Wednesday, March 30, 2016

உங்கள் வெற்றி எப்படி சாத்தியமாயிற்று ?

 Abu Haashima

" பசியோடிருப்பவனுக்கு மீனைக் கொடுப்பதைவிட மீனைப் பிடிக்க கற்றுக் கொடுப்பது சிறந்த்து "

இந்த கல்வி விழிப்புணர்வு கூட்டங்களில்
பேசும் பெருசுகள் மறக்காமல் சொல்லும்
ஏதோ ஒரு நாட்டின் பழமொழி இது.

அதைவிட அழகான ஒரு சம்பவம் அரபு நாட்டில் நடந்தது.
" எனக்கு மீனும் வேண்டாம்.
மீன் பிடிக்க கற்றுத் தரவும் வேண்டாம் .
மீன் கடையை மட்டும் காட்டு போதும்" னு சொன்ன ஆளுதான்
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ( ரலி ).

Sunday, March 27, 2016

பழங்கால இஸ்லாமிய தமிழ் இலக்கியங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும் – குமரி அபுபக்கர்

குமரி அபுபக்கர்


குமரி அபுபக்கர் – பழங்கால இஸ்லாமிய இலக்கியங்களை, குறிப்பாக சீறாப்புறாணம் உள்ளிட்டவற்றை மேடைகளில் பாடி வருபவர். அவர் அமீரகத்தில் உள்ள தனது மகன்களது குடும்பத்தினரை காண ஷார்ஜா வந்துள்ளார். ஷார்ஜாவில் உள்ள அவரது மகன் இல்லத்தில் சென்று அவரை முதுகுளத்தூர்.காம் ( www.mudukulathur.com ) சார்பில் சந்திக்கப்பட்டது.

http://mudukulathur.com/?p=39410

அவருடன் நடத்திய சந்திப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல் வருமாறு :

குமரி அபுபக்கர் அவர்கள் கடந்த 1937 ஆம் ஆண்டு ஏப்ரல் 22-ஆம் தேதி பிறந்தார். இவர் பிறந்த இடம் தற்போது கேரள மாநிலத்தில் உள்ள கொல்லங்கோடு பகுதியாகும். இவரது தகப்பனார் களியாக்காவிளை காஞ்சாம்புறம் மலிக் முஹம்மது. இவரது தாயார் பெயர் ஆயிஷா பீவி. 102 வயது வரை வாழ்ந்து கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் வஃபாத்தானார். இவருடன் பிறந்தவர்கள் மொத்தம் 10 பேர். அனைவரும் தற்போது இருந்து வருகின்றனர். இவர்களில் 8 பேர் ஆண்கள். இரண்டு பேர் பெண்கள்.
குமரி அபுபக்கர் கடந்த 1966-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களது மனைவி கடந்த 2005-ஆம் ஆண்டு வஃபாத்தானார். இவர்களுக்கு 3 ஆண்கள், இரண்டு பெண்கள். இவர்களில் ஒருவர் நசீமா பானு சென்னை முகம்மது சதக் கல்லூரி தமிழ்த் துறையில் பணிபுரிந்து வருகிறார். மேலும் சென்னை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும் இருந்து வருகிறார். மூன்று ஆண் பிள்ளைகளும் அமீரகத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

Thursday, March 24, 2016

அன்பின் மொழி! சகோதரத்துவத்தின் அறிக்கை !!


Yembal Thajammul Mohammad

சிறகை விரித்து உயரப் பறந்து
வானத்துக்கு வெளிச்சம் வழங்கியோர்
பூமியிடம் கூறுகின்றனர்: ---
”பூமியுடன் பிணைத்துக் கொண்ட
இந்தப் படைப்புகள் யாவும்
மிக்க உறுதியை ,
மேம்பட்ட உயிரோட்டத்தை,
மேலான பேரொளியை
வெளிப்படுத்த வேண்டும்”
ஈமான் (என்னும்
இறைநம்பிக்கை) கொண்டவர்கள்
இந்த உலகில்
சூரியனைப்போல் வாழ வேண்டும்;
(அதை விடுத்து)

Tuesday, March 15, 2016

அஸ்மா உல் ஹுஸ்னா Asma Ul Husna with Tamil Meaning by Raisudeen Qari -Gelioya

சுமை ….!

கல்வியும் ஒரு சுமைதான்
பணத்திற்காக விற்கப்படும் போது
வேலையும் ஒரு சுமைதான்
விருப்பம் இல்லாது செய்யும்போது

வாழ்வும் ஒரு சுமைதான்
இலக்கின்றி வழி நடக்கும்போது
பயணமும் ஒரு சுமைதான்
சேருமிடம் தெரியாதபோது

. வாழ்வில் ஒரு பகுதியை அதற்காக ஒதுக்குங்கள். மாற்றங்களை உணர்வீர்கள்....!

டெல்லியில் இருந்து கிளம்பியாச்சு...தப்லீக் நிகழ்வை முடித்து விட்டு பல தமிழக தப்லீக் சகோதரர்கள் எங்களுடன் ரயிலில் பயணிக்கின்றனர். தொப்பி, ஜுப்பா, தொழுகை, தஸ்பீஹ் என ரம்யமாக இருக்கிறது.

பயணம் தான்....

எவ்வளவு விஷயங்களை கற்றுக் கொடுக்கிறது.

இறைவனின் படைப்புகளை எண்ணி வியக்க வைக்கிறது.

தன்னம்பிக்கையை வளர்க்கிறது.

புதிய மொழிகளை கற்றுத் தருகிறது.

புதிய இடங்களை அறிமுகம் செய்கிறது.

மனிதர்களை அறிந்து கொள்ள,புதிய கலாச்சாரங்களை தெரிந்து கொள்ள உதவுகிறது.

சகிப்புத்தன்மை


சகிப்புத்தன்மை
வரவர ரொம்ப குறைந்து கொண்டே வருகிறது.
ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி.

ஆண்களிடம் மட்டும்
அந்த சகிப்புத்தன்மை இல்லையென்றால்
பெரும்பாலான வீடுகள்
அநாதை நிலையங்களாகி விடும்.

அழுது ஆர்ப்பாட்டம் செய்வதோ
சொல்லக்கூடிய சொல்லுக்கு
கண்ணு காது மூக்கு வைத்து
மிகைப்படுத்தி சொல்லும் இயல்போ
ஆண்களிடம் குறைவு.

இருப்பதை தின்றுவிட்டு
நல்லாயிருக்குன்னு சொல்ற பரந்த மனம் ஆண்களுக்குண்டு.
அது நன்றாக இல்லாமலிருந்தாலும் கூட.
ஒரு நாள் தப்பித் தவறி குறை சொல்லி விட்டால் ....
ஒரு வாரம் பட்டினி கிடக்க வேண்டி வரும்.
பெண்களுக்கு அவ்வளவு பெருந்தன்மை.

Tuesday, March 8, 2016

இஸ்லாத்தில் பெண்களின் நிலை என்ன ?! (STATUS OF WOMEN IN ISLAM)... ?!..


1. மனித இனத்தைப் பெருக்கிடச் செய்வதில் ஆண்களைப் போல் பெண்களுக்கும் சரியான பங்குண்டு. அதில் பெண், ஆணுக்கு முற்றிலும் சமமானவள்(அல்குர்ஆன்: 49:13, 4:1 )
2. தனக்கென இருக்கும் தனிப்பட்ட பொறுப்புகளிலும், குடும்பத்தின் மொத்த பொறுப்புகளிலும் பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர்களே! அதேபோல் அவர்கள் செயல்களுக்கு உரிய கூலியைப் பெறுவதிலும் அவர்கள் ஆண்களைப் போன்றவர்கள் தான்(அல்குர்ஆன்: 3:195, 9:71, 33:35-36, 66:19-21)
3. கல்வியையும், அறிவையும் தேடிப்பெறுவதில் ஆண்களுக்கு இருக்கும் அத்தனை உரிமைகளும் பெண்களுக்கும் உண்டு
4. ஆண்களைப்போல் பெண்களுக்கும் சுதந்திரம் உண்டு. அவளது கருத்துக்களை அவள் பெண் என்பதற்காகக் காரணங்காட்டி புறக்கணித்திட முடியாது. (திருக்குர்ஆன் 58:1-4, 60:10-12 )
5. பெண்களும் அவர்களுக்குரிய முறையில் பொதுவாழ்வில் ஈடுபடலாம்..குறிப்பாக நெருக்கடி காலங்களில் , போர் காலங்களில் பொதுவாழ்வில் பங்குகொண்டு பெரும்பணி ஆற்றியிருக்கின்றார்கள் என்பது இஸ்லாமிய உண்மை வரலாறு

Monday, March 7, 2016

தாடி - மீசை

தாடி நிச்சயமாக கம்பீரத்தின் அடையாளம்தான். ஆண்மையின் முக்கியமான அங்க அடையாளமாகத்தான் தாடி தொடக்கம் முதலே பார்க்கப்படுகிறது


கொரவம் மிக்க மனிதனின் அடையாளமாகவும் தாடி பலநேரங்களில் பார்க்கப்படுகிறது.

ஆனாலும் அப்படியே தாடியை ஐந்து பிளேட் சவரக்கருவியால் சரசரவென்று மழித்துவிட்டு கண்ணாடியில் பார்க்கும்போதே ஏற்படும் உற்சாகத்தை ஒவ்வொரு நாள் அதிகாலையும் இன்றே புதிதாய்ப் பிறந்ததைப் போல அனுபவிக்கும் ஆண்கள்தாம் உலகில் அதிகம்.

அன்றெல்லாம் இரண்டுநாள் தாடியோடு நின்றால், அவன் ஏதோ காதலில் தோல்வியடைந்தவன் அல்லது எதையோ பறிகொடுத்துவிட்டு நிற்பவன் என்று அர்த்தம். ஆனால் இன்று இரண்டு நாள் தாடியோடு இருக்கும் இளைஞன் உற்சாகமானவன்.

பூனை முடியோடு வளரும் முதல் தாடி மீசை என்பது பதின்ம வயது வாலிபர்களின் குறுகுறுப்பும் கிளர்ச்சியும் ஆகும்.

LinkWithin

Related Posts with Thumbnails