Tuesday, March 15, 2016
சகிப்புத்தன்மை
சகிப்புத்தன்மை
வரவர ரொம்ப குறைந்து கொண்டே வருகிறது.
ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி.
ஆண்களிடம் மட்டும்
அந்த சகிப்புத்தன்மை இல்லையென்றால்
பெரும்பாலான வீடுகள்
அநாதை நிலையங்களாகி விடும்.
அழுது ஆர்ப்பாட்டம் செய்வதோ
சொல்லக்கூடிய சொல்லுக்கு
கண்ணு காது மூக்கு வைத்து
மிகைப்படுத்தி சொல்லும் இயல்போ
ஆண்களிடம் குறைவு.
இருப்பதை தின்றுவிட்டு
நல்லாயிருக்குன்னு சொல்ற பரந்த மனம் ஆண்களுக்குண்டு.
அது நன்றாக இல்லாமலிருந்தாலும் கூட.
ஒரு நாள் தப்பித் தவறி குறை சொல்லி விட்டால் ....
ஒரு வாரம் பட்டினி கிடக்க வேண்டி வரும்.
பெண்களுக்கு அவ்வளவு பெருந்தன்மை.
சகிப்புத்தன்மையும்
அனுசரிக்கும் குணமும்
இல்லாமல் போவதால்தான்
ஒரு சில இளவயசு கணவர்கள் தற்கொலையை
தேர்ந்தெடுக்கிறார்கள்.
அதிகரிக்கும் தலாக்குகள் ( விவாக ரத்து )
அடி தடி குத்து கொலை எல்லாவற்றிற்கும் பெரிதும் காரணமாக இருப்பது பெண்களின் வீண் பிடிவாதங்களும் பெருமையுமே ஆகும்.
நிறை குறைகளை பொருட்படுத்தாமல்
இணங்கி வாழ்ந்தால் இல்லறம்
இனிமை தரும் என்பதில் சந்தேகமில்லை.
Abu Haashima
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment