சூஃபி ஞானிகளான இறைநேசர்களை தவறாக நினைப்பவர்களும், நேசிப்பவர்களும், அவர்களின் மூலமாக நிறையப் பெறக்கூடிய வர்களும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அனைவரும். சூஃபி ஞானிகளின் வாழ்க்கையை உற்று நோக்க தவறி விடுகிறார்கள்.
இறைநேசர்கள்.ஞானம் பெற்றுவதற்காக அவர்கள் அடைத்துக் கொண்ட வலி உங்களுக்கு தெரியுமா ? . அப்படியொரு மறுபக்கத்தை தான் நீங்கள் பார்க்க, அறிய, உணர முயற்சி செய்து இருக்கிறீர்களா?. அவர்களைப் பற்றி கேட்டதெல்லாம், படித்ததெல்லாம், கூறியதெல்லாம், உங்களுக்கு சாதகமாகவும், காப்பாற்ற கூடியவராகவும் காராமாத் அற்புதம் செய்யக்கூடியவறாகவும் மட்டுமே தவிர வேறு ஒன்றுமில்லை என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள்.
இறைநேசர்களுக்கும் உங்களுக்கும் ஏதொ ஒரு நூலிழையில் அல்லது வானத்திற்கும் பூமிக்கும் இடையே உள்ள வித்தியாசம் இருக்கிறது என்பதையும் உங்களால் உணர முடிந்தால் அவர்கள் ஞானம் அடைந்ததையும் நீங்கள் அந்த இடத்தை பெற முடியாதையும் உங்களால் உணரமுடியும்.
இறைநேசர்கள் இறை நெருக்கத்தையும், இறை அன்பையும், இறை ஞானத்தை தேடி அலையும் போதும் அதிலோயே முயற்சி செய்து இருக்கும் போதும் அவர்கள் உடலால், உயிரால், மனதால், ஆன்மாவால் பெற்ற வலி, அவமானம், கேவலம், அவமதிப்பு, புறக்கணிப்பு, வறுமை, துன்பம், துயரம், நோய், அவசொற்கள் இன்னும் அனைத்தையும் "அல்லாஹ்" என்ற ஒற்றை சொல்லால் தாங்கிக் கொண்டு மிகப் பொறுமையாக இறை ஞானத்தையும், இறைப் பொறுத்தையும் தனது இலக்காக கொண்டு இருந்த சூஃபி ஞானிகளான இறைநேசர்களை பார்த்து கூறினான் இறைவன்.
وَ لِرَبِّكَ فَاصْبِرْ
உம் இறைவனுக்காகப் பொறுமையைக் கைக்கொள்வீராக!
(அல்குர்ஆன் : 74:7)
நீங்கள், அவர்களின் உண்மையான வாழ்வையும், உண்மையான சுயத்தையும், நீங்கள் பார்க்கத் தவறிய வாழ்கையை பாருங்கள் உணருங்கள், அவர்களைப் புரிந்து கொள்ளுங்கள் அப்போதுதான் புரியும் இறை ஞானம் அடைவது, புத்தகத்தை படித்து விட்டு நானும் இறைநேசர்கள் என்று கூறுவது சரியா என்று.
நீங்கள் சுய அனுபவம் இல்லாத எதுவுமே உங்களுடையல்ல.
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لِمَ تَقُوْلُوْنَ مَا لَا تَفْعَلُوْنَ
இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் செய்யாதவற்றை ஏன் சொல்கின்றீர்கள்?
(அல்குர்ஆன் : 61:2)
மௌலவி கலீfபா
அஹமது மீரான் சாஹிப்
உஸ்மானி ஆலிம்
கலீபத்துல் காதிரி வஷத்தாரி
மேலப்பாளையம்
திருநெல்வேலி
No comments:
Post a Comment