டெல்லியில் இருந்து கிளம்பியாச்சு...தப்லீக் நிகழ்வை முடித்து விட்டு பல தமிழக தப்லீக் சகோதரர்கள் எங்களுடன் ரயிலில் பயணிக்கின்றனர். தொப்பி, ஜுப்பா, தொழுகை, தஸ்பீஹ் என ரம்யமாக இருக்கிறது.
பயணம் தான்....
எவ்வளவு விஷயங்களை கற்றுக் கொடுக்கிறது.
இறைவனின் படைப்புகளை எண்ணி வியக்க வைக்கிறது.
தன்னம்பிக்கையை வளர்க்கிறது.
புதிய மொழிகளை கற்றுத் தருகிறது.
புதிய இடங்களை அறிமுகம் செய்கிறது.
மனிதர்களை அறிந்து கொள்ள,புதிய கலாச்சாரங்களை தெரிந்து கொள்ள உதவுகிறது.
தான் என்ற செருக்கை தகர்த்து சக மனிதர்களோடு இயல்பாக பழகும் உணர்வை வளர்க்கிறது.
சூழலை சமாளிக்கும் திறனை அளிக்கிறது.
புதிய அனுபவங்களை வழங்குகிறது.
பைக்கோ,காரோ,பஸ்ஸோ,ரயிலோ, விமானமோ எதிலாவது,
மலையோ,அருவியோ,பள்ளதாக்கோ,ஊரோ ஏதாவது ஒரு இடத்துக்கு
பயணியுங்கள். வாழ்வில் ஒரு பகுதியை அதற்காக ஒதுக்குங்கள்.
மாற்றங்களை உணர்வீர்கள்....!
(படம் : டெல்லி மெட்ரோ ரயில் நிலையம் )
இனிய வன்
No comments:
Post a Comment