Abu Haashima
இறை நம்பிக்கைமுஸ்லிம்களின் அரண்.
சகல ஆபத்துகளை விட்டும்
இறையடியானைக் காப்பாற்றும் கோட்டை.!
முழுமையாக அல்லாஹ்வை நம்பினால்
அவன் கைவிடவே மாட்டான்.
சில நண்பர்கள் கஷ்டங்களை சொல்லி வருந்தும்போதும்
மனம் கலங்கும்போதும்
நம்மால் ஆறுதல் சொல்லத்தான் முடிகிறது.
வெறும் ஆறுதலைக் கொண்டு
என்ன செய்ய முடியும் ?
என்ற அவநம்பிக்கை அவர்களை
வாட்டி வதைக்கிறது.
இப்ராஹீம் நபியை நெருப்புக் குண்டத்தில் தூக்கிப் போட்டான் கொடியவன் நம்ரூது.
ஜிப்ரயீல் ( அலை ) அவர்கள் வந்து
என்ன உதவி வேண்டும் என இப்ராஹீம் நபியிடம் கேட்டார்.
இப்ராஹீம் நபியோ ...
" ஹஸ்புனல்லாஹு வ நிஃமல் வகீல் "
என்று பதிலுரைத்தார்.
" அல்லாஹ்வே எனக்குப்
போதுமானவன் "
என்பது அதன் பொருள்.
அவரது
இறைநம்பிக்கை
ஈமானின் உச்சம்.
நொடியில் பொசுங்கிப் போகும்
அந்த கடைசி நேரத்திலும்
இறைவன் மீது அசைக்கமுடியாத
நம்பிக்கையோடு
இறைவன் எனக்குப் போதுமானவன் என்றார் இப்ராஹீம் நபி.
" இறைவா காப்பாற்று " என்று கூட சொல்லவில்லை.
உயிரோடு
இருப்பதோ
இல்லை
இறப்பதோ
எதுவாயினும்
அவன் பொறுப்பு
என்பதே அவர் மொழிந்த
ஹஸ்புனல்லாஹ்வு வ நிஃமல் வகீல்
என்ற நம்பிக்கையின் சாறு.
அது இருந்தால் போதும் .
நிச்சயமாக
சோதனைகளிலிருந்து
உங்களையும்
என்னையும்
அல்லாஹ் காப்பாற்றுவான்.!
ஹஸ்புனல்லாஹு வ நிஃமல் வகீல் ...
No comments:
Post a Comment