இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஆட்டோ தொழிற் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஆட்டோ வாங்க கடன் வழங்கும் திட்டம்
இத்திட்டத்தின் கீழ் இஸ்லாமிய இளைஞர்கள் ஆட்டோ பெற்று, சுய தொழில் தொடங்கிட தொழில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஆட்டோ கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டம் தனி நபர் கடன் வழங்கப்படும் முறைகள் அடிப்படையில் வழங்கப்படுகின்றன. இத்திட்டம் 'தாட்கோ' வங்கி மூலம் நடைமுறைப்படுத்தப்படுகிறது1. இத்திட்டத்தில் பயன்பெறுபவர் இஸ்லாமிய இளைஞராக இருக்க வேண்டும்.
2. பயனாளி ஆட்டோ வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும். இவரது குடும்ப ஆண்டு வருமானம் நகரமாயின் ரூ. 54,500/ மற்றும் கிராமப் பகுதியாயின் ரூ. 39,500/க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
3. பயனாளிகள் ஒவ்வொருவரும் ரூ. 800/ தொகையை பங்கு மூலதனமாக ஆட்டோ தொழிற் கூட்டுறவு சங்கத்திற்கு அளிக்க வேண்டும்.
4. பயனாளிகள் ஒவ்வொருவரும் இரண்டு ஆட்டோ ஓட்டுநரின் பிணையம் மற்றும் சொத்து ஜாமீன் அளிக்க வேண்டும். சொத்து ஜாமீன் அளிக்க இயலாதவர்கள், கூடுதலாக குடும்பத்தில் வருமானம் ஈடுபவரின் பிணையம் மற்றும் ஆட்டோ கடன் தொகையில் 10 சதவீதம் தாட்கோ வங்கியில் வைப்பு நிதியாக செலுத்த வேண்டும். இத்தொகைக்கு 7 சதவீத வட்டி தாட்கோ வங்கி அளிக்கிறது. தவணை தவறினால் வைப்பு நிதி ஈடுகட்டப்படும்.
5. ஆட்டோ கடன் தொகையில் 5 சதவீதத் தொகையை பயனாளிகள் பங்கு தொகையாக செலுத்த வேண்டும்.
6. ஆட்டோ தொழில் கூட்டுறவு சங்கம், உறுப்பினர் மற்றும் பயனாளிகளிடமிருந்து பிரதி மாத தவணை தொகையை தினந்தோறும் வசூலித்து தாட்கோ வங்கியில் செலுத்த நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள
7. ஆட்டோ தொழிற் கூட்டுறவு சங்கம், தொழில் மற்றும் வணிக துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும். தொழிற் மற்றும் வணிகத்துறையின் கண்காணிப்பாளர், இச்சங்கத்தின் சிறப்பு அலுவலராக செயல்படுவர்.
மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள் :
1. சாதி சான்றிதழ்
2. வருமானச் சான்றிதழ்
3. குடும்ப அட்டை
4. இருப்பிட சான்று
5. ஓட்டுநர் உரிமம்
அணுக வேண்டிய முகவரி :
1. அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்
2. மேலாளர், தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி
3. பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம்
துறைத் தலைமை :
மேலாண்மை இயக்குநர்
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்
807 அண்ணா சாலை, 5 வது தளம்
சென்னை 600 002
தொலைபேசி : 044 28514846
தகவல் உதவி : ஈரோடு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலாளர் முஹம்மது இக்பால் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ள தகவல் களஞ்சியம் 2009 திலிருந்து
--
fromMUDUVAI HIDAYATH
No comments:
Post a Comment