சிந்திப்பவர்களுக்கு நிறைய தெளிவுகள் இதில் இருக்கிறது..
"திண்ணமாக நாம் மனிதனை விந்திலிருந்து படைத்திருக்கின்றோம் என்பதை அவன் பார்க்கவில்லையா என்ன? ஆனால் அவ்வாறிருந்தும் (நம்மை எதிர்த்து) வெளிப்படையாக தர்க்கம் புரிபவனாகிவிட்டான்".(36:77)
"மனிதனின் நிலை எவ்வாறு உள்ளதெனில் அவனுக்கு நாம் நம்முடைய அருட்பேற்றைச் சுவைக்கச் செய்தால் அதன்
பேரில் அவன் பூரிப்படைகின்றான்.
மேலும், அவனுடைய கைகள் செய்த தீவினையின் காரணத்தினால், ஏதேனும் துன்பம் அவனைத் தொட்டுவிட்டால், அவன் மிகவும் நன்றி கெட்டவனாகி விடுகின்றான்."(42:48)
"நன்மையை வேண்டுவதில் மனிதன் எப்போதும் சோர்வுறுவதில்லை. ஏதேனும் துன்பம் அவனைத் தொட்டு விட்டால், நம்பிக்கை இழந்தவனாகவும் மனம் நொந்தவனாகவும் ஆகிவிடுகின்றான்".(41:49)
"மனிதனுக்கு நாம் அருட்பேறுகளை வழங்கும்போது அவன் புறக்கணிக்கின்றான்.
Monday, March 26, 2018
Monday, March 19, 2018
தமிழ் மற்றும் ஆங்கில இஸ்லாமிய பாடல்கள் பதிவிறக்கம் செய்துக் கேளுங்கள்
தமிழ் மற்றும் ஆங்கில இஸ்லாமிய பாடல்கள் பதிவிறக்கம் செய்துக் கேளுங்கள்: 6Keralak Karaiyoram Valum.mp3 6Allahoo Allahoo.mp3 6Ajmeerin Raja Anmeega.mp3 5Vallal Nabiye Varaathathen.mp3 5Vaanoog...
Sunday, March 18, 2018
உங்கள் பிள்ளைகளின் ஆற்றல்களை கூட்ட உதவிட முடியும்
ஒவ்வொரு பிள்ளைகளும் ஒவ்வொரு விதமான குணமும் திறமையும் அனுபவமும் இருக்கும். அந்த குணத்தையும் திறமையும் அனுபவத்தையும் நீங்களோ அல்லது உங்கள் பிள்ளைகளோ விளங்கிக் கொள்ளாமல் இருக்கலாம் எப்படியென்றால் ஒருவருக்கு நல்ல படித்ததை, கேட்டதை விளங்கிக் கொள்ளும் ஆற்றல் இருக்கும் ஆனால் அதை விளங்கி கூற, எழுத ஆற்றல் இருக்காது. மற்றவருக்கு விளக்கும் அதாவது கற்றதை விளக்கம் கொடுக்கும் ஆற்றல் இருக்கும் ஆனால் விளங்கும் ஆற்றல் மிக குறைவாக இருக்கும் இதற்கு காரணம் தனது சிந்தனைகளை மறுபக்கம் செலுத்துவது.
இப்படிப்பட்ட ஒருவர் அல்லது உங்கள் பிள்ளைகளுக்கு அவர்களுக்கு மிக குறைவாக இருக்கும் ஆற்றல்களுக்கு நீங்களோ அல்லது அவர்களோ பின்புறமாக இருந்து அவர்களின் ஆற்றல்களை கூட்ட முடியும். எப்படியென்றால்
அதுதான். "" உங்களின் துஆ அதாவது பிரார்த்தனை, திக்ரு""
Wednesday, March 14, 2018
மானிட சேவையே இறைவனுக்கான சேவை
மானிட சேவையே இறைவனுக்கான சேவை (இறைவன் தேவைகளற்றவனாதலால் அவனுக்கு யாரும் சேவை செய்ய முடியாது) என்பதை உணர்த்தும் ஒரு அழகான நபிமொழி. நான் சமீபத்தில் முழுமையாகப் படித்து முடித்த ஆதாரப்பூர்வமான நபிமொழித்தொகுப்பான ஸஹீஹ் முஸ்லிம் என்ற தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது (ரஹ்மத் அறக்கட்டளை வெளியீடு, மின் நூல்).
நபிமொழி எண் 5021
அறிவிப்பவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர் அபூ ஹுரைரா அவர்கள் (இறைவன் அவரைப் பொருந்திக்கொள்வானாக)
நபிமொழி எண் 5021
அறிவிப்பவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர் அபூ ஹுரைரா அவர்கள் (இறைவன் அவரைப் பொருந்திக்கொள்வானாக)
Tuesday, March 13, 2018
காலத்தின் மீதாணையாக!
(மூலம்: சூரா அல்-அஸ்ர் 103: அல் குர் ஆன்)
இன்னும் விடியாத
இருள் சூழ்ந்தப் பொழுதல்ல;
இனிதாய் உதித்துவிட்ட
இளங்காலை நேரமுமல்ல;
உலகே விழித்துக்கொள்ள
உருவானச் சமயமல்ல;
உச்சியில் கதிரவனின்
உஷ்ணமான காலமுமல்ல;
மதியம் சாயங்காலமாகும்
காலத்தின்மீ தாணையாக
மனிதன் என்றென்றும்
நஷ்டத்தில்தான் இருக்கிறான்...
Wednesday, March 7, 2018
முன்னாள் துணை குடியரசுத் தலைவருக்கும் தகவல் உரிமைப் போராளி அருணா ராய்க்கும் அரசியல் / பொதுவாழ்வில் நேர்மைக்கான காயிதே மில்லத் விருது
முன்னாள் துணை குடியரசுத் தலைவருக்கும் தகவல் உரிமைப் போராளி அருணா ராய்க்கும் அரசியல் / பொதுவாழ்வில் நேர்மைக்கான காயிதே மில்லத் விருது
காந்தியடிகளின் பேரர் கோபாலகிருஷ்ண காந்தி வழங்கினார்.
2018-ம் ஆண்டுக்கான ‘அரசியல் / பொதுவாழ்வில் நேர்மைக்கான காயிதே மில்லத் விருதை’ முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் மேதகு முஹம்மது அன்சாரிக்கும் சமூக ஊழியர் அருணா ராய் அவர்களுக்கும் காந்தியடிகளின் பேரரும் முன்னாள் மே.வங்க ஆளுநரும் ஆன மாண்புமிகு கோபால கிருஷ்ண காந்தி சனிக்கிழமையன்று (பிப்ரவரி 24) காலையில் சென்னையின் தாம்பரம் அருகில் மேடவாக்கத்தில் உள்ள காயிதே மில்லத் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் வழங்கினார்.

Thursday, March 1, 2018
சிரியா வழிச் சிந்தனைகள்
முஸ்லிமே
முஸ்லிமைக் கொல்லும்
முஸ்லிம் அவலமா?
உன்னிடம்
அஸ்ஸலாமு அலைக்கும்
(அன்பும் அமைதியும் நிறைக)
அழிந்து போனதா?
முஸ்லிமைக் கொல்லும்
முஸ்லிம் அவலமா?
உன்னிடம்
அஸ்ஸலாமு அலைக்கும்
(அன்பும் அமைதியும் நிறைக)
அழிந்து போனதா?
Subscribe to:
Posts (Atom)