Monday, April 12, 2010

இறைநேசர்களிடம் உதவி கேட்கலாமா? தாருல் உலூம் யூஸூஃபிய்யா மதரஸாவின் தீர்ப்பு!

திண்டுக்கல் பேகம்பூர் தாருல் உலூம் யூஸூஃபிய்யா அரபிக்கல்லூரியின் தீர்ப்பிலிருந்து:

அல்லாஹ்வுடைய நேசர்கள் கப்ரில் இருந்து கொண்டு நம்முடைய தேவைகளை நிறைவேற்றவும், ஆபத்துகளை நீக்கி வைப்பதற்கும் வல்லமை படைத்தவர்கள் என்றும் அவர்கள் உலக நிர்வாகத்தில் தலையிட்டு தங்களை அழைப்பவர்களுக்கு சாதாகமாக உதவி செய்ய சக்தி படைத்தவர்கள் என்றும், நம்புவது ஈமானக்கு விரோதமானது.

குர்ஆன் கூறும் ஏகத்துவக் கொள்கைக்கு முரணானது.

சுன்னத் வல் ஜமாஅத்துடைய கொள்கைக்கு எதிரானது.

எந்த இமாம்களும் இதை ஆதரிக்கவில்லை.

இந்த விஷயத்தில் பொதுவாக மக்களுக்கு ஒரு எண்ணமும் அதன் காரணமாக தவறான நம்பிக்கைக்கு வழியும் உண்டாகிறது. அதாவது இறந்தவர்கள் இருக்கும் இடங்களுக்குப் போய் தமது தேவைகளைக் கேட்பதால் அவை கிடைக்கவும் செய்கின்றனவே, அப்படியிருக்க அவர்களிடம் கேட்கக்கூடாது என்பது எப்படி சரியாக முடியும்? இது பலரின் உள்மனதில் ஓடிக்கொண்டிருக்கிற ஒட்டிக்கொண்டிருக்கிற ஒரு ஆழமான விஷயம்.

கண்கூடாகப் பரவலாக காணப்படும் இதற்கு என்ன பதில் சொல்வது? என்ற யோசிப்பும் ஏராளம் இருக்கிறது. இதில் முக்கியமான ஒரு பதில் மட்டும் இங்கு குறிப்பிடுகிறோம்.

ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மனைவி ஜைனப் ரளியல்லாஹு அன்ஹா கூறுகிறார்கள்:-
எனது கண்ணில் ஒரு நமைச்சல் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. நான் ஒரு யஹூதியிடம் அதற்கு மந்திரித்துக் கொள்வேன். அது குணமாகிவிடம். (அதையறிந்து) எனது கணவர் இப்னு மஸ்ஊத் (ரளியல்லாஹு அன்ஹு) கூறினார்கள், ''ஷைத்தான் உன் கண்ணை நோண்டி விட்டுக் கொண்டிருந்தான். இந்த யஹூதி மந்திரித்தவுடன் அவன் நோண்டுவதை நிறுத்திக் கொண்டான். அவ்வளவுதானே தவிர அவன் மந்திரித்ததால் குணமாகவில்லை. நீ அதை விட்டுவிட்டு ரஸூலுல்லாஹி ஸல்லலல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதிய (துஆவை) ஓதினாலே போதுமாகிவிடும். அதாவது ''மனிதர்களின் ரப்பே! இந்த தொந்தரவை போக்கிவிடு! எனக்கு சுகம் கொடுத்துவிடு! நீ தான் சுகம் கொடுக்கிறவன் நீ அளிக்கும் ஷிஃபாவைத்தவிர வேறு ஷிஃபா கிடையாது. (அபூதாவூது 3883, முஸ்னத் அஹமத் 3608)''

இந்த ரிவாயத்திலிருந்த ஈமானைக் கெடுக்கவும் மற்றவற்றின் மீது நம்பிக்கை ஏற்படவும், ஷைத்தான எப்படியெல்லாம் முயல்கிறான் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். அதே ஷைத்தான்கள் தான் காலத்திற்கேற்ப மக்கள் நம்புகிற வகையில் எல்லா முயற்சிகளும் செய்து கொண்டே இருக்கிறார்கள். நாம் சுகம் கிடைக்கிறது என்பதை மட்டும் பார்த்து எமாந்து விடக்கூடாது.

மவ்லவி, எஸ். லியாகத் அலீ மன்பஈ.

நன்றி: ஜமாஅத்துல் உலமா மாத இதழ் - ஏப்ரல் 2010

இன்ஷா அல்லாஹ், ஃபத்வாக்கள் தொடரும்.

www.nidur.info

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails