Tuesday, April 27, 2010

மனிதனின் கண்கள்!!

From:
Faizur Hadi

    'ஒருவரும், தன் மீது சக்தி பெறவே மாட்டார்' என்று அவன் எண்ணிக்கொள்கிறானா?
    'ஏராளமான பொருளை நான் அழித்தேன்' என்று அவன் கூறுகிறான்.
    தன்னை ஒருவரும் பார்க்கவில்லையென்று அவன் எண்ணுகிறானா?
    அவனுக்கு நாம் இரண்டு கண்களை ஆக்கவில்லையா?
    மேலும் நாவையும், இரண்டு உதடுகளையும் (ஆக்கவில்லையா)? (திருக்குர்ஆன் 90:6to9)

    என்று மனிதர்களுக்கு இறைவன் செய்த அருட்கொடைகளை சுட்டிக்காண்பித்து மனிதர்கள் ஒரே இறைவனான அல்லாஹ்வை வணங்க வேன்டும் என்பதர்க்காக உதாரனங்களை குறிப்பிடுகின்றான்.
    இப்போது கண்களைப் பற்றி சில தகவல்களை அறிந்துகொள்வோம்.

    இந்த உலகத்தைக் கண்டு ரசிப்பதற்கு நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிசய உறுப்பு - கண். இது எவ்வாறு இயங்குகிறது?

    நமது கண் ஒரு கேமிராவைப் போன்று இயங்குகிறது. ஒளியின் உதவியுடன் ஒரு கேமிரா பொருட்களைப் படம் பிடிப்பதைப் போல, நமது கண்ணும் ஒளியின் உதவியுடன் பொருட்களின் உருவத்தை கணப்பொழுதில் படம்பிடித்து, மனதில் பதிவு செய்து, பின்பு அதை மூளையில் விருத்தி(டெவலப்) செய்கிறது. கண்ணின் அனைத்து பாகங்களும் ஒருங்கிணைந்து, ஒரு குழுவைப் போன்று இயங்கி நமக்குப் பார்வை அளிக்கிறது.
 
  இதில் ஃபிலிம் போன்றுள்ள ‘கார்னியா’(விழிப்படலம்) என்ற பாகம் முக்கிய பங்கு வகிக்கிறது. கருமையான ‘கண் மணி’க்குள் நுழையும் ஒளிக்கதிர்களை, ‘கார்னியா’ திசைதிருப்புகிறது. திசை திரும்பிய ஒளிக்கதிர் ‘கண்மணி’க்குப் பின்னால் உள்ள ‘லென்ஸ்’-ஐச் சென்றடைகிறது. இந்த ‘லென்ஸ்’ தனது உருவத்தை மாற்றிக் கொண்டு, தொலைவில் மற்றும் அருகில் உள்ள பொருட்களின் மீது ஒளிக்கதிர்களை ஒருமுனைப்படுத்துகிறது. இச்செயல் ‘அக்காமடேஷன்’ எனப்படுகிறது.



    கேமிரா-வில் உள்ள ஃபிலிமைப் போன்று இயங்கும் ‘ரெடினா’-வில், ‘லென்ஸ்’ ஒரு தலைகீழ் உருவத்தைப் பதிக்கிறது. பதிக்கப்பட்ட உருவம், மின் விசைகளாக மூளைக்குள் செலுத்தப்பட்டு, அங்கு அவை விருத்தி(டெவலப்) செய்யப்படுகின்றன

    இந்த சின்னஞ்சிறு கண்களிளே இத்தனை
வேளைகளை வைத்திருக்கும் படைப்பாளனான அந்த ஓர்இறைவன் அல்லாஹ்வை மறந்து, இறைவன் படைத்தவற்றை மனிதர்கள் வணங்குவது மாபெரும் பாவமும், இறைவனுக்கு செய்கின்ற துரோகமுமாகும்.

 நிச்சயமாக உங்கள் இறைவன் அல்லாஹ்தான். அவன் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் - பின்னர் தன் ஆட்சியை அர்ஷின் மீது அமைத்தான்(இவை சம்பந்தப்பட்ட) அனைத்துக் காரியங்களையும் அவனே ஒழுங்குபடுத்துகின்றான். அவனுடைய அனுமதிக்குப் பின்னரேயன்றி (அவனிடம்) பரிந்து பேசுபவர் எவருமில்லை. இத்தகைய (மாட்சிமை மிக்க) அல்லாஹ்வே உங்களைப் படைத்துப் பரிபக்குவப் படுத்துபவன், ஆகவே அவனையே
வணங்குங்கள் (நல்லுணர்ச்சி பெற இவை பற்றி) நீங்கள் சிந்திக்க வேண்டாமா?(திருக்குர்ஆன்10:3)
    (அனைத்தையும்) படைக்கிறானே அவன், (எதையுமே) படைக்காத (நீங்கள் வணங்குப)வை போலாவானா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா? (திருக்குர்ஆன்16:17 )

  

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails