Monday, November 12, 2018

எந்த நிலையில் இருந்தாலும் லைக் கொள்ள வேண்டும்.

ஒரு சின்ன கதை சூதாடி தனது மனைவியிடம் கெஞ்சினான் இதுதான் எனது கடைசி முயற்சி ஏனொன்றால் நான் என்னிடம் உள்ள அனைத்தையும் சூதாட்டத்தில் இழந்து விட்டேன். இப்போது என்னிடம் ஒரேயொரு ரூபாய்தான் இருக்கிறது இதை வைத்து சூதாடி முயற்ச்சிக்கிறேன் இதற்கு பிறகு என்னால் சூதாட முடியாது ஏனென்றால் இதன் பிறகு என்னிடம் எதுவும் இல்லை என்று கூறி சூதாட சென்றான். மனைவிக்கு ஒரு சியதான சந்தோஷம் இதன் பிறகு கணவர் சூதாட மாட்டார் என்று.

அந்த சூதாடி கடைசியாக இருந்த ஒரு ரூபாய் வைத்து பல லட்சம் கிடைத்தது ஆனால் அதனுடன் திரும்பி வராமல் அந்த பல லட்சத்தையும் வைத்து சூதாடினான் கடைசியில் அனைத்தையும் தொற்றான்.


மனைவியிடம் வந்து சொன்னான் கடைசியாக இருந்த ஒரு ரூபாயும் தொற்று விட்டேன் என்றான். அவன் எண்ணினான் ஏன் பல லட்சம் பெற்றதை சொல்ல வேண்டும். விட்டதை மட்டும் சொன்னான்.

ஒருவர் வீடு வாசல், கார் பங்களா, சொத்து, புகழ் மரியாதை, அனைத்தையும் சம்பாதித்து திடீர் அல்லது வேறொரு வழியில் இழந்தவரும்;  இதை அனைத்தையுமே பெறாமல் இருப்பவரும் ஏதோ அனைத்தையுமே இழந்து விட்டதாக நினைத்து கவலையில் தன்னைத்தானே இழுக்கவும் முடிவு செய்து விடுகிறார்கள். இந்த நிலை இறை பக்தி உடையவரையும் பாதிக்கிறது இறை பக்தி இல்லாதவரையும் பாதிக்கிறது.

உங்கள் வாழ்க்கையில் வளம் என்பது மகிழ்ச்சியும் வல்ல. ஏழ்மையான நிலையில் இருப்பது கவலையும் அல்ல.

நீங்கள் இங்கே எதனையும் பெறலாம் இழக்கலாம் ஆனால் ஒன்றை மட்டும் இழக்கக் கூட அந்த ஒன்று என்னென்பது உங்களுக்கு தெரியுமா ?. அந்த ஒன்றுதான் " நீங்கள்"

நீங்கள் உங்களுடன் இங்கே கொண்டு வந்தது  எதுவுமல்ல நீங்கள் மட்டும்தான். இறுதி நாளில் நீங்கள் உங்களுடன் கொண்டு சென்றதை கொண்டு வந்து இருக்கிறீர்களா ?. அல்லது நீங்கள் மற்றவற்றுடன் செர்த்து உங்களையும் தொலைத்து விட்டீர்களா ?. என்ற கேள்வியுடன் ஆரம்பமாகும்...

இறுதி நாளில் இப்படியொரு கேள்விக்கு அந்த சூதாடி தனது மனைவியிடம் சொன்ன பதில் போல்தான் சொல்ல முடியும்.

அதனால் நீங்கள் சம்பாதிக்க கூட,  வாழக்கூடாது, என்று நான் கூற வில்லை. நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் உங்களுக்குள் நீங்கள் நிலைக் கொள்ள வேண்டும். அப்போதுதான் உங்களை நீங்கள் தொலைக்காமல், நீங்கள் எப்படி வந்தீர்களோ அதே நிலையில் பதில் சொல்ல முடியும்.

இது உங்களுக்கு புரியவில்லை என்றால் இறுதி நிலையில் இருக்ககூடியவரை போய் பாருங்கள் அவர் கண்களைப் பாருங்கள் அவர் தேடுவதும் தெரியும், அவர் தொளைத்ததும் தெரியும், அவரின் பதிலும் தெரியும்.

وَالْعَصْرِۙ‏
காலத்தின் மீது சத்தியமாக!

اِنَّ الْاِنْسَانَ لَفِىْ خُسْرٍۙ‏
மனிதன் உண்மையில் நஷ்டத்தில் இருக்கிறான்.
(அல்குர்ஆன் : 103:1,2)

        மௌலவி கலீfபா
  அஹமது மீரான் சாஹிப்
        உஸ்மானி ஆலிம்
கலீபத்துல் காதிரி வஷத்தாரி
          மேலப்பாளையம்
            திருநெல்வேலி

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails