Sunday, March 18, 2018

உங்கள் பிள்ளைகளின் ஆற்றல்களை கூட்ட உதவிட முடியும்


ஒவ்வொரு பிள்ளைகளும் ஒவ்வொரு விதமான குணமும் திறமையும் அனுபவமும் இருக்கும். அந்த குணத்தையும் திறமையும் அனுபவத்தையும் நீங்களோ அல்லது உங்கள் பிள்ளைகளோ விளங்கிக் கொள்ளாமல் இருக்கலாம் எப்படியென்றால் ஒருவருக்கு நல்ல படித்ததை, கேட்டதை விளங்கிக் கொள்ளும் ஆற்றல் இருக்கும் ஆனால் அதை விளங்கி கூற, எழுத ஆற்றல் இருக்காது. மற்றவருக்கு விளக்கும் அதாவது கற்றதை விளக்கம் கொடுக்கும் ஆற்றல் இருக்கும் ஆனால் விளங்கும் ஆற்றல் மிக குறைவாக இருக்கும் இதற்கு காரணம் தனது சிந்தனைகளை மறுபக்கம் செலுத்துவது.

இப்படிப்பட்ட ஒருவர் அல்லது உங்கள் பிள்ளைகளுக்கு அவர்களுக்கு மிக குறைவாக இருக்கும் ஆற்றல்களுக்கு நீங்களோ அல்லது அவர்களோ பின்புறமாக இருந்து அவர்களின் ஆற்றல்களை கூட்ட முடியும். எப்படியென்றால்

அதுதான். "" உங்களின் துஆ அதாவது பிரார்த்தனை, திக்ரு""


இன்றையக் காலகட்டத்தில் உங்கள் பிள்ளைகள்  SSLC, +11, +12 மற்றும் தேர்வில் தனிமையில் இருக்கிறார்கள் அந்த நிலையில் யாரும் அவர்களுக்கு உதவிட முடியாது ஆனால் உங்கள் துஆ வால் பிரார்த்தனை, திக்ரைக் கொண்டு உதவிட முடியும்.

உங்கள் பிள்ளைகளுக்காக நீங்களோ அல்லது உங்கள் பிள்ளைகளோ கீழே உள்ள இறைவசனத்தை ஒவ்வொரு முறையும் நூறு தடவை ஓதி, நூறு சலவாத் ஓதுங்கள்.

قَالَ رَبِّ اشْرَحْ لِىْ صَدْرِىْ ۙ‏ 
ரப்பீஷ் ஷரஹ்லீ சத்ரீ

وَيَسِّرْ لِىْۤ اَمْرِىْ ۙ‏ 
வயஸ்ஸிர்லீ அம்ரீ

وَاحْلُلْ عُقْدَةً مِّنْ لِّسَانِیْ ۙ‏ 
ஹுஹ்லுல் உக்ததம் மினல் லிஸானீ

يَفْقَهُوْا قَوْلِیْ ‏ 
யfப்கஹூ கவ்லீ

(அல்குர்ஆன் : 20:26,27,28)

அல்லது يا فتاح யா fபத்தாஹ் என்ற இறை திருநாமத்தை, நூறு சலவாத் ஓதிய பிறகு நூறு தடவை يا فتاح fபத்தாஹ் என்று நூறு தடவை ஓதி துஆ செய்யுங்கள். இப்படி நீங்கள் ஓதி துஆ செய்வதால் உங்களால் உங்கள் பிள்ளைகளுக்கு அல்லாஹ் உடைய உதவியும் வெற்றியும் கிடைக்கும்.

         மௌலவி கலீfபா
  அஹமது மீரான் சாஹிப்
        உஸ்மானி ஆலிம்
கலீபத்துல் காதிரி வஷத்தாரி
          மேலப்பாளையம்
            திருநெல்வேலி

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails