூடாது என்று உத்தரவும் இட்டதாகக் கூறப்படுகிறது.

முஸ்லிம்கள் ஹதீதுகளை குர்-ஆனோடு சேர்த்துக் குழப்பிக்கொள்ளக் கூடாது என்பதற்காக முகம்மது நபி அவர்கள் ஹதீதுகளைத் தொகுப்பதைத் தடுத்தார்கள் என்றும் இந்த முடிவைத்தான் கலீபா உமர் பின்பற்றினார் என்றும் கூறப்படுகிறது.
Source : http://anbudanislam2012.blogspot.in

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails