நாடுகளில் ஒன்றான குவைத்தில் சில தீண்டத்தகாத முஸ்லிம்களா?
(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பி.எச்.டி, ஐ.பீ.எஸ்(ஒ)
இஸ்;;லாத்தில் அடிமைத்தனத்திற்கு 1400 ஆண்டுகளுக்கு முன்பு சம்மட்டியடி கொடுத்து விடைகொடுத்தனுப்பப்பட்டு அனைத்து மக்களுக்கும் சம உரிமை வழங்கப்பட்டது என்று சரித்திர மாணவனான என்னைப்போன்றவர் உள்பட அனைத்து முஸ்லிம்களும் எண்ணிக் கொண்டுள்ள வேலையில் 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரீடர்ஸ் டைஜஸ்ட் என்ற ஆங்கில மாத இதழில் பக்கம் 18லிருந்து 22வரை ஒரு உண்மைச் சம்பவத்தினை ‘நிக் வால்க்கர’; என்ற அமெரிக்கர்(பெர்சனல் ஸ்டோரிஸ் பியான்ட் தி கால் ஆப் டெய்லி லைப்) தனது 2008 ஆண்டு அங்கு ஆசிரியராக சில காலம் பணியாற்றியபோது கிடைத்த அனுபவமாக எழுதியுள்ளார். அவர் எழுதியதினை உங்கள் கஎனத்திற்குக் கொண்டு வருவது தவறில்லை என நினைக்கிறேன். ஏனென்றால் நம்மில் சிலரும, நம்முடைய உறவினர் சிலரும் குவைத் நாட்டில் வேலை செய்கின்றனர் என்பதாலும், குவைத் ஒரு இஸ்லாமிய நாடு என்பதாலும் தானே!
குவைத் 19.6.1961ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தது. இன்று அங்கே அரசியலமைப்பிற்குட்பட்ட மன்னராட்சி செயல்பட்டுக் கொண்டு வருகிறது. குவைத் நாடு ஈராக்கிற்கும், சௌதி அரேபியாவிற்கும் இடையில் இருக்கிறது. அந்த நாட்டை ஈராக் தங்களைச சார்ந்தது என அறிவித்து 1990ஆம் ஆண்டு மறைந்த சதாம் ஹ_சைன் படை ஆக்கிரமிப்பு செய்து அதன் பின்பு அமெரிக்கக் கூட்டுப்படை ஈராக்கிடமிருந்து குவைத்தினை மீட்டு ஓடிப்;;;போன மன்னரை வரவழைத்து மறுபடியும் அந்த நாட்டை ஒப்படைத்தது இன்னும் அந்த கூட்டுப்படை அங்கே ஒட்டுண்ணிகளாக இருக்கின்றனர் என்பதினை ஒரு பசுமை நினைவிற்காகச் சொல்கிறேன். குவைத் எண்ணெய் வளமிக்க செல்வம் கொழிக்கும் நாடு. அந்த நாட்டில சுமார் 26 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். அவர்களில் ‘படூவின்’ இன மக்கள் சுமார் ழூன்று லட்சம் பேர் உள்ளனர். அவர்கள் அந்த நாட்டு பிரஜை இல்லை என்று அதிர்ச்சி தகவலாக உள்ளது. அவர்களை ஆங்கிலத்தில் ‘வித்தவுட்’ டிக்கட் என்று கேலி செய்வோமே அதேபோன்று எந்த அடிப்படை உரிமையும் வழங்கப்பட இல்லையாம்.
From : | Muduvai Hidayath |
No comments:
Post a Comment