Wednesday, April 27, 2016

பெருமைமிகு நாகூர்


உலகளாவிய பெருமை வாய்ந்த, நாகூரை பூர்வீகமாகக் கொண்ட, ஒரு மாமனிதரைப் பற்றி நான் விரைவில் எழுதப்போகிறேன் என்று ஒரு பதிவை முகநூலில் எழுதியிருந்தேன்.

“நாகூரையும் நாகூர்க்காரர்களையும் விட்டால் உங்கள் கண்ணுக்கு வேறு யாரையும் தெரியவே தெரியாதா?” என்று என்னைக் குடைகிறார்கள். “குண்டு சட்டிக்குள் ஏன் குதிரை ஓட்டுகிறீர்கள்?” என்று சாடுகிறார்கள்.

நாகூரைப் பற்றிய அரிய தகவல்களை அள்ளி நான் தெளிக்கையில் அது “காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு” என்ற ரீதியில் தம்பட்டம் அடிக்கும் சுயபுராணம் என்று கருத்தில் கொள்ளலாகாது.

காமதேனுவும் அமுதசுரபியும் உண்மையில் இருந்ததா இல்லையா என்று எனக்குத் தெரியாது. ஆனால் நாகூரின் சிறப்பு என்பது அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியைப் போன்றது.

Thursday, April 21, 2016

இறை நம்பிக்கை முஸ்லிம்களின் அரண்.

Abu Haashima
இறை நம்பிக்கை
முஸ்லிம்களின் அரண்.
சகல ஆபத்துகளை விட்டும்
இறையடியானைக் காப்பாற்றும் கோட்டை.!
முழுமையாக அல்லாஹ்வை நம்பினால்
அவன் கைவிடவே மாட்டான்.
சில நண்பர்கள் கஷ்டங்களை சொல்லி வருந்தும்போதும்
மனம் கலங்கும்போதும்
நம்மால் ஆறுதல் சொல்லத்தான் முடிகிறது.
வெறும் ஆறுதலைக் கொண்டு
என்ன செய்ய முடியும் ?
என்ற அவநம்பிக்கை அவர்களை
வாட்டி வதைக்கிறது.

வாழ்க்கையின் சந்தோசங்கள் ....

அப்துல் கபூர் 

வாழ்க்கையின் சந்தோசங்கள் ....
தாயின் சிரிப்பும்
தந்தையின் பூரிப்பும்
மனைவியின் நற்குணமும்
கணவனின் நற்பண்பும்
மாமியாரின் அரவணைப்பும்
மருமகளின் அர்ப்பணிப்பும் ....
மாணவனின் ஒழுக்கமும்
ஆசிரியரின் பாராட்டும்
தேர்வுதனில் வெற்றியும் ..

Monday, April 18, 2016

அனைத்தும் திட்டமேயன்றி வேறென்ன?

வழக்கமாகத் தன் காரில் என்னை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லும் நண்பர், இன்று விடுமுறை எடுத்துக் கொள்ளப் போவதாக நேற்றே தெரிவித்து விட்டார். அதனால் என்னுடன் பணிபுரியும் மற்றொரு நண்பருக்குத் தகவல் அனுப்பி, அழைத்துச் செல்லும்படி கோரியிருந்தேன். அவரோ தானும் பணிக்கு வர இயலவில்லை என அனுப்பி இருந்த மறுமொழியை, தாமதமாக இன்று விடிகாலை 5.35 மணிக்கு தான் பார்க்க நேரிட்டது.
உடனே மூன்றாம் நபரைத் தொடர்பு கொண்டேன். பாகிஸ்தானைச் சேர்ந்த முதியவர் அவர். தளர்ந்து விட்ட வயதிலும் அயராது உழைப்பவர். சில அவசரச் சூழல்களில் அவர் எனக்கு உதவியுள்ளார். வீட்டிலிருந்து தான் கிளம்பிவிட்டதாகவும் சில நிமிடங்களில் அப்பகுதியின் முக்கியச் சாலைக்கு என்னை வந்து நிற்கும்படியும் கூறினார்.

உங்கள் தேர்வு! (கோபம்)


ரஹ் அலி, M.S.D..உடன்குடி

(இறைவன் மீது பயபக்தியுடையோர்) தங்களின் கோபத்தை மென்று விழுங்கி விடுவார்கள். மனிதர்களின் குற்றங்களை மன்னித்து விடுவார்கள். அல்லாஹ் இத்தகைய நல்லோர்களை நேசிக்கின்றான். (அல்குர்ஆன் 3:134)

பொதுவாக இந்த உலகில் வாழும் நாம் ஒவ்வொருவருமே, விரும்பினாலும், விரும்பா விட்டாலும், பிற மனிதரோடு இணைந்தே வாழ வேண்டிய நிலையில் இருக்கிறோம். அந்தப் பிற மனிதன், நமது கணவனாக, மனைவியாக, நண்பனாக உறவினராக, சகபணியாளனாக, மாற்று மதத்தைச் சார்ந்தவர்களாக, இப்படி பல்வேறு வகையினராக இருக்கலாம். அவர்கள் அனைவருமே, நல்லவர்களாக இருந்திடுவதில்லை. அவர்களில் ஒருசிலர் தீயவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் நமக்கு தீங்கு விளைவிக்கும்போது, அவமானப்படுத்தும் போது ஆத்திரம் வரும். பழிவாங்க வேண்டும் என்று நமது உள்ளம் ஆர்ப்பரிக்கும். அதுதான் இயற்கையும் கூட.

Sunday, April 10, 2016

அமைதி மேலும் மேலும் உன் வாழ்வில் நிலவட்டும்


அன்புச் சகோதரனே...!
அன்னையை இழந்து, 
அமைதியை இழந்து
அலைபாயும் மனதுடன் நீ பரிதவித்து 
அல்குர்ஆனை பற்றி 
அமைதி மார்க்கத்தில் நுழைந்தாய்.
இன்று மன அமைதி தரும்
இறை அருட்கொடையான 
பெண் குழந்தையை பெற்று இருக்கிறாய்
கையில் பற்றி இருக்கிறாய்.
உன் முகத்திலுள்ள மலர்ச்சியை கண்டு
உன்னை விட நாங்கள் மகிழ்கிறோம்
எங்கள் சகோதரனே.
அமைதி மேலும் மேலும் உன் வாழ்வில் நிலவட்டும்
மனமகிழ்ச்சியுடன் எங்கள் துஆக்கள்.


Hyder Ali Hyderali

Saturday, April 9, 2016

குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு!

குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு!


எழுதியவர்  

தற்போது உள்ள சூழ்நிலையில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற செயல்களில் இளைஞர்கள் அதிகம் ஈடுபட்டுக்கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. சமீபத்தில் குமரி மாவட்டத்தில் காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் என்ற செய்தி ஊடகத்தில் பரவலாக காண நேரிட்டது. உள்ளே சென்று பார்த்தால் அதிர்ச்சி காத்திருக்கின்றது. முஸ்லிம் பெயர் தாங்கிய ஒரு மாணவி, மாற்று மதத்தைச் சேர்ந்த ஒருவருடன் கள்ளத்தொடர்பு! இது ஏதோ தனிப்பட்ட செய்தியல்ல! ஊடகங்களில் இதுபோன்ற செய்திகளை பரவலாக காணமுடிகிறது. நம்மவர்கள், குறிப்பாக இளம் வயதினர்கள் இதுபோன்ற குற்றங்களில் அதிகம் ஈடுபடுவதற்கு முதல் குற்றவாளியாக அவர்களுடைய பெற்றோர்களை நிறுத்தலாம். சிறுவயது முதல் தாய்பாசத்தோடு சேர்த்து நற்போதனைகளையும் ஊட்டிவளர்க்கப்படாத குழந்தைகள் தான் பிற்காலங்களில் அவர்கள் பெரியவர்களான பிறகு இதுபோன்ற செயல்களில் அதிகம் ஈடுபடுகின்றனர். அவர்களுடைய வீடு, கல்வி, தொழில் சூழல்களில் மருந்துக்குக்கூட மார்க்கத்தை நாம் காணமுடியாது! கண்ணியமாக மார்க்க அடிப்படையில் வளர்க்கப்பட்ட குழந்தைகளால் தான் ஒரு சமுதாயத்தைச் சிறப்புறச் செய்யமுடியும்.

பாராளுமன்றங்களும், முஸ்லிம் பெண்களும்..

பாராளுமன்றங்களும், முஸ்லிம் பெண்களும்..
நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக..ஆமீன்.

சமீபத்தில் நான் பார்த்த தகவல் மிக சுவாரசியமாக இருந்தது. பழம்பெரும் அமைப்பான "Inter-Parliamentary Union", சில மாதங்களுக்கு முன்பாக, பாராளுமன்றங்களில் உள்ள பெண்களின் எண்ணிக்கை குறித்த தகவல்களை வெளியிட்டிருந்தது. சுமார் 188 நாடுகளின் தகவல்களை கொண்டு தரவரிசையை வெளியிட்டிருந்தது.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பல நாடுகள் அந்த பட்டியலில் முதல் 50 இடங்களில் இடம்பிடித்திருந்தன.

பெண்களை அதிகமாக பாராளுமன்றத்திற்கு அனுப்பும் முஸ்லிம் நாடுகளின் வரிசையில் துனிசியா இரண்டாம் இடத்தில் இருக்கின்றது. இங்கு பாராளுமன்ற உறுப்பினர்களில் 26.3% பேர் பெண்கள். பொது இடங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நாட்டில் இன்று ஹிஜாபுடன் பாராளுமன்றத்தில் பெண்கள்.

துனிசியா நம்மை ஆச்சர்யப்படுத்த இன்னொரு காரணமும் உண்டு. புரட்சிக்கு பிறகு துனிசியாவில் ஆட்சியை பிடித்தது மீடியாக்களால் இஸ்லாமிய கட்சி என்று அழைக்கப்படும் Ennahda கட்சியே. மீடியாக்களால் இஸ்லாமியவாதிகள் என்று அழைப்பட்ட இவர்கள் அதிக அளவிலான பெண்களை வேட்பாளர்களாக நிறுத்தியிருந்தனர். முடிவோ, இன்று துனிசிய பாராளுமன்றத்தில் நிறைய பெண் உறுப்பினர்கள்.





ஆச்சர்யங்களுக்கு எல்லாம் மகுடம் வைத்தார் போல இருந்தது, ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றம் குறித்த தகவல் தான். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளின் வரிசையில் இந்த நாட்டிற்கே முதல் இடம். ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்தில் 27.7% பேர் பெண்கள்.

LinkWithin

Related Posts with Thumbnails