Thursday, April 21, 2016

வாழ்க்கையின் சந்தோசங்கள் ....

அப்துல் கபூர் 

வாழ்க்கையின் சந்தோசங்கள் ....
தாயின் சிரிப்பும்
தந்தையின் பூரிப்பும்
மனைவியின் நற்குணமும்
கணவனின் நற்பண்பும்
மாமியாரின் அரவணைப்பும்
மருமகளின் அர்ப்பணிப்பும் ....
மாணவனின் ஒழுக்கமும்
ஆசிரியரின் பாராட்டும்
தேர்வுதனில் வெற்றியும் ..
..
உள்ளத்தில் உண்மையும்
தர்மத்தில் தாராளமும்
உழைப்பில் நேர்மையும்
சிந்தனையில் விவேகமும்
செய்கையில் சுறுசுறுப்பும் 
பயணத்தில் சுகந்தமும் ....
நல்லவரோடு இணக்கமும்
தீயவரோடு பிணக்கமும்
வட்டாரத்தோடு நெருக்கமும்
சமூகத்தோடு சுமூகமும் ....
நண்பனின் பேருதவியும்
உறவினரின் புரிதலும்
குடும்பத்தில் குதூகலமும் 
பிள்ளைகளின் நன்னடத்தையும்
வாரிசுகளின் ஒற்றுமையும் ....
ஆரோக்கியமான தேகமும்
அமைதியான தேசமும்
வாழ்க்கையில் வசந்தமும் 
இறையோனின் கிருபையும் ....
இவைகள் அனைத்தும் 
வாழ்க்கையதில் அணிவகுத்தால்
சந்தோசங்களுக்கு பஞ்சமேது ..
.
Abdul Gafoor
.
அப்துல் கபூர் 

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails