Tuesday, March 13, 2018

காலத்தின் மீதாணையாக!


(மூலம்: சூரா அல்-அஸ்ர் 103: அல் குர் ஆன்)
இன்னும் விடியாத
இருள் சூழ்ந்தப் பொழுதல்ல;
இனிதாய் உதித்துவிட்ட
இளங்காலை நேரமுமல்ல;
உலகே விழித்துக்கொள்ள
உருவானச் சமயமல்ல;
உச்சியில் கதிரவனின்
உஷ்ணமான காலமுமல்ல;
மதியம் சாயங்காலமாகும்
காலத்தின்மீ தாணையாக
மனிதன் என்றென்றும்
நஷ்டத்தில்தான் இருக்கிறான்...

மறை வானவற்றையும்
மறை ஆணையிட்டவையும்
இறை தந்த மார்க்கத்தையும்
நிறை மனதாய் ஏற்று
சோதனைகளைச் சகித்து
வேதனைகளைப் பொறுத்து 
நல்லறங்கள் செய்து
அல்லாதவற்றைத் தவிர்த்து
சத்தியத்தை நேர்மையாகவும்
பொறுமையைப் பவ்யமாகவும்
தமக்கிடையே உபதேசிக்கும்
நல்லோர்களைத் தவிர !
-சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails