Wednesday, April 7, 2010

அன்னையே அமுதம் தா


அவசர உலகமென்றபோதும்
அன்னை என்றென்றும் அன்னையே!

அழகு குறைந்து விடும் என்று
அழுகிற குழந்தைக்கு அமுதூட்ட
மறுக்கலாமா

ஆபீஸ்போகும் அவசரமானாலும்
அன்னம் ஊட்டிவிட நேரமில்லாமல்
போகலாமா

பெற்றபிள்ளைகளிடம் மனம்விட்டு பேச
பெற்றவளுக்கு நேரமில்லை
பணப்பிடியில் சிக்கிக்கொண்டு
பாசத்தை ஒதுக்கி   பறந்து திரிகிறாள்

பணம்வந்து சேர்ந்தபின்
பந்தபாசம் வந்து கிட்டுமா
தள்ளி தள்ளிபோனப்பின்
சேயின் மனம் ஒட்டுமா

அவசர உலகில் எல்லாம் அத்தியாவசியம்
ஆனால்
அதைவிட பிள்ளைகளின் பாசம் முக்கியம்

மெழுகாய் உருகியபோதும்
சற்றுசாந்தாமாய் பிஞ்சுமனங்களையும்
நுகர்ந்து பாருங்கள்

அவர்களுக்காகவும் நேரம் ஒதுக்குங்கள்
அவர்கள்சொல்வதையும் காதுகொடுத்துகேளுங்கள்
அவர்களுடன் ஒன்றிவிளையாடுங்கள்

சேர்ந்து உண்ணுங்கள்
அணைத்து உறங்குங்கள்
சிரித்து மகிழுங்கள் சிறப்பாய் வாழுங்கள்............

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
நன்றி  :http://niroodai.blogspot.com

அன்னையே அமுதம் தா

கோள்களும் மோதல்களும்!


நாம் மில்கிவே என்னும் கேலக்ஸியில் ஓரத்தில் சிறு புள்ளியாக தெரியும் சூரிய குடும்பத்தில் உள்ள மூன்றாம் கோளான பூமியில் வசிக்கிறோம், இந்த பிரபஞ்சம் உருவாகி பல கோடி கோடி ஆண்டுகள் ஆனாலும் பூமியில் உயிர்கள் உருவாக காரணமாக இருந்த சம்பவம் நடந்து 450 திலிருந்து 500 கோடி வருடங்கள் ஆகியிருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது, அது எவ்வாறு நடந்திருக்கலாம் என தமிழில் ஆராயலாம்!





கோள்களில் விண்கற்கள் அல்லது வால் நட்சத்திரங்களின் மோதல் மிக ஆபத்தானது என்றாலும் சில சமயங்களில் அதுவே நன்மையில் கூட முடியக்கூடும், 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் எரிமலைகள் நிரம்பி என்னேரமும் தங்கம் போல் முன்னி கொண்டே இருந்தது தான் இந்த பூமி, அதன் மீது ஒரு விண்கல் அல்லது வால்நட்சத்திரத்தின் மோதல் அதன் மீது பெரும் மாற்றத்தை ஏற்ப்படுத்தியது, முதலாவதாக சொல்ல வேண்டுமென்றால் பூமியின் பருவநிலை மாற்றத்திற்கு மிக முக்கிய காரணமாக இருக்கும் 23.5% சாய்வு கோணம் அதனால் தான் ஏற்பட்டது.




பூமியின் மேல் ஏற்பட்ட மோதலில் நம்மில் இருந்து பிரிந்து சென்றது அல்லது நம் மீது மோதிய கல்லும் கூடவே பூமியில் இருந்து பிய்த்து செல்லப்பட்ட தனிமங்களும் சேர்ந்தது தான் நிலா!, பசிபிக் பெருங்கடலில் உள்ள ஆழமான பகுதியில் நிலவை பொருத்தினால் அது சரியாக பொருந்தி கொள்ளும் அளவே உள்ளது!, நிலவு நம்மில் இருந்து வருடத்திற்கு ஒண்ணரை கிலோமீட்டர் விலகி செல்கிறது, நம் ஈர்ப்பு விசையின் எல்லையை அது கடக்கும் போது, தனி கோளாக மாறி பூமியை சுற்றாமல் சூரியனை சுற்றலாம், அல்லது செவ்வாயில் மோதி சுக்கல் சுக்கலாக உடையலாம்!




பூமியை சுற்றி கொண்டிருக்கும் நிலா தீடிரென்று பாதை மாறும் போது அதனால் சீரான பாதையை பெற முடியாது, ஒவ்வொரு பனிரெண்டாயிரமாவது சுற்றுக்கும் ஒருமுறை அது பூமியின் சுற்று பாதையை தொட்டு செல்லும், அப்போது அது பூமியின் மீதே மோதலாம், இதெல்லாம் நடக்கமூடிய சாத்தியங்கள் 40 லட்சம் வருடங்களுக்கு பின் இருப்பதால் இப்பொழுது கவலைப்பட வேண்டியதில்லை!,



பூமிக்கு அடுத்த கோளாக இருக்கும் செவ்வாய் 700 கோடி வருடங்களுக்கு முன் இப்போதிருக்கும் அளவை விட இரண்டு மடங்கு இருந்தது, அதன் மீது மோதியது நிச்சயமாக ஒரு பெரிய விண்கல்லாக தான் இருக்கும் அல்லது வியாழன் கிரக்கத்தில் இருந்த துணை கோள் ஒன்று முன் கூறிய நிலவின் கதையைப்போல் அதன் சுற்று பாதையில் இருந்து பிரிந்து செவ்வாயின் மீது மோதியிருக்கலாம், அதன் பெரும் மோதல் அதனுடய சாய்வு கோணத்தையும் மாற்றிவிட்டது, பூமியை போலவே அதுவும் 24.5% சாய்வான கோணத்தில்  சுற்றி கொண்டிருக்கிறது, அதனுடன் மோதிய கோள் ஒன்று சேர முடியாமல் தன் உட்கருவை இழந்து சிறு சிறு கற்களாக ”அஸ்ட்ராய்டு பெல்ட்” என்ற பெயரில் செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையில் சுற்றி கொண்டிருக்கிறது.



அஸ்ட்ராய்டு பெல்டில் ஆயிரக்கணக்கான கற்கள் இருக்கின்றன, சிறுகற்கள் என்று சொன்னேனே தவிர சில கற்கள் நுறு கிலோமீட்டர் சுற்றளவு கொண்டவை, செவ்வாய்க்கும், வியாழனுக்கும் உள்ள தூரம் மிக அதிகமென்பதால் அது வேறு கோள்களை அணுகி சுற்றாமல் தனியாக ஒரு வளையம் போல் சூறியனை சுற்றி வருகிறது, இதே போன்ற ஒரு வளையத்தை நாம் சனி கிரகத்தை சுற்றியும் பார்க்கலாம், அதுவும் மோதலில் ஒன்று சேர முடியாமல் தனி தனி கற்களாக சனிகிரகத்தை  சுற்றி வருகிறது, வியாழன் தான் சூரிய குடும்பத்தில் பெரிய கோள் என்பதால் அது பல சிறு கோள்களை இழுத்து சூரிய குடும்பத்தில் பல துணைகோள் கொண்ட பெரிய கிரகமாக சுற்றி வருகிறது.




1994 ஆம் வருடம் சூமேக்கர் என்பவரும் லெவி என்பரும் புதிதாக ஒரு வால் நட்சத்திரத்தை வானில் கண்டனர், அதற்கு முன் அந்த வால் நட்சத்திரத்தை பற்றி எந்த ஒரு குறிப்பும் இல்லை, அதனுடய சுற்று பாதை ஆச்சர்யபடும் வகையில் வியாழன் கிரகத்துக்கு அருகில் இருந்தது, அந்த வால் நட்சத்திரம் வியாழன் கிரகத்தால் ஈர்க்கப்பட்டு 21 துண்டுகளாக உடைந்து வியாழன் கிரகம் நோக்கி ஒரு ரயில் வண்டி பெட்டியை போல் அசுர வேகத்தில் சென்றது, வியாழன் கிரகத்தின் காற்று மண்டலத்தை அடைந்த போது அவற்றில் தீ பற்றி வரிசையாக ஒரு தோரணம் போல் சென்றதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.




அதற்கு முன் எந்த கோளிலும் இவ்வளவு பெரிய மோதலை பூமியில் வசிக்கும் மக்கள் கண்டிராதபடியால் அதன் விளைவுகள் எவ்வாறு இருக்கும் என யாராலும் கணிக்க முடியவில்லை, அந்த மோதலுக்கு பின் வியாழன் கிரகம் பெரிய தீப்பிழம்பாகி சூரிய குடும்பத்தில் இரண்டு சூரியன்கள் போல் காட்சியளிக்கலாம் என சில விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்தனர் ஆனால் ஆச்சர்யப்படதக்க வகையில் சூரிய குடும்பத்தின் பெரும் கோளான வியாழன் அதை ஒரு பெரிய பூகம்பம் போல் தன்னகத்தே ஏற்று கொண்டது, அதன் பின் அதிலிருந்து கிளம்பிய புகையில் நடுமையத்தில் இருந்த ஓட்டை மட்டும் பூமியை விட பெரிதாக இருந்ததாம், அப்போது ஏற்பட்ட புகை மண்டலம் மட்டும் ஆயிரம் கிலோமீட்டருக்கும் மேலே உயர்ந்து இன்று வரை அப்பகுதியை மறைத்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.




கோள்களின் மோதலில் மிக விசித்திரமான விளைவை பெற்றது யுரேனஸ் கோள் மட்டுமே, பூமியும், செவ்வாயும் தன் அச்சிலிருந்து 23.5% சாய்ந்திருப்பது போல் யுரேனஸ் கிரகம் 90% சாய்ந்திருக்கிறது, காட்சியமைப்பாக சொல்ல வேண்டுமென்றால் பூமியும், செவ்வாயும் சற்றே சாய்ந்த நிலையில் சுற்றும் பம்பரம் ஆனால் யுரேனஸ் கிட்டதட்ட உருளையின் அச்சில் சுற்றுகிறது தன்னை தானே!, அதற்கு காரணம் அதன் மீது மோதிய மாபெரும் விண்கல்லே!, விண்கற்களினால் சூரிய குடும்பத்தில் பெரும் மாற்றத்தை சந்தித்தது யுரேனஸ் மட்டுமே

*******

இந்த பிரபஞ்சம் பல ஆச்சர்யங்கள் நிரம்பியது தொடர்ந்து உரையாடுவோம்! Download As PDF

கோள்களும் மோதல்களும்!  நன்றி  : http://valpaiyan.blogspot.com

Tuesday, April 6, 2010

நான் வளர்ந்த பின் நினைப்பது நடக்கும் ...! (.படங்கள் )

நான்  நினைப்பது நடக்கவில்லை என்றால் .......எதுவும்  நடக்கும்

Received  from:mujeeb rahman

Monday, April 5, 2010

சுயநலம் வேண்டாமே...!



இருபத்தோராம் நூற்றாண்டில் தற்பொழுது நாமெல்லோரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்தக் கால கட்டத்தில் நாம் எத்தனையோ முன்னேறியிருக்கிறோம். என்றாலும், சில விஷயங்களில் இன்னும் கற்காலத்தில்தான் இருக்கிறோம்.
சுற்றுப்புறச் சூழல்,சுத்தம் பற்றி இப்போதெல்லாம் நிறைய பேசப்படுகிறது.ஒவ்வொருவரும் தங்கள் சுற்றுப்புற சூழலை நன்கு பராமரித்து வந்தாலே போதும்,நம் நாடு முழுவதும் நலம் பெரும் என்கிறார்கள்.
ஆனால்,சுற்றுப்புறத்தில் இன்னும் சில விஷயங்களும் அடங்கியிருக்கின்றன. இதில்...

* ஒரு நல்ல குடிமகனாக...
* ஒரு சுயநலமற்ற நல்ல நண்பனாக...
* ஒரு நேசமுள்ள அயலவராக...
* ஒரு ஆதரவான உறவினராக...
* ஒரு பாசமுள்ள குடும்பத்தினராக...

இருப்பதும் அடங்கும்.
நாமெல்லோரும் ஒரு குறுகிய வட்டத்திற்குள் உழல்வதால் பலவித அனுபவங்களையும்,கடமைகளையும்,நம்மைச்சுற்றி வெள்ளமாய்ப் பெருகும் அன்பையும் புறக்கணித்துவிட்டு மனதளவில் இன்னும் ஏழைகளாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
ஒரு சுயநலமற்ற,உண்மையான நண்பராக இல்லாத நாம், நம் குடும்பத்தினருக்காக மட்டும் பாடுபட்டு விட்டு,எத்தனையோ அருமையான மகிழ்ச்சித் தருணங்களை கோட்டை விடுகிறோம்.
நம்மால் ஒன்றாகக் கூடி நம் சுற்றுப்புறத்தை தோழமை,நட்பு,பாசம், கஸ்டத்திற்கு உதவுதல் போன்ற சின்னச் சின்ன விஷயங்களினால் எத்தனை அற்புதமான சூழலாக மாற்ற முடியும்? ஒவ்வொரு குடியிருப்பும் பாசம்,அன்பு மற்றும் கவனிப்பினால் பிணைக்கப்பட்டால் எவ்வளவோ நன்மைகள் கிடைக்கும்.
ஒரு அடுக்குமாடிக் கட்டிடத்தில் உள்ளவர்கள்,ஒன்றாக வேலை செய்பவர்கள்,ஒரு கல்லூரி மாணவர்கள் ஒரே குடும்பமாக இயங்கினால் பல பண்டிகைகளை ஒன்றாகக் கொண்டாடலாம். திருமண வைபவங்கள்,விசேஷ தினங்கள் எல்லாம் மிகச்சிறப்பாக இருக்கும்.குழந்தைகளும் பாதுகாப்பு,பரந்த குணங்களோடு வளர்வார்கள்.இதற்குத் தேவை நம் கண்களை மறைக்கும் சுயநலம் என்னும் முகத்திரையைக் கிழித்தெறிவதுதான்.
அன்பு கொடுக்கக்கொடுக்க அட்சயபாத்திரமெனப் பெருகும்.அன்பைப் பெறுபவர்களும்,அன்பைப் பொழிகிறவர்களும் சந்தோஷத்தில் திளைப்பது நிச்சயம்.
நன்றி : http://rishanshareef.blogspot.com/2007/09/blog-post_10.html

அந்நிய வங்கியில்..!

இச்சை தீர்க்க ஒத்த காசு
கச்சைகட்ட ஒத்த காசு

துறுவலுக்கு ஒத்த காசு
இரவலுக்கு மிச்ச காசு

ஏழை வீட்டு அடுப்பு 
எரியவில்லை - அவன்
வயிறு மட்டும் எரியயிலே

எதற்கடா நம்ம காசு
அந்நிய  வங்கியிலே..!

உனக்குத்தான்
       "ஆடி ஓடி பொருளைத் தேடி......
      அவனும் திங்காம பதுக்கி வைப்பான்....
      அதிலே இதிலே பணத்தைச் சேத்து
      வெளியிடப் பயந்து மறச்சுவைப்பான் ;
      அண்ணன் தம்பி பொண்டாட்டி புள்ளை
      ஆருக்கும் சொல்லாம பொதைச்சு வைப்பான் ;
      ஆகக் கடைசியில் குழியைத் தோண்டி
      அவனையும் ஒருத்தன் பொதச்சு வைப்பான்
"

















 அந்நிய வங்கியில் (swish bank) இந்திய பணம், பாருங்கள் இங்கே ..!  


நன்றி :

Saturday, April 3, 2010

கோடை - எதை உண்ணலாம், எதைத் தவிர்க்கலாம்



 ac65
வறுத்தெடுக்கும் வெயிலில் பல்வேறு சிக்கல்கள் விக்கிரமாதித்ய வேதாளமாய் விடாமல் நம்மை வந்து தொற்றிக் கொள்கின்றன. உடல் வெப்பமடைவது, சரியான தூக்கமில்லாமல் போவது, கவனக் குறைவு, தோல் நோய்கள், எரிச்சல், படபடப்பு, உடலில் தண்ணீர் பற்றாக்குறை என பட்டியல் நீளும்.
இந்த கோடை காலத்தில் உடலை சமநிலைக்கு வைத்திருப்பதில் நமது உணவுப் பழக்க வழக்கங்கள் முதல் இடத்தைப் பிடிக்கின்றன.
கோடை காலத்தில் எதை உண்ணலாம், எதைத் தவிர்க்கலாம் என்பதை அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.
கோடை காலத்தில் உடலின் தண்ணீர் அளவை சரியான அளவில் காத்துக் கொள்வது மிகவும் அவசியம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. வெறும் தண்ணீர் இந்த பணியைச் செய்து விட முடியாது. அதற்கு உதவியாக முதலில் வருவது காய்கறிகள்.
காய்கறிகளில் ஏராளமான நீர்ச்சத்து உண்டு. முடிந்த அளவு காய்கறிகளை பச்சையாகவோ, கொஞ்சமாய் வேக வைத்தோ உண்பது மிகவும் சிறந்தது. அதிகமாய் வேகவைத்தோ, பொரித்தோ உண்பதில் எந்த விதமான பயன்களும் இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.
fruit-salad-ck-320083-lபழங்கள் உண்பது கோடைக்காலத்துக்கு மிகவும் அவசியமானது. நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் உடலின் தண்ணீர் தேவையை நிவர்த்தி செய்வதுடன், உடலின் வெப்பத்தையும் கட்டுப்படுத்துகிறது.
காய்கறிகளும், பழங்களும் அதிகம் உண்பது உடலின் தண்ணீர் தேவையையும், குளிர் தேவையையும் நிறைவேற்றுவதுடன், அவற்றிலிருக்கும் வைட்டமின்கள், மினரல், விஷ எதிர்ப்பு தன்மை, நார்ச்சத்து இவையெல்லாம் கோடையில் நோய் வராமலும் நம்மைக் காத்துக் கொள்கின்றன.

வெங்காயம் நிறைய சாப்பிடுங்கள். வெயில் காலத்தில் உடலில் ஏற்படும் வெப்ப அரிப்பு போன்ற நோய்கள் வராமல் தடுக்க வெங்காயத்திலுள்ள குவர்சடின் எனும் வேதியல் பொருள் உதவும்.
தர்பூசணி சாப்பிடுங்கள். தர்பூசணியில் 90 விழுக்காடு தண்ணீரே இருப்பதால், உடலின் தண்ணீர் தேவைக்கு சிறந்தது தர்பூசணி. தர்பூசணியை விட அதிக தண்ணீர் சத்துள்ள ஒரு காய்கறி உண்டு அது என்ன தெரியுமா ? வெள்ளரிக்காய் ! வெள்ளரிக்காயை அதிகமாய் உட்கொள்ளுங்கள் உடலுக்கு மிகவும் நல்லது.
உடலின் வெப்பம் வெளியேற வேண்டியதும், உடல் குளிர வேண்டியதும் கோடை காலத்தின் தேவைகளில் ஒன்று. அதற்கு கொஞ்சம் கொஞ்சமாக உண்ணும் கார்போஹைட்ரேட் அடங்கிய உணவுப் பொருட்கள் உதவும். குறிப்பாக வேக வைத்த உருளைக்கிழங்கு, பீன்ஸ், பீட்டா ரொட்டி, அரிசி இவை.
அப்படியே வாழைப்பழம் சாப்பிடுவது கூட கோடைகாலத்தில் உடலை நலமுடன் வைத்திருக்கும் என்கிறார் இங்கிலாந்து மருத்துவர் டாக்டர் டாயில்.
காய்கறிகளினால் சூப் தயாரித்து அதைக் குளிர வைத்து உண்பது கோடைக்குச் சிறந்தது என்கிறார் அமெரிக்காவின் pepsi_ice_cucumber_2மருத்துவர் மூர்ஸ். கூடவே காய்கறி சாலட் இருந்தால் மிகவும் நல்லது !
சுத்தமான தண்ணீர் குடிக்க வேண்டும். மிக முக்கியமாய் தவிர்க்கப்பட வேண்டிய விஷயம் பாட்டில் குளிர்சாதனங்கள், மற்றும் தற்போது புற்றீசலாய் கிளம்பியிருக்கும் “எனர்ஜி டிரிங்” சமாச்சாரங்கள்.
குளிர்சாதனப் பொருட்கள், பாட்டில்களில் கிடைக்கும் பழச்சாறுகள், இவையெல்லாம் உடலில் தேவையற்ற கலோரிகளைச் சேர்ப்பதைத் தவிர வேறெதுவும் செய்வதில்லை. உங்கள் பணத்தையும் உடல்நலனையும் அழிப்பதற்காக வண்ண வண்ண பாட்டில்களில் கண்ணைக் கவரும் விளம்பரங்களோடு வரும் பானங்களை தவிருங்கள். தண்ணீர் நிறைய அருந்துதலே சிறப்பானது.
கோடையில் தண்ணீர் மூலமாக நோய்கள் விரைவில் பரவும் என்பதால் எப்போதும் கையுடன் ஒரு பாட்டில் தண்ணீர் எடுத்துச் செல்வதே பாதுகாப்பானது.
சோயாபீன்களை waterbottle-mகோடைகாலத்தில் சூடாய் இருக்கிறதே என்பதற்காக தெருவில் செல்லும் குச்சி ஐஸ் போன்ற வகையறாக்களை உள்ளே தள்ளாதீர்கள். அது உடலின் வெப்பத்தை அதிகரிப்பதுடன் நோய்களையும் தந்து செல்கிறது.
நன்றாகப் பொரித்த உணவு வகைகளை ஒதுக்குங்கள். சிப்ஸ், பிரஞ்ச் பிரைஸ், சிக்கன் ஃபிரை வகையறாக்களை முழுவதுமாய் ஒதுக்குங்கள். மூன்று வேளை மூக்கு முட்ட உண்பதை விட நான்கைந்து தடவைகளாக கொஞ்சம் கொஞ்சமாய் உண்பதே கோடையில் சிறப்பானது.
‘ஐஸ் காபி’, ‘ஐஸ் டீ’ போன்ற பானங்கள் கோடை காலத்துக்கு உகந்ததல்ல. அவை எந்தக் காலத்துக்கும் உகந்ததல்ல என்பது வேறு விஷயம். எனவே அவற்றை விட்டு தள்ளியே நிற்பதே நல்லது. இருக்கவே இருக்கிறதே இளநீர், மோர், எலுமிச்சை பழச் சாறு போன்றவை !
உணவுப் பழக்கத்தில் ஒழுங்கைக் கடைபிடித்தாலே கோடையில் வாடாமல் தப்பிக்கலாம்.

நன்றி :http://xavi.wordpress.com/ 
கோடை – எதை உண்ணலாம், எதைத் தவிர்க்கலாம்

அல்குரானையும் ,கிதாபினையும்....

 

அல்குரானையும்  ,கிதாபினையும் ஒத  வேண்டும் மூடி அழகு பார்ப்பதில் என்ன பயன்.

 

 நேர்த்தியான அச்சிட்டு ஒரு புத்தகம் இருக்கிறது
என் பெயர் தெரிய
, இங்கே சில குறிப்புகள் உள்ளன... 

அழகிய அட்டையில் மற்றும் காட்சிக்கு இனிமையாய் நன்றாக பிணைக்கப்பட்டுள்ளது
ஆனால் முஸ்லிம்கள் இதயத்தில் நான் அரிதாக காணப்படுவன் நான்!

ஒரு அலமாரியில் உயர்ந்த நிலையில் 
நான் வரிசைப் படுத்தப்பட்டு அழகாக   வைக்கப்பட்டு  இருக்கிறேன்

மரியாதையுடன் அதிகமாக   முத்தம் நிறைய கிடைக்கப் பெறுகின்றேன்
ஆனால் எனது  முக்கியத்தினை  அவர்கள் எப்போதும் இ
ழந்து விடுவதனை  பார்கின்றேன்!

ஒரு மென்மையான குரலில் அவர்கள் என்னை ஓதாமல்
என்னை உள்ளே வைத்து புறக்கணிக்கப்படுவது வேதனையானது.
அதனால் வரும் இழப்பு என்னைப் பாராமல்
ஓதாமல் ஒதுங்கி இருப்பவர்களுக்குதான்
என்பதனை அவர்கள் அறியாமல் இருப்பது வேதனை!

உண்மையாக   சொல்கிறேன், இந்த நேரத்தில் எனக்கு இது பழகிவிட்டது
எனது  அருமை
யினை  பயன்படுத்துவது மிக மிக அரிதாக உள்ளது!

நான் உலகத்தில்  மாற்ற
ம் கொண்டு  வர முடியும்.
நான் ஒரு அதிசயம், என் வார்த்தை புரிந்துக் கொள்வதில்  உயர்வு  உள்ளது.

நான் உங்கள் காப்பாளர் ,  நான் உங்கள் வழிகாட்டியாக இருக்கிறேன்,
என்னைப் பயன் படுத்திக் கொண்டோர் உயர்வடைவார்.

எனக்கு பெயர் வைத்தவன் எல்லாம் வல்ல அல்லாஹ்
எனது புனித
பெயர் குர்ஆன்.
----------------------
அல்லாஹ்வின் அருளை அலமாரியில் வைத்து அழகு பார்க்கும் நிலை வேண்டாம் .

அல்குரானையும்  ,கிதாபினையும் ஒத  வேண்டும் மூடி அழகு பார்ப்பதில் என்ன பயன்.

 ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்.

 தயவு செய்து கீழ் உள்ள லிங்குகளை கிளிக் செய்து ஓதுங்கள் 

Al Qura`n explorer

 QuranFlash

 Qurantour.com

 Tanzil.info

LinkWithin

Related Posts with Thumbnails