Sunday, April 11, 2010

இந்த தரீக்கா / ஷைகு / முரீது / பைஅத் /, கூட்டத்தில் நுழைந்து விட்டீர்களேயானால்...


தோற்றுவாய்
1. அளவற்ற அருளாளனும், நிஹரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.
2 . அணைத்து புகழும், அகிலங்கள் அனைத்தின் ரப்பாகிய அல்லாஹ்வுக்கே உரியது.
3 . (அவன்) அளவற்ற அருளாளன்; மிக்க கிருபை உடையவன்.
4 . (அவனே நியாயத் ) தீர்ப்பு நாளின் அதிபதி.
5 . உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
6 . எங்களை நேர் வழியில் நடத்துவாயாக!
7 . எவர்களின் மீது நீ அருள் புரிந்தாயோ அத்தகையோரின் வழியில் நடத்துவாயாக; (அது) உன் கோபத்துக்கு உள்ளானோர் வழியும் அல்ல; நேர் வழி தவறியோர் வழியும் அல்ல.        =       அல்-குர்ஆன்
----------------------------------------------------------------------------------------

இந்த தரீக்கா / ஷைகு / முரீது / பைஅத் /, கூட்டத்தில் நுழைந்து விட்டீர்களேயானால் மூளை சலவை செய்யப்பட்டு வாழ்நாள் முழுவதையும் உடல் உழைப்பு , பொருளுடன் அவர்களுக்கே அர்ப்பணம் செய்வதாக மீற முடியாத வாக்குறுதி அளித்துவிட்டு திண்டாட்டதிற்குள்ளாகி விடக்கூடிய‌ நிலை உருவாகிவிடும்.

முரீது என்பது சூபியிஸம் மற்றும் தப்லீக் ஜமாஅத் போன்ற கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் கடைபிடிக்கின்ற ஒரு வழிமுறையாகும்.

இஸ்லாத்தில் தஸவ்வுஃப் என்னும் ஆன்மிக நெறிமுறையைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்ளும் இவர்களின் கொள்கைகள் மக்களிடையே ஸுஃபித்துவம், ஆன்மீகப் பாதை, சன்னியாசம், மறைவான ஞானம் அறியும் வழி என்றெல்லாம் அறியப்படுகிறது.

இந்த வழிகெட்டக் கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் தாங்களாகவே இஸ்லாத்தில் புதிய கொள்கைளைப் புகுத்தினர்.

அதாவது ஒருவர் மோட்சம் அடைய வேண்டுமென்றால் அவர் ஷரீஅத்தைப் பின்பற்றுவதோடல்லாமல் இன்னும் மூன்று படித்தரங்களைக் கடந்து செல்ல வேண்டும். அவைகளாவன: 1) தரீகத் 2) ஹகீகத் 3) மஃரிபத் ஆகியனவாகும்.

இவற்றை அடைய வேண்டுமானால் ஒருவர் தனது ஆசா பாசங்கள் அனைத்தையும் துறந்து சன்னியாசம் பூண்டு இறை தியானத்தில் ஈடுபட வேண்டும்.

உலக ஆசையை துறப்பதற்கு சாதாரண மக்கள் விரும்பமாட்டார்கள் என்பதை நன்றாகப் புரிந்துக் கொண்ட இவர்கள் தங்களால் உருவாக்கப்பட்ட இந்த மூன்று படித்தரங்களையும் கடந்து சென்ற ஸூஃபிகளிடம் பைஅத், முரீது வாங்கிக் கொண்டால் போதுமானது!

அவர்களை அந்த ஷெய்குகள் கரையேற்றி ஈடேற்றம் அளித்துவிடுவார்கள் என்று பாமர மக்களை ஏமாற்றி அவர்களின் நம்பிக்கையில் உழைப்பில் தங்களின் வயிறுகளை வளர்த்தனர் இந்த போலி ஸூஃபிகள்.

முரீது வாங்கிய ஒருவர் தன்னுடைய ஷெய்குவிடம் குளிப்பாட்டுபவனின் கையில் கிடக்கும் மைய்யித்தைப் போல இருக்க வேண்டுமாம்.
அதாவது தன்னுடைய ஷெய்கு எதைச் செய்தாலும் கேள்விகள் எதுவும் கேட்கக் கூடாதாம்.

மேலும் முரீது கொடுக்கிறோம் என்ற பெயரில் இந்த போலி ஷெய்குகள் தங்களின் பக்தர்களுக்கு நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளில் இல்லாத சில திக்ருகளைக் கற்றுத் தருகின்றனர்.
முரீது வாங்கியவர்கள் இந்த திக்ருகளை ஓதிவந்தால் போதுமாம்! அவர்கள் மோட்சம் அடைந்து விடுவார்களாம்.

இன்னும் சிலர் தொழுகைக்கு கூடச் செல்வதில்லை.

அவர்களிடம் கேட்டால், எங்கள் செய்கு எங்களை நரகத்திலிருந்து காப்பாற்றி விடுவார் என்று பெருமிதத்துடன் கூறுகின்றனர்.

இன்னும் வழிகெட்ட சிலர் ஆபத்துக் காலங்களில் தங்களுக்கு முரீது வழங்கிய ஷெய்குகளை, பீர்களை அவர்கள் தங்களின் கண்காணாத தூரத்தில் இருந்தாலும் யா செய்கு அல்லது யா பீர் அவுலியா என்று அவர்களை அழைத்து உதவி தேடுகின்றனர்.

இவைகள் எல்லாம் இஸ்லாத்தின் அடிப்படையான ஏகத்துவத்தையே அசைக்கின்ற ஷிர்க்கான செயல்களாகும்.
இந்தக் கொள்கைகளுக்கும் இஸ்லாத்திற்கும் எவ்விதத்திலும் சம்பந்தம் இல்லை. இஸ்லாம் என்பது திருமறைக் குர்ஆன் மற்றும் நபிவழிமுறைகளைப் பின்பற்றுவதுமேயாகும்.
ஸூஃபியிஸம் பற்றி விரிவாக அறிவதற்கு ஏ.சி. முஹம்மது ஜலீல் மதனி அவர்கள் எழுதிய சூபித்துவ தரீக்காக்கள் அன்றும் இன்றும் என்ற நூலை பதிவிறக்கம் Download செய்து படித்துப்பாருங்கள்.
http://islamkural.com/downloads/soofi.pdf


அல்லாஹ் நம்மனைவருக்கும் அவனுடைய நேர்வழியைக் காட்டி, பித்அத் போன்றவற்றை தவிர்ந்தவர்களாக வாழ்வதற்கு அருள்புரிவானாகவும். ஆமீன்.
இந்த காலகட்டத்தில் இஸ்லாத்தை பற்றி விளக்கி கூற பல சீர்திர்ருத்த வாதிகள் இருந்தும் நம் மக்கள் இன்னும் தெளிவு பெறாமல் மூட நம்பிக்கைகளில் மூழ்கி வெளியே வரமுடியாமல் தனது அறியாமையின் காரணமாக சின்ன பின்னமாகிக் கொண்டிருக்கின்றனர்.

இப்பொழுது சொல்ல இருப்பது திரித்த கட்டுக்கதை அல்ல. படைத்த அல்லாஹுவின் மீது ஆணையாக நமது சமுதாயத்தில் நடக்கின்ற சம்பவம்.

ஒரு “தரீக்கா” வாசி அவன் கூறுவதாவது:
”எங்களின் உஸ்தாது நாங்கள் எங்கிருந்தாலும் எங்களை கண்காணித்து நேர்வழி படுத்திக்கொண்டு இருக்கிறார். நாளை மறுமையில் எங்களை சுவர்கத்திற்கு அழைத்து செல்வார் என்று அடித்து கூறுகிறான். அவன் ஒரு படித்த பட்டதாரி. இப்படி பட்டவர்களை நாம் என்ன செய்வது ………….? “

இன்னும் பல நபர்கள் அவர்களின் பேச்சை கேட்டு நல்வழி கிடைக்கும் ,குடும்பத்தில் நல்ல பரக்கத் ஏற்படும், வாழ்கையில் முன்னேற்றம் ஏற்படும் என்ற தவறான எண்ணத்தில் அவர்களை சென்று மாதம் தோறும் பார்த்து வருகின்றனர்.

அந்த உஸ்தாது இருக்கும் இடமோ நமது அண்டை மாநிலம். நீங்களும் அந்த விஷயத்தை பற்றி அறிந்திருப்பீர்கள்.

இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அவரது வயதை யாரும் அறிய முடியாதம். அவர் சிலநேரங்களில் வாலிபர்போல தோற்றம் அளிக்கிறார் என்றும் சில சமயம் வயது முதிர்ந்தவர் போல இருக்கிறார் எனவும் கூறுகின்றனர். அவர் ரசூல் (ஸல் ) வழியை சார்ந்தவர் என்றும் கூறுகின்றனர்.அவர் கூறியதற்காக தனி பள்ளிவாசல் ஒன்றை கட்டியுள்ளனர்.

மேலும் அவன் கூறியது: நானும் உன்னை போலதான் இருந்தேன் அவரை பற்றி கேள்விபட்டதும் அவரை சென்று நேரில் பார்த்தும் எனக்கு எல்லாம் எண்ணமும் மாறிவிட்டது. அந்த உஸ்தாது நாங்கள் அமர்ந்திருந்த கூட்டத்தை பார்த்து கூறினார். இங்கு வந்திருக்கும் ஒருவன் என் மேல் நம்பிக்கை இல்லாமல் வந்திருக்கிறான் என்று.

அதை கேட்டதும் என் மனநிலை மாறிவிட்டது என்று கூறுகிறான். இன்னும் பல செய்திகளையும் அவன் என்னிடம் கூறினான். நான் அவனிடம் கூறினேன் சாதரண குறிகாரன்கூட தான் இதுபோல வித்தைகள் செய்வான் அதற்கு நாம் அவனை பின்பற்றி விடமுடியுமா? என்றேன். நீயும் வந்து அவரை சந்தித்தால் இதுபோல பேச மாட்டாய் என்கிறான்

இவர்களுக்கு நாம் எந்த ஒன்றை எடுத்து கூறினாலும். வீண் தர்க்கம் செய்கிறீகள். இது சைதானுடைய வேலை. உங்கள் வழியை நீங்கள் பாருங்கள். எங்கள் வழியை நாங்கள் பார்த்துகொள்கிறோம். பிடிக்கவிட்டால் ஒதுங்கிவிடுங்கள் என்கின்றனர். அல்லாஹ்தான் இவர்களை நேர்வழி படுத்த வேண்டும்.

நமது சமுதாயத்தில் நடக்கும் சில அநாச்சாரமான விஷங்களை கண்டால் மனம் அவற்றை ஏற்றுகொள்ள மறுக்கிறது.

அல்ஹம்துலில்லாஹ்! இணை வைக்கும் இடங்களான தர்ஹாக்களுக்குச் சென்று அங்கிருப்பவர்களிடம் கையேந்தி நமது ஈமானை பாழாக்காமல் பள்ளிவாசலுக்கு மட்டும் சென்று,
அல்லாஹ்வை மட்டுமே வணங்கி அவனது தூதர் (ஸல்) அவர்களின் சுன்னத்துக்களைப் பின்பற்றி வாழும் முஸ்லிம்களாகிய நாம் அங்கு அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்ற செயல்கள் நடைபெறுமானால் அவற்றைப் பார்த்துக் கொண்டு மௌனமாக இருக்காமல் நம்மால் இயன்றவைகளைச் செய்து அந்த மாபெரும் ஷிர்க்கை தடுக்க முயற்சி செய்ய வேண்டும்.

ஒரு இறை நேசரையே அல்லது நபிமார்களின் பெயரையோ குறிப்பிட்டு அவர் பொருட்டால் என்று கேட்பதற்கு இஸ்லாத்தில் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை! மேலும் இது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டதாகும்.

அல்லாஹ் அதற்குரிய ஆற்றல்களை நமக்குத் தந்தருள்வானாகவும். ஆமீன்.
எல்லாம் அறிந்தவன் அல்லாஹ்வே.

நாம் சத்தியத்தை கூறிடவும் ,உண்மையை எடுத்துரைக்கவும் யாருக்கும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை.

நாம் அஞ்ச வேண்டியது நம்மை படைத்த ரப்புல் ஆலமீன் அல்லாஹ்தாஆலா ஒருவனுக்கே!

நமது கருத்தை எடுத்து கூறிடவும், இஸ்லாத்தில் உள்ள கோட்பாடுகளை, சத்தியத்தை மக்கள் தெளிவாக, தகுந்த ஆதாரத்துடன் பொருள்பட விளங்கிடவும் இந்த நன்றி ‍ இஸ்லாம் குரல் இணைய தளம் செயல்பட்டு வருகிறது. அதற்கு நாம் எல்லாம் வல்ல அல்லாஹுதஆலாவிற்கு நன்றி சொல்ல கடமைபட்டிருகிறோம். நன்றி:- ‍ இஸ்லாம் குரல்.



நன்றி:- http://ilayangudikural.blogspot.com/2009/09/blog-post_07.html

இஸ்லாமிய‌ இளைஞ‌ர்க‌ளுக்கு ஆட்டோ தொழிற் கூட்டுற‌வு ச‌ங்க‌ங்க‌ள் மூல‌ம் ஆட்டோ வாங்க‌ க‌ட‌ன் வ‌ழ‌ங்கும் திட்ட‌ம்

இஸ்லாமிய‌ இளைஞ‌ர்க‌ளுக்கு ஆட்டோ தொழிற் கூட்டுற‌வு ச‌ங்க‌ங்க‌ள் மூல‌ம் ஆட்டோ வாங்க‌ க‌ட‌ன் வ‌ழ‌ங்கும் திட்ட‌ம்
இத்திட்ட‌த்தின் கீழ் இஸ்லாமிய‌ இளைஞ‌ர்க‌ள் ஆட்டோ பெற்று, சுய‌ தொழில் தொட‌ங்கிட‌ தொழில் கூட்டுற‌வு ச‌ங்க‌ங்க‌ள் மூல‌ம் ஆட்டோ க‌ட‌ன் வ‌ழ‌ங்க‌ப்ப‌டுகிற‌து. இத்திட்ட‌ம் த‌னி ந‌ப‌ர் க‌ட‌ன் வ‌ழ‌ங்க‌ப்ப‌டும் முறைக‌ள் அடிப்ப‌டையில் வ‌ழ‌ங்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. இத்திட்ட‌ம் 'தாட்கோ' வ‌ங்கி மூல‌ம் ந‌டைமுறைப்ப‌டுத்த‌ப்ப‌டுகிற‌து.

1. இத்திட்ட‌த்தில் ப‌ய‌ன்பெறுப‌வ‌ர் இஸ்லாமிய‌ இளைஞ‌ராக இருக்க‌ வேண்டும்.
2. ப‌ய‌னாளி ஆட்டோ வாக‌ன‌ம் ஓட்டுவ‌த‌ற்கான‌ உரிம‌ம் பெற்றிருக்க‌ வேண்டும். இவ‌ர‌து குடும்ப‌ ஆண்டு வ‌ருமான‌ம் ந‌க‌ர‌மாயின் ரூ. 54,500/‍ ம‌ற்றும் கிராம‌ப் ப‌குதியாயின் ரூ. 39,500/‍க்கு மிகாம‌ல் இருக்க‌ வேண்டும்.
3. ப‌ய‌னாளிக‌ள் ஒவ்வொருவ‌ரும் ரூ. 800/ தொகையை ப‌ங்கு மூல‌த‌ன‌மாக‌ ஆட்டோ தொழிற் கூட்டுற‌வு ச‌ங்க‌த்திற்கு அளிக்க‌ வேண்டும்.
4. ப‌ய‌னாளிக‌ள் ஒவ்வொருவ‌ரும் இர‌ண்டு ஆட்டோ ஓட்டுந‌ரின் பிணைய‌ம் ம‌ற்றும் சொத்து ஜாமீன் அளிக்க‌ வேண்டும். சொத்து ஜாமீன் அளிக்க‌ இய‌லாத‌வ‌ர்க‌ள், கூடுத‌லாக‌ குடும்ப‌த்தில் வ‌ருமான‌ம் ஈடுப‌வ‌ரின் பிணைய‌ம் ம‌ற்றும் ஆட்டோ க‌ட‌ன் தொகையில் 10 ச‌த‌வீத‌ம் தாட்கோ வ‌ங்கியில் வைப்பு நிதியாக‌ செலுத்த‌ வேண்டும். இத்தொகைக்கு 7 ச‌த‌வீத‌ வ‌ட்டி தாட்கோ வ‌ங்கி அளிக்கிற‌து. த‌வ‌ணை த‌வ‌றினால் வைப்பு நிதி ஈடுக‌ட்ட‌ப்ப‌டும்.
5. ஆட்டோ க‌ட‌ன் தொகையில் 5 ச‌த‌வீத‌த் தொகையை ப‌ய‌னாளிக‌ள் ப‌ங்கு தொகையாக‌ செலுத்த‌ வேண்டும்.
6. ஆட்டோ தொழில் கூட்டுற‌வு ச‌ங்க‌ம், உறுப்பின‌ர் ம‌ற்றும் ப‌ய‌னாளிக‌ளிட‌மிருந்து பிர‌தி மாத‌ த‌வ‌ணை தொகையை தின‌ந்தோறும் வ‌சூலித்து தாட்கோ வ‌ங்கியில் செலுத்த‌ ந‌டைமுறைப்ப‌டுத்த‌ப்ப‌ட்டுள்ள‌து.
7. ஆட்டோ தொழிற் கூட்டுற‌வு ச‌ங்க‌ம், தொழில் ம‌ற்றும் வ‌ணிக‌ துறையின் க‌ட்டுப்பாட்டில் செய‌ல்ப‌டும். தொழிற் ம‌ற்றும் வ‌ணிக‌த்துறையின் க‌ண்காணிப்பாள‌ர், இச்ச‌ங்க‌த்தின் சிற‌ப்பு அலுவ‌ல‌ராக‌ செய‌ல்ப‌டுவ‌ர்.
ம‌னுதார‌ர் இணைக்க‌ வேண்டிய‌ சான்றுக‌ள் :
1. சாதி சான்றித‌ழ்
2. வ‌ருமான‌ச் சான்றித‌ழ்
3. குடும்ப‌ அட்டை
4. இருப்பிட‌ சான்று
5. ஓட்டுந‌ர் உரிம‌ம்
அணுக‌ வேண்டிய‌ முக‌வ‌ரி :
1. அனைத்து மாவ‌ட்ட‌ பிற்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ ம‌ற்றும் சிறுபான்மையின‌ர் ந‌ல‌ அலுவ‌ல‌ர்
2. மேலாள‌ர், த‌மிழ்நாடு தொழில் கூட்டுற‌வு வ‌ங்கி
3. பொது மேலாள‌ர், மாவ‌ட்ட‌ தொழில் மைய‌ம்
துறைத் த‌லைமை :
மேலாண்மை இய‌க்குந‌ர்
த‌மிழ்நாடு சிறுபான்மையின‌ர் பொருளாதார‌ மேம்பாட்டுக் க‌ழ‌க‌ம்
807 அண்ணா சாலை, 5 வ‌து த‌ள‌ம்
சென்னை 600 002
தொலைபேசி : 044 28514846
த‌க‌வ‌ல் உத‌வி : ஈரோடு மாவ‌ட்ட‌ இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் செய‌லாள‌ர் முஹ‌ம்ம‌து இக்பால் அவ‌ர்க‌ள் தொகுத்து வ‌ழ‌ங்கியுள்ள‌ த‌க‌வ‌ல் க‌ள‌ஞ்சிய‌ம் 2009 திலிருந்து

--
fromMUDUVAI HIDAYATH

துஆ (பிரார்த்தனை)



அஸ்ஸ‌லாமு அலைக்கும் வ‌ர‌ஹ்ம‌த்துல்லாஹி  வ‌ ப‌ர‌க்காத்துஹூ
                         துஆ
அழையுங்கள் நம் அல்லாஹ்வை துவா என்ற பிரார்த்தனையின் வாயிலாக! ஏனெனில் அல்லாஹ் திருக்குர்ஆன் மூலம் நமக்கு அறிவுரை கூறுகிறான் கீழே உள்ள திருமறை திருக்குர்ஆனின் வசனத்தை சற்று பொறுமையாக கேளுங்கள்!
என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் ”நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த் தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர் வழி பெறுவார்கள்” (என்பதைக் கூறுவீராக!) (அல்குர்ஆன் 2:186)
சரி பிரார்த்தனை என்பது பற்றி அல்லாஹ்வின் இறுதி இறை தூதர் நபிகள் (ஸல்) அவர்கள் என்ன கூறினார்கள்? இதோ ஆதாரத்துடன் விளக்குகிறேன் படியுங்கள்!
”பிரார்த்தனை ஒரு வணக்கமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு, ”என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள்‘ என்று உங்கள் இறைவன் கூறுகிறான்” என்ற (40:60) வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக் காட்டினார்கள். நுஃமான் பின் பஷீர் (ரலி) நூல்: திர்மிதீ 3372
சரி நம் துவா என்ற பிரார்த்தனைகளை எவ்வாறு கேட்பது?
உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 7:55)
உறுதியான நம்பிக்கையுடன் கேட்க வேண்டும்
பிரார்த்தனை செய்யும் போது ”இறைவன் கட்டாயம் தருவான், அவனால் தர முடியும்” என்ற உறுதியான நம்பிக்கையுடன் பிரார்த்திக்க வேண்டும்.
அச்சத்துடனும், நம்பிக்கையுடனும் அவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்! அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு அருகில் உள்ளது. (அல்குர்ஆன் 7:56)
துவா என்ற பிரார்த்தனையின்போது அவசரப்படக்கூடாது
”நான் பிரார்த்தித்தேன்; ஆனால் என் பிரார்த்தனை ஏற்கப்படவில்லை என்று கூறி நீங்கள் அவசரப்படாத வரையில் உங்கள் பிரார்த்தனை ஏற்கப்படும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6340
உங்கள் துவா என்ற பிரார்த்தனை விரைவாக ஏற்றுக்கொள்ள என்ன செய்யவேண்டும்?
”உறவைத் துண்டிக்காமலும் பாவமான காரியத்தில் அல்லாமலும் எந்த ஒரு பிரார்த்தனையை ஒரு முஸ்லிம் செய்தாலும் அவரது அந்தப் பிரார்த்தனைக்கு விரைவாகப் பதில் அளிக்கப்படும். அல்லது அதை அல்லாஹ் மறுமையில் ஒரு சேமிப்பாக ஆக்குகின்றான். அல்லது அந்தப் பிரார்த்தனைக்குத் தக்கவாறு அவனது பாவத்தை அழிக்கின்றான். இவ்வாறு மூன்று விதங்களில் ஏதேனும் ஒரு விதத்தில் அல்லாஹ் பதிலளிக்கின்றான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ”நாங்கள் அதிகமாகப் பிரார்த்தனை செய்தால் என்ன?” என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு ”அல்லாஹ் அதிகமாக்குவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அபூஸயீத் (ரலி) நூல்: அஹ்மத் 11150
தந்தை மகனுக்காகச் செய்யும் துஆ பிரயாணத்தின் போது…
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூன்று பிரார்த்தனைகள் இருக்கின்றன. அவற்றிற்குப் பதிலளிக்கப்படும். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. 1. அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை. 2. பிரயாணியின் பிரார்த்தனை. 3. தந்தை தனது மகனுக்காகச் செய்யும் பிரார்த்தனை.
அபூஹுரைரா (ரலி) நூல்: இப்னுமாஜா 3908
கடமையான தொழுகைக்குப் பின்.
கடமையான ஒவ்வொரு நேரத் தொழுகையையும் நிறைவேற்றிய பின் கேட்கப்படும் துஆ ஏற்றுக் கொள்ளப்படும்.
”எந்தப் பிரார்த்தனை செவியேற்கப்படும்?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், ”இரவில் கடைசியிலும் கடமையாக்கப்பட்ட தொழுகைக்குப் பின்னரும் கேட்கும் பிரார்த்தனை ஆகும்” என்று பதிலளித்தார்கள். அபூஉமாமா (ரலி) நூல்: திர்மிதீ 3499

From: Ahamed Ismathullah
From  MUDUVAI HIDAYATH


Saturday, April 10, 2010

தலைவலியும் திருகுவலியும்...

தலைவலியும் திருகுவலியும்...

அக்குபஞ்சரில் தலைவலி நிவாரணம்!

"தலைவலியும் திருகுவலியும் தனக்கு வந்தால் தெரியும்'' என்பது இன்றுவரை புழக்கத்தில் இருக்கும் சொற்பிரயோகம். இதுபோன்றே தோள் வலி, கழுத்து வலி, முதுகு - இடுப்பு - கை - கால் வலி, உளைச்சல் தடுப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எதிரிக்குக் கூட இந்த வலி வரக்கூடாது என்று புலம்புவார்கள் காரணம் மேற்படி வலிகளால் ஏற்படும் உடல் - மன பாதிப்புகள் கடுமையாக இருக்கும்.

குறிப்பாக தலைவலியை எடுத்துக்கொண்டால், இக்காலங்களில் எதற்குத்தான் தலைவலி வருவது என்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. எடுத்ததற்கெல்லாம் தலைவலி என்பதே நம்முடைய நவீன நாகரிக வாழ்க்கை முறை நமக்களித்த பரிசு. என்னுடைய பதினெட்டு வயதில் வீட்டில் பெரியவர்கள் யாராவது தலைவலி என்று கூறினால், தலை எப்படி வலிக்கும்? அடிபட்டால் அல்லவா வலிகள் தோன்றும்? என பலவாறாகத் துருவித்துருவி கேள்விகள் கேட்டதுண்டு. காரணம் பெரும்பாலானோருக்கு தலைவலிகள் இல்லை, அதைப்பற்றித் தெரியவும் தெரியாது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் எட்டு வயதுச் சிறுவர் முதல் முதிர்ந்த வயதினர் வரை அனைவரும் ஏதாவது ஒரு தலைவலியால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருகிறார்கள்.

பரபரப்பும் வேகமும் கொண்ட தற்கால வாழ்க்கை முறை தலைவலிக்கான காரணிகளையும் அதன் தளங்களையும் விசாலமாக்கி வைத்துள்ளது.

டென்ஷன் தலைவலி, தேர்வு நேர தலைவலி, ரிசல்ட் தலைவலி, இன்டர்வியூ தலைவலி, பிரயாண தலைவலி, மாதவிடாய் தலைவலி, அஜீரண தலைவலி, சீதோஷ்ண மாற்றங்களால் தலைவலி, முன்பக்க வலி, பின்பக்க வலி, உச்சி வலி என்று இன்னும் அநேகம் உள்ளது. இவை எல்லாவற்றையும் விட மிகுந்த துன்பம் தரக்கூடியது ஒற்றைத் தலைவலி.

தலைவலிகள் தோன்றி மறைந்துவிட்டாலும், எப்பொழுதாவது ஒருமுறை தோன்றினாலும் கவலை கொள்ள ஏதுமில்லை. ஆனால் அடிக்கடி தலைவலி வருவதும் எந்நேரமும் தலைவலியுடனேயே வாழ்க்கையை நடத்துவதும் மிகுந்த ஆபத்தில்தான் முடியும்.

அக்குபஞ்சர் தத்துவப்படி, தலைவலி என்பது தலையில் உள்ள பிரச்சினைகளால் மட்டும் தோன்றுவது அல்ல. அதாவது மூளையில் கட்டி, மூளையில் ரத்தம் உரைதல், தலையில் அடிபடுதல், கபால நீர், சில கண் - காது நோய்கள் போன்ற ஒரு சிலவற்றைத் தவிர, மற்ற எல்லா தலைவலிகளும் உடல் உள்ளுறுப்புகளில் ஏற்பட்டிருக்கும் நோய்கள் மற்றும் பாதிப்புகளின் பிரதிபலிப்பே ஆகும். முக்கிய உள்ளுறுப்புகளின் கோளாறுகள் பெரும்பாலும் தலையில் வலியாகவும் மற்றவை கால்வலி, கால்சோர்வு என்றுதான் முதலில் பிரதிபலிக்கும். இதை அலட்சியம் செய்து தலைவலிக்கு மாத்திரம் மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொள்ளும்போது பிரச்சினைகள் மேலும் தீவிரமாகிறது. பலருக்கு நிரந்தரத் தலைவலியாகவும் மாறி விடுகிறது.

தலைவலி தோன்றிய உடன் அருகிலிருக்கும் மருந்துக்கடைகளுக்குச் சென்று தாமாகவே மருந்து வாங்கிச் சாப்பிடுபவர்கள், அம் மருந்துக்கே அடிமையாகி விடுகிறார்கள். எப்பொழுதும் அம் மருந்தைக் கையிலேயே வைத்திருக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு பின்னர் அதிகமாக எடுத்துக்கொண்ட மருந்துகளின் தீய பக்க விளைவுகளுக்கு ஆள்பட்டு வாழ்வில் ருசி இழந்து விடுகிறார்கள். இவர்கள் உடனடியாக ஒரு மருத்துவரை அணுகித் தங்கள் தலைவலியை தீர்த்துக்கொள்ள முன்வர வேண்டும்.

டென்ஷன் மற்றும் மன இறுக்கத்தால் ஏற்படும் தலைவலியை எளிய உடற்பயிற்சி, தியானம், இயற்கையை ரசித்தபடி சிறு நடை போன்றவற்றின் மூலம் எளிதாக வெல்லலாம். குழந்தைகள், செல்லப்பிராணிகளைக் கொஞ்சி விளையாடுவோருக்கு டென்ஷன் தலைவலியே வராது என்பது ஆராய்ச்சி முடிவு.

தேர்வு நேர தலைவலி, ரிசல்ட் தலைவலி, இன்டர்வியூ தலைவலிகள் அடிக்கடி தொடருமானால் மனநல ஆலோசனைகளும் மருத்துவமும் கண்டிப்பாகத் தேவை. காரணம் இக்காலத்தில் வாழ்நாள் முழுவதும் தேர்வுகளும் இன்டர்வியூக்களும் இருந்து கொண்டே இருக்கிறது. ஆகவே இந்தத் தலைவலிகளைத் தொடரவிட்டால் தேர்வுகளிலும் நேர்காணல்களிலும் தோல்வி ஏற்பட்டு எதிர்காலம் சிறப்பாக அமையாமல் போகலாம். ஆகவே மிகுந்த கவனம் தேவை.

மாதவிடாய் தலைவலி பெரும்பாலும் அப்போதைய ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும். இருப்பினும் வலி கடுமையாக இருந்தாலும், எல்லா மாதங்களிலும் தொடர்ந்து வந்தாலும், மாதவிடாய் காலம் முடிந்த பிறகும் நீண்ட நாள்களுக்குத் தலைவலி இருந்தாலும் அக்குபஞ்சர் சிறப்பாக உதவும். வலி விரைவாகவும் நிரந்தரமாகவும் குணமடையத் தேர்ந்த அக்குபஞ்சர் மருத்துவரிடம் சிகிச்சை பெறுங்கள். அவரிடமே அக்குபிரஷர் என்னும் தொட்டு அழுத்தும் முறையை கற்றுக் கேளுங்கள். பக்க விளைவுகள் ஏதுமின்றி நிவாரணம் பெறவும், தேவையான எந்த இடத்திலும், சூழ்நிலையிலும் சுலபமாக, சுயமாக எந்தச் செலவுமின்றி இதைப் பயன்படுத்திக் குணம் அடையவும் முடியும்.

தலைவலிகளுக்கெல்லாம் அரசனான ஒற்றைத் தலைவலி:

முக்கியமானது பிரசித்தி பெற்ற தலைவலிகளுக்கெல்லாம் அரசனான ஒற்றைத் தலைவலி. இது மிகக் கடுமையான வலியையும் துன்பத்தையும் ஏற்படுத்தக் கூடியது. வலியானது தலையின் ஒரு பக்கத்தில் ஆரம்பமாகி வீணை நரம்புகளைச் சுண்டி மீட்டுவது போல, தலையின் நரம்புகளைச் சுண்டி கடுமையான வேதனையைக் கொடுக்கும். பலருக்கு வலி கழுத்து வலியாகத் தோளில் இறங்கி கை வரை நீளும். சிலருக்குக் கண்கள் மங்கலாகும். வாந்தி வரும். எந்த வேலையும் செய்ய இயலாது. பலர் உடனே படுக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டு படுத்தும் விடுவார்கள்.

பெரும்பாலும் இத் தலைவலி குறிப்பிட்ட ஒரே நேரத்தில் தினமும் வரலாம். மொத்தத்தில் ஒற்றைத் தலைவலி உள்ளவர்கள் அன்றாட வாழ்வில் அதிகப்படியான துன்பத்தை அனுபவிக்கிறார்கள். எனக்குத் தெரிந்த ஒருவர் சாலையில் வண்டி ஓட்டிச் செல்லும்போது திடீரென்று ஒற்றைத் தலைவலி வந்துவிடும். அந்நேரத்தில் எவ்வளவு போக்குவரத்து நெரிசல் இருந்தாலும் வண்டியை அப்படியே சாலையில் போட்டுவிட்டு அருகிலிருக்கும் கடைத் தாழ்வாரங்களில் படுத்துவிடுவார். வலியால் துடித்து உணர்வு குறைந்து காணப்படுவார். வாந்தியும் எடுப்பார்.

இதுபோன்று பலர் பல்லாண்டுகளாக ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுவார்கள். பெரும்பாலும் வைத்தியம் செய்தும் கொள்வார்கள். ஆனால் நிரந்தர குணம் என்பது எட்டாத கனியாகவே இருக்கும். இவர்களிடம் உங்களுக்கு ஏதாவது ஆசை உண்டா என்று கேட்டால், தயக்கமே இல்லாமல் ஒற்றைத் தலைவலியில் இருந்து விடுதலை வேண்டும் என்பார்கள். அந்த அளவுக்கு உடல் மன உபாதைகளைக் கொடுக்கக் கூடியது. இவர்களுக்கு இதில் இருந்து விடுதலை உண்டா என்று கேட்டால் நிச்சயமாக உண்டு என்பதுதான் கைதேர்ந்த அக்குபஞ்சர் மருத்துவரின் பதிலாக இருக்கும். சித்த, ஆயுர்வேத முறைகளில் நிவாரணம் உண்டு என்றாலும், அக்குபஞ்சரில் உடனடியாகவும் நிரந்தரமாகவும் குணமாகும் நோய்களின் பட்டியலில் ஒற்றைத் தலைவலிக்கு முதல் இடம்.

இறைவனின் அற்புதங்களில் முதலிடம் பெறும் மனிதன், ஐம்பூதங்களாகிய நிலம், நீர், நெருப்பு, காற்று (உலோகம்), மரம் ஆகியவற்றின் பிரதிநிதியாக உள்ளான். இவ்வைந்தும் சமநிலையில் இருக்கும்போது நோய்கள் தோன்றாது. நமது சித்த, ஆயுர்வேதத்தின் வாத, பித்த, கபம் போன்றவை சமநிலையில் இருக்கும்போது நோய்கள் தோன்றாது என்பன போன்றதுதான் அக்குபஞ்சரின் ஐம்பூதத் தத்துவம்.

சமநிலையற்றுப்போகும் ஐம்பூதங்களில் ஒன்றையோ, ஒன்றுக்கு மேற்பட்டதையோ சரிசெய்யும்போது நோய்களிலிருந்து மீளலாம். தேர்ந்த அக்குபஞ்சர் மருத்துவர் கைநாடி பரிசோதனை, நாக்கு, கண்கள், நகம், பற்கள் ஆகியவற்றின் மூலம் குறைபாடுகளைக் கண்டறிந்து மிக மெல்லிய ஊசிகளை குறிப்பிட்ட சக்தி ஓட்டப்பாதைகளில் செருகும் போது உடனடியாக அவ்வுறுப்புகளுக்குப் புதிய சக்தி சென்றடைந்து குணம் கிடைக்கிறது. அது நிரந்தர குணமாகவும் நிலைத்து விடுகிறது.

ஒவ்வொருவருக்கும் அவரவர் நாடிகளுக்கேற்ப ஊசி செலுத்தும் இடங்கள் வேறுபடலாம். சிலருக்கு ஒரே நாளிலும் சிலருக்கு ஒரு வாரத்திலும் குணம் கிடைக்கும். நல்ல, நீடித்த, நிரந்தர குணம் கிடைக்க ஏழு நாள்கள் தொடர் சிகிச்சை எடுத்துக் கொள்வது சிறந்தது. அக்குபஞ்சர் சிகிச்சையுடன் அக்குபிரஷர் என்னும் கை, கால்களில் மெல்ல தொட்டு அழுத்தும் சிகிச்சை முறை பாதிக்கப்பட்டவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்படும். இவ்விரண்டையும் முறையாக கடைப்பிடிப்பவர்கள் ஒற்றைத் தலைவலியில் இருந்து விடுதலை பெறலாம்.

அவரவர் வசதிக்கேற்ப, நம்பிக்கைகளுக்கு ஏற்ப எந்த வைத்திய முறையில் சிகிச்சை எடுத்துக் கொண்டாலும் கூடுதலாக அக்குபஞ்சர் சிகிச்சையும் மேற்கொண்டால் பக்க விளைவுகளற்ற விரைவான நிரந்தர குணம் அடைவது நிச்சயம் என உறுதிபடக் கூறலாம். மருத்துவம் என்பது பாதிப்படைந்த உடலை நல்ல நிலைக்குக் கொண்டுவரும் ஒரு உத்திதான். மீண்டும் உடலில் நோய்கள் அணுகாத வண்ணம் காப்பது அவரவர் கடமையாகும். கண்டதைச் சாப்பிடுவதும் பழைய நோய்க்கு முந்தைய வாழ்க்கை முறையில் நீடிப்பதும், வீண் பிரச்சினைகளை தலையில் போட்டுக் கொள்வதும், ஒழுக்கம் தவறி நடப்பதும், உடற்பயிற்சி இன்றி இருப்பதும், பொறாமையும் மீண்டும் நோய்களுக்கு நாமே அழைப்பு விடும் செயல்களாகும். இதையே, தலைவலி போய் திருகுவலி வந்த கதை என்றும் சொல்லலாம். ஆகவே, நோய் நிவாரணம் பெற்றவுடன் எளிய நல்ல பழக்கங்களை மேற்கொண்டு நிச்சயமாக, ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக வாழலாம்.
தலைவலியைப்பற்றி மேலும் விளக்கங்களுக்கு :

http://www.indg.in/health/diseases/ba4bb2bc8bb5bb2bbf

http://www.nidur.info

Thursday, April 8, 2010

ஒரு நாள் உறவு : ஆண்கள் / பெண்கள் பார்வையில்.


“ஒரு நாள்” மட்டும் கொஞ்சிக் குலாவி உடலுறவு கொள்ளும் குறுகிய கால உறவுகளைக் குறித்து ஆண்களும் பெண்களும் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்த ஆராய்ச்சியில் இறங்கியது டர்காம் பல்கலைக்கழகம்.
இந்த அனுபவத்தைப் பெற்ற பெண்கள் பெரும்பாலும் குற்ற உணர்வில் உழல்வதாகவு
ம், இனிமேல் இத்தகைய உறவுகள் வேண்டாம் என மறு நாள் காலையில் (தான்) அவர்கள் நினைப்பதாகவும் இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.
ஆண்களில் 23 விழுக்காட்டினரும் பெண்களில் 58 விழுக்காட்டினரும் இந்த அனுபவத்தை (எல்லாம் முடிந்தபின்) சீச்..சீ என்றிருக்கின்றனர்.
1743 பேரைக் கொண்டு விரிவாக நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சி பெண்களின் மன நிலையையும், ஆண்களின் மனநிலையையும் பட்டியலிட்டிருக்கிறது.
அதாவது பெண்கள் நீண்டகால உறவுப் பிணைப்பையும், கரிசனை, அன்பு, கவனிப்பு கலந்த துணையையும் விரும்புவதாகவும், ஆண்கள் “அழகான” பெண்ணை விரும்புவதாகவும் இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. ( இதுக்கு ஆராய்ச்சி வேற தேவையா என முணுமுணுப்பவர்கள் இதன் வழிகாட்டி ஆனி கேம்பெல்லை தொடர்பு கொள்ளவும்)
தாங்கள் பயன்படுத்தப்பட்டு விட்டதாகவும், நினைத்ததை விட மோசமானதாகவே இந்த அனுபவம் இருப்பதாகவும் பல பெண்கள் வருத்தம் தெரிவித்திருக்கையில், தனக்குக் கிடைத்த துணை அழகாய் இல்லை என்றே பல ஆண்கள் வருத்தம் தெரிவித்தார்களாம்.
தேவையற்ற ஆராய்ச்சிகளுக்காக பணத்தை விரயமாக்குவது மேலைநாட்டினருக்கு ஒரு பொழுதுபோக்காகவே ஆகிவிட்டது. இந்த ஆராய்ச்சிக்குச் செலவான பணத்தை ஹெய்திக்கு அனுப்பி அங்குள்ள ஏதேனும் ஒரு குழந்தைக்கு ஒரு நேர உணவை கொடுத்திருக்கலாம். புண்ணியமாவது கிடைத்திருக்கும்.

நன்றி  :http://sirippu.wordpress.com
ஒரு நாள் உறவு : ஆண்கள் / பெண்கள் பார்வையில்.

ஓபன் ஹார்ட் சர்ஜரி – பைபாஸ் சர்ஜரி: என்ன வித்தியாசம்?

lankasri.comஐந்து நிமிடங்களுக்கு மேல் ரத்த ஓட்டம். இல்லையென்றால், உடனே இதயம் நின்று போகும். இதயம் வேலை செய்யாது நின்று போனால், மூளை உட்பட அத்தனை உறுப்புகளும் செயலிழந்து, உயிர் நம் உடம்பிலிருந்து பிரிந்து மனிதன் இறந்து போக நேரிடும்.
1928வது வருடம் வரை இதய அறுவைச் சிகிச்சை என்பது ஒரு முடியாத காரியமாகவே இருந்தது. 1928ம் வருடம் கட்லர் என்ற சர்ஜன் எந்தவிதக் கருவியுமில்லாமல் மார்பின் இடதுபுறத்தைத் திறந்து கைவிரலால் இதயம் துடிக்கும்போதே இதய ஈரிதழ் வால்வு சுருக்கத்தை மூடிய முறை (இஃOகுஉஈ ஏஉஅகீகூ) இதய அறுவைச் சிகிச்சை மூலம் விரிவடையச் செய்தார். அதன் பிறகு 1956 வரை சாதாரண இதய அறுவைச் சிகிச்சைகளை மேற்கூறிய மூடிய முறை அறுவைச் சிகிச்சைகளே உலகம் முழுவதும் நடந்து கொண்டிருந்தன.
1956ம் வருடம் அமெரிக்க பேராசிரியர் கிப்பன் என்ற இதய அறுவைச் சிகிச்சை நிபுணர். நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு, இதய துடிப்பை (இயக்கத்தை) நிறுத்தி 5 மணி நேரம்கூட இதயத் துடிப்பில்லாமல் ஓபன் ஹார்ட் அறுவைச் சிகிச்சை முறையை முதலில் செய்து காண்பித்தார். இந்தியாவில், 1970ல் சென்னை பொது மருத்துவமனையில் இந்தியாவின் முதல் ஓபன் ஹார்ட் ஆபரேஷன் செய்யப்பட்டது.
ஓபன் ஹார்ட் ஆபரேஷன்
இதயத் துடிப்பை நிறுத்தி இதய ஆபரேஷன் செய்வதால் மட்டும் ஓபன் ஹார்ட் ஆபரேஷன் என்று கூறிவிட முடியாது. சாதாரணமாக 5 நிமிடங்களுக்கு மேல் இதயத்துடிப்பு நின்றாலே நாம் இறந்து விடுவோம். ஆனால், ஓபன் ஹார்ட் ஆபரேஷனில் 5 மணி நேரத்திற்கும் மேல் இதயத்துடிப்பை நிறுத்தி, மறுபடியும் இதய இயக்கத்தை உண்டாக்கி நோயாளியைப் பிழைக்க வைக்க முடியும். இந்த,”ஓபன் ஹார்ட்’ (திறந்த முறை) இதய அறுவைச் சிகிச்சை முறையில் செயற்கை இதய, நுரையீரல் இயக்கி வைக்க முடிகிறது. இந்த சிறந்த முறை அறுவைச் சிகிச்சை முறையில் உடம்பிலுள்ள பிராண வாயு குறைந்த (அசுத்த) ரத்தம் முழுவதும் இரண்டு பெரிய பிளாஸ்டிக் குழாய்கள் மூலம் இணைக்கப்பட்டு உடம்பிலிருந்து உறியப்பட்டு, அந்த அசுத்த ரத்தம் செயற்கை நுரையீரல் மிஷினில் செலுத்தப்படுகிறது. செயற்கை நுரையீரல் மிஷின் உடம்பின் வெளியே கொண்டு வரப்பட்ட அசுத்த ரத்தத்தை முழுவதும் சுத்தம் செய்து 100 சதவீதம் பிராணவாயு கலந்து சுத்த ரத்தமாக மாற்றுகிறது.
இதயத்தை திறந்து ஆபரேஷன் முழுவதும் முடிந்தவுடன் 30 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்குக் குறைவான ரத்த வெப்பத்தை, ஹைபோதெர்மியா மிஷின் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகப்படுத்தி, 37 டிகிரி செல்சியஸ் அளவு வந்தவுடன், இதயம் துடிக்க ஆரம்பிக்கிறது. அதே சமயம், மகாதமனியை கிளாம்ப் செய்த உபகரணத்தை எடுத்து விட வேண்டும். அந்த சமயத்தில் ஆபரேஷன் பண்ணப்பட்ட நோயாளியின் ரத்தத்தின் அமிலம், காரத்தன்மை (அஇஐஈ ஆஅகுஉ ஆஅஃஅNஇஉ), மற்றும் ரத்த பொட்டாசியம், சோடியம் போன்ற உப்புச்சத்துக்களைச் சரி செய்து, உடம்பின் ரத்தம் கசியும் தன்மையையும் சரி செய்தவுடன், இதயத்துடன் இணைக்கப்பட்ட பிளாஸ்டிக் குழாய்கள் ஒவ்வொன்றாக எடுத்து, கசியும் ரத்தத்தை உடம்பிலிருந்து வெளியேற்ற இதயத்தின் மேலும், வலது மார்புகூட்டிலும், பிளாஸ்டிக் குழாய்களை இணைத்து, உடம்பில் வீணாகும் ரத்தத்தை உடம்பின் வெளியே ஒரு பெரிய கண்ணாடி பாட்டிலில் இணைத்துவிடலாம்.
ஆபரேஷன் செய்த பிறகு இதயம் சரிவர துடிப்பதற்கும், மூளை, நுரையீரல் போன்ற மற்ற உறுப்புகள் சரியாக வேலை செய்வதற்கும் ஆபரேஷன் செய்த புண் ஆறுவதற்கும் சரியான மருந்துகளைக் கொடுத்து இதய ஆபரேஷன் செய்த நோயாளியை முற்றிலும் குணப்படுத்தி விடலாம்.
பைபாஸ் சர்ஜரி
பைபாஸ் சர்ஜரி என்பது இதய ரத்தக்குழாய் முழுவதும் அடைபடுவதால் உண்டாகக்கூடிய மாரடைப்பு நோய்க்கு செய்யக்கூடிய இதய ஆபரேஷன். இந்த ஆபரேஷனை திறந்த முறை இதய ஆபரேஷன் மூலம், செயற்கை இதயம் மற்றும் நுரையீரல் மிஷின்களை உபயோகப்படுத்தி இதய துடிப்பை நிறுத்தியும் ஆபரேஷன் செய்யலாம். இதயத்துடிப்பை நிறுத்தாமலும், செயற்கை இதயம் மற்றும் நுரையீரல் மிஷின்களை உபயோகிக்காமலும் ஆபரேஷன் செய்யலாம்.
பைபாஸ் சர்ஜரி செய்வதற்கு காலில் உள்ள அசுத்த ரத்தத்தை இதயத்திற்கு கொண்டு செல்லும் செபனஸ் ரத்தக்குழாய் மற்றும் மார்புக்கூட்டின் உட்புறமுள்ள இடது மற்றும் வலது உள்மார்பு ரத்தக்குழாய்கள் மற்றும் முன் கையில் உள்ள ரேடியல் ரத்தக்குழாய்கள் போன்றவற்றை உபயோகித்து மேற்கூறிய ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ரத்தக்குழாய்களின் அடைப்பின் தன்மையைப் பொறுத்து மகாதமனியின் ஆரம்பத்திலும், இதய ரத்தக் குழாய் அடைப்பின் கீழும் இணைத்து பைபாஸ் சர்ஜரி செய்யப்படுகிறது.
பைபாஸ் சர்ஜரி என்பது ஓபன் ஹார்ட் சர்ஜரியின் மூலமும் செய்யக்கூடிய ஒரு தனிப்பட்ட இதய அறுவைச் சிகிச்சை முறை.
பொதுவாக பொதுமக்களுக்கு ஓபன் ஹார்ட் சர்ஜரியும், பைபாஸ் சர்ஜரியும் ஒன்று என்ற குழப்பத்திற்கு மேற்கூறிய விளக்கம் பொருத்தமானதாக இருக்கும்.
                                                                       --லங்கஸ்ரீ--
நன்றி  :http://www.tamilsaral.com
 ஓபன் ஹார்ட் சர்ஜரி – பைபாஸ் சர்ஜரி: என்ன வித்தியாசம்?

எனக்கொரு உண்மை உணர்த்துவாயா தோழா?

எனக்கொரு உண்மை உணர்த்துவாயா தோழா? உலகின் பணக்கார
நாடுகளில் ஒன்றான குவைத்தில் சில தீண்டத்தகாத முஸ்லிம்களா?
 
(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பி.எச்.டி, ஐ.பீ.எஸ்(ஒ)

      இஸ்;;லாத்தில் அடிமைத்தனத்திற்கு 1400 ஆண்டுகளுக்கு முன்பு சம்மட்டியடி கொடுத்து விடைகொடுத்தனுப்பப்பட்டு அனைத்து மக்களுக்கும் சம உரிமை வழங்கப்பட்டது என்று சரித்திர மாணவனான என்னைப்போன்றவர் உள்பட அனைத்து முஸ்லிம்களும் எண்ணிக் கொண்டுள்ள வேலையில் 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரீடர்ஸ் டைஜஸ்ட் என்ற ஆங்கில மாத இதழில் பக்கம் 18லிருந்து 22வரை ஒரு உண்மைச் சம்பவத்தினை ‘நிக் வால்க்கர’; என்ற அமெரிக்கர்(பெர்சனல் ஸ்டோரிஸ் பியான்ட் தி கால் ஆப் டெய்லி லைப்) தனது 2008 ஆண்டு அங்கு ஆசிரியராக சில காலம் பணியாற்றியபோது கிடைத்த அனுபவமாக எழுதியுள்ளார். அவர் எழுதியதினை உங்கள் கஎனத்திற்குக் கொண்டு வருவது தவறில்லை என நினைக்கிறேன். ஏனென்றால் நம்மில் சிலரும, நம்முடைய உறவினர் சிலரும் குவைத் நாட்டில் வேலை செய்கின்றனர் என்பதாலும், குவைத் ஒரு இஸ்லாமிய நாடு என்பதாலும் தானே!

      குவைத் 19.6.1961ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தது. இன்று அங்கே அரசியலமைப்பிற்குட்பட்ட மன்னராட்சி செயல்பட்டுக் கொண்டு வருகிறது. குவைத் நாடு ஈராக்கிற்கும், சௌதி அரேபியாவிற்கும் இடையில் இருக்கிறது. அந்த நாட்டை ஈராக் தங்களைச சார்ந்தது என அறிவித்து 1990ஆம் ஆண்டு மறைந்த சதாம் ஹ_சைன் படை ஆக்கிரமிப்பு செய்து அதன் பின்பு அமெரிக்கக் கூட்டுப்படை ஈராக்கிடமிருந்து குவைத்தினை மீட்டு ஓடிப்;;;போன மன்னரை வரவழைத்து மறுபடியும் அந்த நாட்டை ஒப்படைத்தது இன்னும் அந்த கூட்டுப்படை அங்கே ஒட்டுண்ணிகளாக இருக்கின்றனர் என்பதினை ஒரு பசுமை நினைவிற்காகச் சொல்கிறேன். குவைத் எண்ணெய் வளமிக்க செல்வம் கொழிக்கும் நாடு. அந்த நாட்டில சுமார் 26 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். அவர்களில் ‘படூவின்’ இன மக்கள் சுமார் ழூன்று லட்சம் பேர் உள்ளனர். அவர்கள் அந்த நாட்டு பிரஜை இல்லை என்று அதிர்ச்சி தகவலாக உள்ளது. அவர்களை ஆங்கிலத்தில் ‘வித்தவுட்’ டிக்கட் என்று கேலி செய்வோமே அதேபோன்று எந்த அடிப்படை உரிமையும் வழங்கப்பட இல்லையாம்.
 
From : Muduvai Hidayath

LinkWithin

Related Posts with Thumbnails