இறைத்தூதர் صلى الله عليه وسلم அவர்களின் இறுதிப் பேருரை!
இதற்கு முன் என்றுமே இருந்திராத அளவிற்கு மாபெரும் கூட்டத்தால் அன்று சங்கைமிகு மக்காவின் புனித பள்ளிவாசல் நிரம்பி வழிந்தது. அங்கு கூடியிருந்தோரின் உள்ளச்சமும் வணக்க வழிபாடுகளும் அவர்களின் ஆன்மிக உணர்வுகள் முழுமை அடைந்திருந்ததை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன.
அதுதான் ஹிஜ்ரி 10-ஆம் ஆண்டு ஹஜ் கடமையை நிறைவேற்ற கூடியிருந்த மாபெரும் கூட்டத்தின் எதார்த்த நிலையாகும். அரபுலகம் முழுவதிலுமிருந்து சுமார் ஒரு இலட்சத்து இருபதாயிரத்திற்கும் அதிகமானவர்கள் அங்கே குழுமியிருந்தார்கள்.
அதுவும் ஒரு மகத்தான வணக்கத்தை, மகத்தான இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் சேர்ந்து நிறைவேற்றுகிற மன மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள். இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அங்கு வந்திருந்த அனைவரையும் துல்ஹஜ் பிறை எட்டின் நடுப்பகலுக்குப் பிறகு மக்காவிலிருந்து 'மினா'விற்கு அழைத்துச் சென்றார்கள்.
அங்கு ளுஹர், அஸ்ர், மக்ரிப், இஷா, ஸுப்ஹு ஆகிய தொழுகைகளை முடித்துவிட்டு சூரிய உதயத்திற்குப் பின், தோழர்களுடன் அரஃபா நோக்கிப் புறப்பட்டார்கள். அங்கு நமிரா பள்ளத்தாக்கில் நபியவர்களுக்காக கூடாரம்அமைக்கப்பட்டிருந்தது. அதில் சூரியன் உச்சி பொழுதைக் கடக்கும் வரை தங்கி இருந்தார்கள். அதன் பிறகு தமது 'கஸ்வா' ஒட்டகத்தைத் தயார் படுத்தக் கூறி, அதில் பயணித்து, 'பத்னுல்வாதி' எனும் பகுதிக்கு வந்தார்கள்.
அமைதி காத்த நிலையில் அந்த மக்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பார்த்தபடி நிற்க, அதே இடத்தில் தமது ஒட்டகத்தின் மீதமர்ந்தபடி நபியவர்கள் ஒரு சொற்பொழிவு ஆற்றினார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அப்போது ஆற்றிய அந்த உரையே "நபியவர்களின் இறுதிப் பேருரை" என்பதாக இன்று அறியப்படுகிறது.
கூட்டம் பிரமாண்டமாக இருந்ததால், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொற்பொழிவு அனைவரின் செவிகளுக்கும் சென்றடைவது சாத்தியமில்லை என்ற நிலை உருவானது.
எனவே, அங்கிருந்தோரிலேயே மிக உரத்த குரல் கொண்டிருந்த ரபீ இப்னு உமய்யா இப்னு கலஃபை அழைத்து, தமது பேச்சை எல்லோரும் செவியுறும் விதமாக ஒவ்வொரு வாக்கியமாய் திரும்பச் சொல்லுமாறு பணித்தார்கள். (அல் பிதாயா இப்னு கஸீர் 5/189)
தொடக்க துதி மொழிகள்
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனையே நாம் புகழ்கிறோம்; அவனிடமே நாம் உதவி தேடுகிறோம். நம்முடைய மன இச்சைகளின் கெடுதிகளை விட்டும், நம்முடைய செயல்களின் தீமைகளை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறோம். யாருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவானோ, அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. யாரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுவானோ, அவரை நேர்வழியில்
செலுத்துபவர் யாரும் இல்லை. இன்னும், நான் சாட்சி சொல்கிறேன்: "அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை. அவன் தனித்தவன்; அவனுக்குக் கூட்டாளி யாரும் இல்லை.' மேலும், நான் சாட்சி
சொல்கிறேன்: "நிச்சயமாக முஹம்மது, அவனுடைய அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்.' (ஸுனன் இப்னு மாஜா 1892,1893)
பிரிவின் முன்னறிவிப்பு
ஒஸ மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது (தாரீக் இப்னு கல்தூன் 2/58, இப்னு ஹிஷாம் 2/603, அர்ரஹீக் அல்மக்தூம் 461)
பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்!
மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; (உங்களது தந்தையும் ஒருவரே!) அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான். (அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)
தலைமைக்குக் கீழ்ப்படிவீர்!
ஒஸ மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்! (ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)
பிறர் உடமையைப் பேணுவீர்!
ஒஸ மக்களே! இந்த (துல்ஹஜ்) மாதமும், இந்த (துல்ஹஜ் 9ம்) நாளும், இந்த (மக்கா) நகரமும் எவ்வளவு புனிதமானவையோ, அப்படியே உயிர்களும், உங்கள் உடமைகளும் உங்கள் மானம் மரியாதைகளும் உங்களுக்குப் புனிதமானவை.
அராஜகம் செய்யாதீர்கள்!
அறிந்து கொள்ளுங்கள்! எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் வழிகெட்டவர்களாய் இறை நிராகரிப்பாளர்களாய் மாறி விடாதீர்கள். (ஸஹீஹுல் புகாரி 4403)
உங்களது இறைவனை நீங்கள் சந்திக்கும் வரை (இப்படியே வாழுங்கள்!) நீங்கள் அனைவரும் தவறாமல் அல்லாஹ்வின் முன்னிலையில் ஆஜராகப் போகிறீர்கள்! அப்போது அல்லாஹ் உங்களது செயல்களைப் பற்றி விசாரிப்பான்.
நான் மார்க்கத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களில் எவராவது மற்றவருடைய பொருளின் மீது பொறுப்பேற்றிருந்தால், அதை அவர் உரிய முறையில் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்து விடட்டும்! (ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹுல் புகாரி 67, 105, 1741, 1742)
பணியாளர்களைப் பேணுவீர்!
ஒ..மக்களே! முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள். உங்கள் அடிமைகள் விஷயத்தில் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நன்றாகப் பராமரியுங்கள்! நீங்கள் உண்பதையே அவர்களுக்கும் உண்ணக் கொடுங்கள்; நீங்கள் உடுத்துவதையே அவர்களுக்கும் உடுத்தச் செய்யுங்கள்! (தபகாத் இப்னு ஸஅது, முஹம்மது அந்நபிய்யுல் காதிம் மாஜித் அலீ கான்)
மறுமைக்கு அஞ்சுவீர்!
ஓஸ குரைஷிகளே! நாளை மறுமைக்கான தயாரிப்புடன் மக்கள் வரும்போது நீங்கள் உங்கள் பிடரிகளின் மீது உலகச் சுமைகளைச் சுமந்துகொண்டு வந்து விடாதீர்கள். அப்போது அல்லாஹ்வின் புறத்திலிருந்து நான் எந்த ஒரு விஷயத்திலும் உங்களுக்குப் பலன் அளித்திட முடியாது (மஜ்மவுஸ் ஸவாயிது 272/3)
அநீதம் அழிப்பீர்!
அறியாமைக்கால அனைத்து விவகாரங்களும் என் பாதங்களுக்குக் கீழ் புதைப்பப்பட்டு விட்டன. மேலும், இன்று வரையிலான எல்லா வட்டிக் கணக்குகளையும் ரத்துச் செய்து விட்டேன். எனினும், உங்களது மூலதனம் உங்களுக்கே உரியது. வட்டியை அல்லாஹ் தடைசெய்து விட்டான். எனவே, முதலில் (என் குடும்பத்தைச் சேர்ந்த) அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிபின் வட்டியைச் செல்லாததாக ஆக்குகிறேன்.
அறியாமைக்கால இரத்தப் பழிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டன. இனி, பழைய கொலைக்குப் பழிவாங்கும் உரிமை எவருக்கும் இல்லை. இதில் முதலாவதாக என் குடும்பத்தைச் சேர்ந்த ரபீஆ இப்னு அல்ஹாரிஸ் இப்னு அப்துல் முத்தலிப் கொல்லப்பட்டதற்கான பழிவாங்கலை ரத்துச் செய்கிறேன். அறியாமைக் கால கொலை குற்றத்தில் இதை நான் முதலாவதாக தள்ளுபடி செய்கிறேன் (ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074)
முறைதவறி நடக்காதீர்!
அறிந்து கொள்ளுங்கள்! குழந்தை விரிப்புக்கே சொந்தமானது. (அனுமதிக்கப்பட்ட திருமண உறவுடன் இருக்கும் கணவனுக்கே குழந்தை உரியதாகும்) மணமுடித்துக் கொண்ட பிறகும் விபசாரம் செய்பவர் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும். எவர் தம் தந்தை அல்லாதவரை தம்முடைய தந்தையாக அழைக்கிறாரோ, எவர் தம் உரிமையாளர் அல்லாதவருடன் தம்மை இணைத்துக் கொள்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வுடைய, வானவர்களுடைய இன்னும், மக்கள் அனைவருடைய சாபமும் உண்டாகட்டும்! அவர்களின் கடமையான உபரியான எந்த வணக்கமும் ஏற்றுக் கொள்ளப்படாது. (இப்னு மாஜா 2712, ஸஹீஹுல் ஜாமி,789)
உரிமைகளை மீறாதீர்!
ஒரு பெண் தமது கணவரின் வீட்டிலிருந்து அவரது அனுமதியின்றி எதையும் செலவு செய்யக்கூடாது. அப்போது, "உணவையுமா?' என்று கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள், "ஆம்! அதுதான் நமது செல்வங்களில் மிகச் சிறந்தது' என்றார்கள். (ஸஹீஹுல் ஜாமிஇ1789, ஸுனன் அபூ தாவூத் 3565)
ஒஸ மக்களே! ஒவ்வொருவருக்கும் சொத்தில் அவரவரின் உரிமைகளை அல்லாஹ் வழங்கி இருக்கின்றான். இனி, எவரும் தமது எந்த வாரிசுக்கும் உயில் எழுதக் கூடாது.(நஸாயி 3642, ஸுனன் அபூதாவூத் 2870, 3565, தபகாத் இப்னு ஸஅது)
இரவலாக வாங்கப்பட்ட பொருட்கள் உரியவரிடமே ஒப்படைக்கப் படவேண்டும்; பாலைக் கொண்டு பயன்பெற கொடுப்பட்ட கால்நடைகள் (அவற்றின் பயன்பாடு தீர்ந்தவுடன்) அவற்றின் உரிமையாளரிடமே திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும்; கடன்கள் நிறைவேற்றப்பட வேண்டும்; இழப்பீடுகளை நிறைவேற்ற தலைவனே பொறுப்பாளன். (ஸுனன் அபூதாவூத் 3565, ஜாமிவுத் திர்மிதி 2120, 2121, ஸுனன் இப்னு மாஜா தபகாத் இப்னு ஸஅது, தாரீக் இப்னு இஸ்ஹாக்)
பெண்களை மதிப்பீர்!
கவனியுங்கள்! பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; அவர்களுக்கு நன்மையே நாடுங்கள்; அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள்.
அல்லாஹ்வுடைய அமானிதமாக அவர்களை நீங்கள் பெற்றுள்ளீர்கள்! எப்படி உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமைகள் இருக்கின்றனவோ, அதே போல் உங்கள் மனைவியருக்கும் உங்கள் மீது உரிமைகள் இருக்கின்றன. அவர்கள் உங்களுக்குச் சிறந்த முறையில் பணிவிடை ஆற்றட்டும்! அவர்களுக்குரிய கடமை என்னவென்றால், நீங்கள் எவரை விரும்ப மாட்டீர்களோ, அவரை அவர்கள் வீட்டுக்குள்
அனுமதிக்காமல் இருக்கட்டும்; இன்னும், மானக்கேடான செயலைச் செய்யாமல் இருக்கட்டும்! அவர்கள் குற்றம் புரிந்தால், அவர்களைத் தண்டிக்கிற உரிமையும் உங்களுக்கு உண்டு. அது அவர்களை இலேசாக காயம்படாதபடி அடிப்பதாகும். அவர்களுக்கு ஒழுங்கான முறையில் உணவும் உடையும் வழங்குங்கள்; அவர்களுக்கு நன்மையை நாடுங்கள்; அவர்கள் உங்களின் உதவியாளர்களாகவும் உங்களைச் சார்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.அல்லாஹ்வின் பெயரை முன்மொழிந்தே நீங்கள் அவர்களுடன் மணவாழ்க்கை மேற்கொண்டுள்ளீர்கள்! (ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹ் ஜாமி, 7880)
இரண்டைப் பின்பற்றுவீர்!
மக்களே! சிந்தித்துப் புரிந்து கொள்ளுங்கள்; எனது பேச்சை கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள். நான் எனது பிரசாரத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களிடையே அல்லாஹ்வின் வேதத்தை(யும் அவனது தூதரின் வழிமுறையும்) விட்டுச் செல்கிறேன். நீங்கள் அவற்றைப் பின்பற்றினால், ஒருபோதும் வழிகெட மாட்டீர்கள்! (ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074) (முஅத்தா இமாம் மாலிக்/மிஷ்காத்182. ஸஹீஹுத் தர்கீப் 40.)
எச்சரிக்கையாக இருப்பீர்!
மக்களே! உங்களது இந்த நகரத்தில், தான் வணங்கப்படுவதைப் பற்றி ஷைத்தான் நம்பிக்கை இழந்து விட்டான். ஆனாலும், அவன் மகிழ்ச்சியுறும் விதமாய் நீங்கள் அற்பமாக கருதும் சில விஷயங்களில் அவனுக்கு நீங்கள் கீழ்ப்படிவீர்கள். ஆகவே, உங்களது மார்க்க விஷயத்தில் அவனிடம் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்! (பிக்ஹு சூரா456. ஸஹீஹ் ஜாமிஇ 7880/முஸ்தத்ரகுல் ஹாகிம். ஸஹீஹுத் தர்கீப் 40)
தஜ்ஜாலைப் பற்றி:
இன்னும், (மகா பொய்யன்) தஜ்ஜாலைப் பற்றியும் உங்களுக்கு எச்சரிக்கிறேன். அல்லாஹ் அனுப்பிய எந்த இறைத்தூதரும் (அவனைப் பற்றித்) தம் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. (இறைத் தூதர்) நூஹ் அவர்கள் (தம் சமுதாயத்தாருக்கு) அவனைப் பற்றி எச்சரித்தார்கள். அவர்களுக்குப் பின்னால் வருகை தந்த இறைத்தூதர்களும் எச்சரித்தார்கள். மேலும், (என் சமுதாயத்தினரான) உங்களிடையேதான் (இறுதிக் காலத்தில்) அவன் தோன்றுவான்.
அவனது (அடையாளத்) தன்மைகளில் எதேனும் சில உங்களுக்குப் புலப்படாமல் போனாலும், நிச்சயமாக உங்களுடைய இறைவன் உங்களுக்குத் தெரியாதவனல்லன் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்! உங்கள் இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். அவனோ, (தஜ்ஜாலோ) வலது கண் குருடானவன். அவனது கண் (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சை போன்று இருக்கும். (ஸஹீஹ்ுல் புகாரி 4402)
இறை ஏற்பாட்டை மாற்றாதீர்!
(மாதத்தின் நாட்களை தன் இஷ்டப்படி) முன் பின்னாக்குவதெல்லாம் இறை நிராகரிப்பை அதிகரிக்கும் செயலாகும். ஆதனால் நிராகரிப்பவர்கள்தான் வழிகெடுக்கப்படுகிறார்கள். எனென்றால், அவர்கள் தங்கள் இஷ்டப்படி மாதங்களை முன் பின்னாக்கி ஒர் அண்டில் அம்மாதங்களில் போர் புரிவதை ஆகுமாக்கிக் கொள்கிறார்கள். மற்றோர் ஆண்டில் அதே மாதங்களில் போர் புரிவது கூடாது என்று தடுத்து
விடுகிறார்கள். இவ்வாறு அவர்கள் செய்வதன் நோக்கமெல்லாம் தாங்கள் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கையை அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கைக்குச் சரியாக்கி, அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களையும் தாங்கள் ஆகுமாக்கிக் கொள்வதற்குத்தான். (அல்குர்அன்9:37) (தாரீக் இப்னு கல்தூன் 59/2)
அறிந்து கொள்ளுங்கள்: நிச்சயமாக காலம், வானங்களையும் பூமியையும் அல்லாஹ் படைத்த அன்றிருந்த அதன் அமைப்பைப் போன்றே, இப்போதும் சுற்றிவருகின்றது.
அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். இப்படித்தான் வானங்களையும் பூமியையும் அல்லாஹ் படைத்த அன்று, அவனது புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு மாதங்கள் சங்கைக்குரியன. மூன்று, தொடர்ந்து வருபவை. அவை துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், நான்காவது ஜுமாதல் உலாவிற்கும் ஷஅபானிற்கும் இடையில் உள்ள ரஜப் ஆகும். (ஸஹீஹுல் புகாரி 4662, ஸுனன் அபூதாவூத் 1942)
சகோதரம் பேணுவீர்!
ஒவ்வொரு முஸ்லிமும் மற்ற முஸ்லிமுக்குச் சகோதரர் ஆவார். முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்களே! ஒரு முஸ்லிமின் பொருள் பிறருக்கு அறவே ஆகுமானதல்ல; மனமுவந்து கொடுத்தாலே தவிர! உங்களுக்கு நீங்கள் அநீதம் இழைத்துக் கொள்ளாதீர்கள் (ஸஹீஹுல் ஜாமிஇ 7880, தாரீக் இப்னு கல்தூன் 59/2, பிக்ஹுஸ் ஸீரா 456)
சொர்க்கம் செல்ல இதுதான் வழி!
ஒஸ மக்களே! உங்கள் இறைவனையே வணங்குங்கள்; உங்கள் இறைவனுக்கே பயந்து கொள்ளுங்கள்; கடமையான ஐவேளைத் தொழுகைகளையும் தவறாது பேணுங்கள்; (ரமழானில்) நோன்பு நோற்று வாருங்கள்; விருப்பமுடன் ஸகாத் கொடுத்து விடுங்கள்; அல்லாஹ்வின் இல்லத்தை ஹஜ் செய்யுங்கள்; உங்களில் அதிகாரம் உடையோருக்குக் கட்டுப்பட்டு நடங்கள்; நீங்கள் சொர்க்கம் செல்வீர்கள்!. (ஜாமிவுத் திர்மிதி616, ஸஹீஹுத் திர்மிதி516, மிஷ்காத் 576, முஸ்னத் அஹ்மத், தாரீக் இப்னு ஜரீர், தாரீக் இப்னு அஸப்கிர், மஆதினுல் அஃமால் 1108,1109)
குற்றவாளியே தண்டிக்கபடுவார்!
ஒருவர் குற்றம் செய்தால் அதற்கான தண்டனை அவருக்கே கொடுப்படும்; மகனுடைய குற்றத்திற்காக தந்தையோ, தந்தையின் குற்றத்திற்காக மகனோ தண்டிக்கப்பட மாட்டார். (ஸஹீஹுல் ஜாமிஇ 7880, ஜாமிவுத் திர்மிதி 2159,3078, ஸஹீஹுத் திர்மிதி373,461, ஸுனன் இப்னு மாஜா 3055, ஸஹீஹ் இப்னு மாஜா 1015.)
இஸ்லாம் முழுமையாகி விட்டது!
ஒவ்வோரு இறைத்தூதரின் பிரார்தனையும் (இவ்வுலகிலேயே) முடிந்து விட்டன; என் பிரார்த்தனையைத் தவிர! நான் அதை மறுமை நாளுக்காக என் இறைவனிடம் சேமித்து வைத்திருக்கிறேன். அறிந்து கொள்ளுங்கள்; மறுமை நாளில் இறைத்தூதர்கள் தங்களது சமுதாயத்தினர் அதிகமாக இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியுறுவார்கள். அப்போது என்னை நீங்கள் கேவலப்படுத்தி விடாதீர்கள். நான் உங்களுக்காக கவ்ஸர் நீர் தடாகத்திற்கு அருகில் உட்கார்ந்திருப்பேன். (மஜ்மவுஸ் ஸவாயிது 271/3)
மக்களே! எனக்குப்பின் எந்த ஒர் இறைத்தூதரும் இல்லை; உங்களுக்குப்பின் எந்த ஒரு சமுதாயமும் இல்லை. (ளிலாலுஸ் ஜன்னா 1061)
இங்கு வந்திருப்பவர்கள், வராதவர்களுக்கு இந்த வழிகாட்டல்களை எடுத்துச் சொல்லட்டும்; விஷயம் சென்று சேருபவர்களில் சிலர், நேரடியாக கேட்பவரைவிட நன்கு ஆராயும் தன்மை உடையவராக இருக்கலாம். (ஸஹீஹுல் புகாரி 67,105,1741)
பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களை நோக்கி, "மறுமை நாளில் உங்களிடம் என்னைப் பற்றி விசாரிக்கப்படும்போது நீங்கள் என்ன சொல்வீர்கள்?'' என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "நீங்கள் (மார்க்க போதனைகள் அனைத்தையும்
எங்களிடம்) தெரிவித்து விட்டீர்கள்; (உங்களது தூதுத்துவப் பொறுப்பை) நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள்; (சமுதாயத்திற்கு) நன்மையை நாடினீர்கள் என நாங்கள் சாட்சியம் அளிப்போம்" என்றார்கள்.
உடனே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தமது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி சைகை செய்துவிட்டுப் பிறகு, அதை மக்களை நோக்கித் தாழ்த்தி "இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி!" என்று முடித்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் 2334)
இவ்வாறு அவர்கள் கூறிய அதே இடத்தில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து கீழ் வருமாறு இறைவசனம் இறங்கியது:"இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன்; மேலும், நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும், உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துக் கொண்டேன். (அங்கீகரித்துக் கொண்டேன்.)'' (அல்குர்அன் 5:3)
(ஸஹீஹுல் புகாரி 4406, 4407, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா, தாரீக் இப்னு ஜரீர், தாரீக் இப்னு கஸீர், அத்துர்ருல் மன்ஸுர்)
''Jazaakallaahu khairan" Mohamed Rifai
Saturday, November 6, 2010
எல்லா நிலையிலும் நீதமாக நடந்து கொள்ள வேண்டும்.
அஸ்ஸலாமு அலைக்கும்
இக்கட்டுரை ஒரு கருத்துப் பரிமாற்றமே ஒழிய வேறேதுமில்லை. இதில் குற்றங்களிருப்பின் திருத்தங்கள் வரவேற்கப்படுகின்றன.
கீழ்க்கண்ட கருத்துப் பரிமாற்றங்களை படிக்க வேண்டுகிறேன்.
நாம் யாராக இருந்தாலும் எல்லா நிலையிலும் நீதமாக நடந்து கொள்ள வேண்டும்
நமக்குள் கொள்கைகளில் வேறுபாடிருக்கலாம்
தொழுகை முறைகளில் மாறுபாடிருக்கலாம்
ஆனால் பேசும் போது எழுதும்போது தாறுமாறு இருக்கக் கூடாது
நான் எந்த இயக்கத்தையும் சேர்ந்தவனில்லை........ ஆனால்
என்னை இயக்கிக் கொண்டிருப்பவனைச் சார்ந்தவன்.
ஒரு கட்டுரை எழுதும் போது கண்ணியக்குறைவான வார்த்தைகளை யாராக இருந்தாலும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
கொழுந்து விட்டு எரியும் தீயைக் கூட கொஞ்சம் தண்ணீர் விட்டு அணைக்கலாம்
எழுந்து நின்று எரியும் தீயை எண்ணெயை விட்டா அணைக்க முடியும்?
அதைப் போலத்தான் மனக்கசப்பு மேலும் அதிகப்படுத்தும் வண்ணம் அடாத வார்த்தைகளை அவன் இவன் என்ற ஏகவசனங்களை போட்டு எழுவதும் ஏற்கனவே கொழுந்து விட்டெரியும் மனக்கசப்பு எனும் தீயில் கொஞ்சம் எண்ணெய் விட்டெரிப்பது போல.
ஒரு தனிமனிதனின் செயலுக்கு ஒர் இயக்கத்தை ஒர் இயக்கத்தின் தலைமையை குற்றம்சாட்டுவது என்பது எப்படி பொருத்தம் என்று எனக்குப் புரியவில்லை.
இன்றைக்கு உலகில் நடக்கும் சில வன்முறைச் சம்பவங்களை நடத்துபவர்களை தீவிரவாதிகள் என்கிறார்கள். அவர்கள் முஸ்லிம்கள் என்றால் முஸ்லிம் தீவிரவாதிகள் என்கிறார்கள்.
ஆனால் அந்த ஒரு சில முஸ்லிம் தனி மனிதர்கள் செய்யும் தவறுக்கு காரணம் இஸ்லாம் தான் குர் ஆன் தான் என்று உலகம் சொல்வதை நாம் ஏற்றுக் கொள்வோமா? அவர்கள் சொன்னாலும் நாம் ஏற்பதில்லை.
அதைப் போலத்தான் ஒரு தனிமனிதனின் தவறான தன்னிச்சையான செயலுக்கு ஒர் இயக்கத்தை அதன் தலைமையைக் குறை சொல்வதும் என்பது என் சிந்தனைக்கு வந்த கருத்து .......... மாற்று கருத்து இருந்தால் சொல்லுங்கள்
இன்ஷா அல்லாஹ்...... தொடர்வோம்
With best regards
Kamal
by mail from Kamal
Labels:
இறைவன்,
மனக்கசப்பு,
முஸ்லிம்
Thursday, November 4, 2010
மேல் சபை வாக்காளர் பட்டியலில் சேர்ந்து விட்டீர்களா? - கடைசி தேதி நவம்பர் 9
தமிழக மேல் சபை தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இது இரண்டு பிரிவில் உள்ளவர்கள் வாக்களிக்க முடியும். ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரிகள். இதில் பட்டதாரிகள் தங்களை வாக்காளராக பதிவு செய்ய கடைசி தேதி நவம்பர் 9 ஆகும். முஸ்லீம் பட்டதாரிகளே! ஓட்டுக்காக அரசியல் நடத்தும் இந்த ஆட்சியாளர்களிடம் இருந்து நாம் உரிமைகளை பெற இந்த வாக்காளர் பட்டியலில் கட்டாயம் சேர வேண்டும். வாக்காளர் பட்டியலில் கணிசமான அளவு முஸ்லீம்கள் இருந்தால்தான் ஆட்சியாளர்கள் நம்முடைய கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பார்கள். குறைந்த சதவீத்தில் இருந்தால் முஸ்லீம்கள் மீது ஆட்சியாளர்களின் அடக்குமுறை அதிகரித்துவிடும். வாக்காளர் பட்டியலில் சேர்பதை ஒரு வேலையாக நினைத்து விட்டுவிடவேண்டாம். நம் சமுதாயாத்தில் பட்டதாரிகளே குறைவு, அதிலும் சமூக அக்கரை உள்ள பட்டதாரிகள் மிக குறைவு, எனவே இந்த வாய்ப்பை விட்டுவிடாமல் சமுதாய நலன் கருதியாவது பட்டதாரி வாக்காளர் பட்டியலில் சேருங்கள். அன்பிற்கினிய சகோதர்களே! உங்களுக்கு தெரிந்த முஸ்லீம் பட்டதாரிகள், ஆசிரியர்கள் இருந்தால் இதன் அவசியத்தை விளக்கி இந்த மேல்சபை வாக்காளர்பட்டியலில் சேர சொல்லுங்கள்.
யார் விண்ணப்பிக்கலாம்?
இந்தியாவில் உள்ள ஏதேனும் ஒரு பல்கலை கழகத்தில் 2007-ல் பட்ட படிப்பு முடித்தவர்கள் மற்றும் 2007-க்கு முன்பாக பட்ட படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பகுதி நேரம் (Part Time) மற்றும் தொலைதூர கல்வியில் பயின்றவர்களும் விண்ணப்பிக்கலாம்

எங்கு விண்ணப்பிப்பது?
மாநகராட்சி பகுதிகளில் : மாநகராட்சி மண்டல அலுவலகங்கள்
பிற ப்குதிகளில் : வட்டாட்சியர் அலுவலகங்கள்
மாநகராட்சி பகுதிகளில் : மாநகராட்சி மண்டல அலுவலகங்கள்
பிற ப்குதிகளில் : வட்டாட்சியர் அலுவலகங்கள்
எப்படி விண்ணப்பிப்பது? விண்ணப்பங்கள் விணியோகிப்படும் மையங்களில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். இணையதளத்திலும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் (Download) செய்யலாம் http://www.elections.tn.gov. in/tnmlc.html இந்த இணையத்தில் உள்ள படிவத்தை Download செய்து சான்றிதழ்களுடன் தபால் மூலமும் விண்ணப்பிகளாம்.
உடன் சமர்பிக்க வேண்டிய சான்றிதழ்
கீழ்காணும் சான்றிதழ்களில் ஏதேனும் ஒன்றை விண்ணப்ப படிவத்துடன் சமர்பிக்க வேண்டும்.
கீழ்காணும் சான்றிதழ்களில் ஏதேனும் ஒன்றை விண்ணப்ப படிவத்துடன் சமர்பிக்க வேண்டும்.
1.பட்ட சான்றிதழ் (Degree Certificate or provisional Certificate )
2. மதிப்பெண் சான்றிதழ்,
3. கல்லூரி முதல்வர் அல்லது துறை தலைவர் (Deen) கையொப்பமிட்ட சான்றிதழ்
3. அரசு துறையில் வேலைசெய்தால் அந்த துறையில் பெறப்பட்ட சான்றிதழ்.
2. மதிப்பெண் சான்றிதழ்,
3. கல்லூரி முதல்வர் அல்லது துறை தலைவர் (Deen) கையொப்பமிட்ட சான்றிதழ்
3. அரசு துறையில் வேலைசெய்தால் அந்த துறையில் பெறப்பட்ட சான்றிதழ்.
மூல சான்றிதழை (ஒரிஜினல் சர்டிபிகேட்) சமர்பிக்க வேண்டாம். சான்றிதழை நகல் (Zerox copy) எடுத்து அரசுக் கல்லூரி முதல்வர், நகராட்சி கமிஷனர், யூனியன் பி.டி.ஓ., தாசில்தார்கள் இதில் ஒருவரிடம் கையொப்பம் வாங்கி சமர்பித்தால் போதும்.
மேலும் விபரங்கள் மாநகராட்சி / வட்டாட்சியர் அலுவலகங்களில் கிடைக்கும் அல்லது இந்த இணையத்திலும் http://www.elections.tn.gov. in/tnmlc.html தெரிந்துகொள்ளலாம்.
mail from : from நபி நேசன்
Labels:
அரசியல்,
தமிழக மேல் சபை,
யார் விண்ணப்பிக்கலாம்?
Wednesday, November 3, 2010
கடன் வாங்கலாம் வாங்க - 6
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)
இஸ்லாம் உலகிற்கு வழங்கிய நன்மைகள் ஏராளம். மனிதகுலம் அடைந்த பயன்களும் ஏராளம். எந்தவொரு நெறிமுறைகளும் இல்லாமல் வாழ்ந்த மனிதர்களுக்கு மத்தியில், மனிதன் எழுந்தது முதல் தூங்கும் வரை அவனுடைய ஒவ்வொரு காரியத்திலும் வந்து அவனை பண்புள்ள மனிதனாக வாழ வழி காட்டியது இஸ்லாம். உலகில் உள்ள மனிதன் யாராக இருந்தாலும் அவனிடம் இஸ்லாத்தின் தாக்கம் ஏதாவது ஒரு வகையில் இருப்பதை பார்க்க முடிகிறது. இந்தியாவில் நாகரீகம், மனித நேயம், நீதி இவைகள் அனைத்தும் அதள பாதாளத்தில் வீழ்ந்து கிடந்த நேரத்தில் இஸ்லாம் மனிதனுக்கேற்ற மார்க்கமாய் அடிமையாய் கிடந்த மக்களை தட்டி எழுப்பி அவனின் வாழ்வியல் நெறியாக மனதார ஏற்று நடக்க வைத்து சுயமரியாதை உள்ள மனிதனாக மாறச்செய்தது.
படிப்பறிவு இல்லாதவர்களையும், வறுமையுடன் வாழ்ந்தவர்களையும் பண்புடன் வாழச்செய்தது. இஸ்லாம் இந்தியாவுக்கு வரவில்லை என்றால் தற்பொழுது நடந்து வரும் சீரான நிர்வாக அமைப்பு முறை (பஞ்சாயத்து முதல் செங்கோட்டை வரை) இருந்திருக்காது. நிர்வாகத்தை, பண்பை, மனிதநேயத்தை கற்று கொடுத்த இஸ்லாம் அப்படியே இன்றும் வைரமாக மின்னிக்கொண்டு இருக்கிறது வற்றாத நதியாய். இஸ்லாத்தை பின்பற்றுபவர்களின் செயல்பாட்டால் இஸ்லாத்திற்கு களங்கம் என்று சொல்கிறார்கள். நான் சொல்வேன் இஸ்லாத்திற்கு எந்த களங்கமுமில்லை, பின்பற்றுபவர்களின் பண்பற்ற செயலால் அவர்களுக்குத்தான் களங்கம். கோழிக்கு குப்பையில் வைரம் கிடைத்தால் என்ன செய்யும். கோழி அறியுமா? வைரத்தின் மதிப்பை.
உலக மக்களை நெறிப்படுத்திய இஸ்லாத்தைப் பின்பற்றுகிறவர்களின் நிலை எப்படி உள்ளது. இஸ்லாத்தின்படி வாழ விரும்புகிறார்களா? முயற்சி எடுக்கிறார்களா? வல்ல அல்லாஹ் கொடுத்த பொருளாதாரத்தை வீண் விரயம் செய்பவர்களின் வீடுகளில் குர்ஆனின் தமிழாக்கம் இருக்கிறதா? தமிழாக்கம் வாங்கியவர்கள் முழுவதுமாக படித்திருக்கிறார்களா? மார்க்கத்தைப்பற்றி அறிந்து கொள்வதற்கான புத்தகங்கள் இருக்கிறதா? கண்மனி நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு, நபிமொழி புத்தகங்கள் இருக்கிறதா? தினமும் குர்ஆன் ஓதப்படுகிறதா? பெண்கள், பிள்ளைகள் தொழுகிறார்களா? எந்தவொரு செயல் செய்யப்படுவதற்கும் முன்னால் மார்க்கம் இந்த காரியத்தைப்பற்றி என்ன சொல்கிறது, காரியம் கூடுமா? கூடாதா? என்ற கேள்விகள் கேட்கப்படுகிறதா? அதிகமான பதில் இல்லையே என்றுதான் நம்மிடம் வரும். இஸ்லாத்தை பின்பற்றும் நாம் என்ன செய்யப்போகிறோம்.
இன்று முஸ்லிம்களில் படித்தவர்கள் ஏராளம், செல்வந்தவர்களும் ஏராளம் ஆனால் இஸ்லாம் கடைபிடிக்கப்படுகிறதா? கேள்விக்குறியே? இஸ்லாத்தை பின்னுக்குத் தள்ளி நமது உலக வாழ்க்கையை முன்னால் கொண்டு வந்து விட்டோம். இஸ்லாம் வேறு உலகம் வேறு என்றாகிவிட்டது. இஸ்லாத்தைப் பற்றி நாங்கள் அறியாமலா இருக்கிறோம் ஏன் இவ்வளவு விளக்கம் என்று யாருக்காவது மனதில் தோன்றலாம். தொடர்ந்து வரும் நிகழ்வுகளுக்கு இஸ்லாத்தை பற்றிய அறிமுகம் தேவையாய் இருக்கிறது. நாம் செய்யும் காரியம் வல்ல அல்லாஹ்வும் நபி(ஸல்) அவர்களும் காட்டி தந்த வழியா? என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
தற்பொழுது தமிழக முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் வட்டி கடைகள் படையெடுத்து வந்து கொண்டு இருக்கின்றன. குறிப்பாக முஸ்லிம் ஊர்களில்தான் அதிகமான வட்டி கடைகள் பெருகிக்கொண்டே போகிறது. எதற்கு ஆதரவு அதிகமாக இருக்கிறதோ அது வளர்ந்து கொண்டேதான் போகும். முஸ்லிம் சமுதாயம் அதிகம் வாழும் ஊர்களாக பார்த்து வட்டிக்கடைகள் வளர்ந்து வருவதை பார்க்கும்பொழுது கவலை அளிக்கிறது.
வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் முஸ்லிம்கள் வாழும் ஊர்களில் வந்து கடை திறக்க இடம் கொடுப்பது முஸ்லிம் பெயர் தாங்கிகளாக இருப்பவர்களே. வட்டி கடை வைப்பதற்கு நம் இடத்தை கொடுக்கிறோமே என்ற சிந்தனை இல்லை. அல்லாஹ்வின் அச்சமும், மறுமை பயமும் இருந்தால் தங்களின் இடத்தை வட்டி கடை வைப்பதற்கு வாடகைக்கு விடுவார்களா?
சில இடங்களில் கேள்விப்படும் செய்திகள், வட்டி கடை வைப்பவர்கள் சிறிது காலம் கழித்து அந்த இடத்தையே விலைக்கு வாங்கி விடுகிறார்கள். இடத்தின் உரிமையாளர்கள் வட்டிக்கு வாங்கியிருப்பார்கள், இந்த தொகை வட்டி, குட்டி என்று திருப்பி செலுத்த முடியாமல் போனபிறகு இடத்தையே இழந்து பரிதவிக்கும் இஸ்லாமிய பெயர் தாங்கி மனிதர்களைப் பார்த்து பரிதாபப்படுவதா? அல்லது கோபப்படுவதா?
இப்படித்தான் வாழ வேண்டும் என்று மார்க்கம் வரையறுத்து கூறியிருக்க, எப்படியும் வாழலாம் என்று பெயர்தாங்கி முஸ்லிம்கள் வாழ ஆரம்பித்து விட்டார்கள். வட்டியினால் ஏற்பட்ட பல கொடுமையான நிகழ்வுகளை செய்தி தாள்களின் மூலம் படித்திருப்பீர்கள். கடை கட்டி வாடகைக்கு விடுபவர்கள் வட்டிகடைகளுக்கு வாடகைக்கு விடுவதில்லை என்ற உறுதியான முடிவு எடுத்தால் நலமாக இருக்கும். செய்வார்களா???
சென்ற தொடரில் சகோதரிகளின் கடனைப்பற்றி சொல்லியிருந்தேன். இதில் பாக்கியுள்ள கடன்களை தொடர்ந்து பார்க்கலாம்:
ஏலச் சீட்டு (வட்டி)கடன்:
இந்த ஏலச் சீட்டு கடன் ஆண்கள், பெண்கள், நிறுவனங்கள் என்று அனைவரும் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். இதை எப்படி நடத்துகிறார்கள் என்று பார்ப்போம். குறைந்தது 10பேர் சேர்ப்பார்கள். தலைக்கு 1000ரூபாய் என்று வைத்துக்கொள்வோம்.(அதிகமாகவும் இருக்கும், நிறுவனங்கள் நடத்தும் சீட்டு லட்சக்கணக்கிலும் இருக்கும்).
இந்த சீட்டில் ஏலம் கேட்கப்படும். மொத்தம் 10ஆயிரத்தில் உறுப்பினர்கள் எல்லோரும் ஏலம் கேட்டு யார் அதிகமாக கேட்கிறார்களோ உதாரணத்திற்கு 5ஆயிரத்திற்கு கேட்டால் இதற்கு மேல் யாரும் கேட்கவில்லை என்றால் கேட்டவருக்கு 5ஆயிரம் மட்டும் கிடைக்கும். கேட்டவரும் மற்றவர்களும் தலைக்கு 500ரூபாய் கட்டினால் போதும். முதல் சீட்டுக்கு மட்டும் நடத்துபவர், உறுப்பினர்கள் பணம் மொத்தம் 10ஆயிரம் வரும். இந்த முதல் சீட்டு பணத்தை முழுவதுமாக நடத்துபவர் எடுத்துக்கொள்வார்.
சீட்டை நடத்துபவருக்கும், கடைசி சீட்டை அடைபவருக்கும்தான் இதில் லாபம். இடைபட்டவர்களுக்கு நஷ்டம்தான். 5ஆயிரம் எடுத்தவர் 10ஆயிரம் வரை கட்டினால் இது வட்டி இல்லையா? நடத்துபவர்களை கேட்டால் வட்டி இல்லை என்பார்கள். இது தெளிவான வட்டி.
பலவருடங்களுக்கு முன் இந்த சீட்டு பிரச்சனையால் இரண்டு சகோதரிகளுக்கு இடையே வாய் பேச்சு கைகலப்பாகி கட்டிப்புரண்டு தெருவில் ஓடும் கழிவு நீரிலும் புரண்டு சண்டை. தெருவில் உள்ள பெண்கள் யாருக்கு சாதகமாக நடந்து கொள்வது என்று குழப்பத்தில் வேடிக்கை பார்க்க, நான் இருவரையும் சத்தம் போட்டு (இருவரும் எனக்கு தெரிந்தவர்கள் என்பதால்) மிகுந்த சிரமத்திற்கிடையே அவர்களை விலக்கினேன். (குடிக்கு அடிமையான ஆண்கள் இதுபோல் சண்டை போடுவதை பார்த்திருந்த எனக்கு பெண்கள் சண்டை போடுவதை பார்த்து அதிர்ச்சியடைந்தேன்). ஷைத்தானிடம் உள்ள சூழ்ச்சியில் இந்த ஏலச்சீட்டும் ஒன்று என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.
ஏல சீட்டு நடத்திய நிறுவனங்களும், தனிநபர்களும் அடிக்கடி தலைமறைவான செய்திகள் வந்து கொண்டே இருந்தாலும். புதுப்புது பெயர்களில் மீண்டும் நிறுவனங்களும், தனி நபர்களும் இந்த ஏமாற்று வேலையை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இதில் நடத்துபவர்களும் ஏமாற்றுவார்கள். உறுப்பினராக உள்ளவர்களும் பணத்தை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றி விடுவார்கள். நியாயமாக சில பேர் நடத்தினாலும் இந்த சீட்டு முழுக்க முழுக்க வட்டியின் அடிப்படையில்தான் நடந்து கொண்டு இருக்கிறது. சகோதர, சகோதரிகள் யாராவது தற்பொழுது இந்த சீட்டில் (அறியாமல்) சேர்ந்திருந்தால் இதிலிருந்து விடுதலை அடைய முயற்சி செய்தால் வட்டி என்ற பாவத்திலிருந்த விலகிய நன்மையும், நிம்மதியும் கிடைக்கும்.
சகோதரிகளுக்கு லட்சக்கணக்கில் கடன் ஏன் ஏற்படுகிறது (சகோதரர் சாகுல் ஹமீது இது பற்றி எழுதுமாறு கேட்டிருந்தார்) என்பது பற்றி அறிந்து கொள்வதற்கு பெரிய ஆராய்ச்சி செய்ய வேண்டாம். சகோதரிகளின் வீண் ஆடம்பர செலவுகள், உணவுக்காக திட்டமிடாத அதிகமான செலவு செய்வது, சீட்டு நடத்துவது அல்லது உறுப்பினராக இருப்பது. ஒரு சீட்டில் மட்டும் சேருவது கிடையாது. நான்கு அல்லது ஐந்து இடத்தில் சீட்டுகளில் சேர்ந்து கொள்வது. (பல பேங்கில் கடன் அட்டை வாங்கி வைத்திருப்பது போல்) இது போன்ற காரணங்களால்தான் இறையச்சம் இல்லாத சகோதரிகள் இன்று பல இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். ஒரு சகோதரிக்கு இரண்டு வீடுகள் இருந்தது. வீண் ஆடம்பரத்தால் (சீட்டுகளிலும் சேர்ந்திருக்கிறார்) பல லட்சங்கள் கடனாகி இரண்டு வீட்டையும் விற்று கடனை அடைத்து விட்டு தற்பொழுது வாடகை வீட்டில் இருந்து வருகிறார். இவரை இந்த நிலைக்கு ஆளாக்கியது யார்? இவருடைய ஆடம்பரமும், வட்டியும்தான். (சொந்த வீட்டில் ராணிபோல் வாழ்ந்தவர் வாடகை வீட்டில் இருக்கும்பொழுது இவருடைய மனநிலை எப்படி இருக்கும்).
தினச் சீட்டு (வட்டி)கடன்:
தினச் சீட்டு என்பது பெரும்பாலும் கடை வைத்திருப்பவர்கள் வாங்குவது.வட்டிக்கடைக்காரனிடம் 1000ரூபாய் கடன் கேட்டால் 100 அல்லது 200 எடுத்துக்கொண்டு பாக்கி பணத்தை கொடுப்பான். இதை இத்தனை நாட்களுக்குள் கொடுத்து விட வேண்டும் என்ற கணக்கு இருக்கும். தினமும் 50 அல்லது 100 திருப்பி செலுத்த வேண்டும். குறிப்பிட்ட நாட்களுக்குள் திருப்பி கொடுக்காவிட்டால் பாக்கி உள்ள பணத்திற்கு மீண்டும் வட்டி போட்டு தொடர்ந்து கட்டி வரவேண்டும். (இதில் மீட்டர் வட்டி என்ற பெயரில் 1 மணிநேரம், அரைநாள், ஒருநாள் வட்டியெல்லாம் பெரிய நகரங்களில் நடந்து கொண்டு இருக்கிறது).
வாரச் சீட்டு (வட்டி)கடன்:
இந்த சீட்டு எப்படி கொடுக்கப்படுகிறது. உதாரணத்திற்கு 100ரூபாய் கடன் கேட்டால் 25 ரூபாய் வட்டி எடுத்துக்கொண்டு 75ரூபாய் தருவார்கள். திருப்பி 4 வாரத்திற்குள் வட்டி சேர்த்து வாரம் 25ரூ வீதம் 100ரூபாய் கட்டி விட வேண்டும். தவறினால் மீண்டும் வட்டி கூடும். தினச்சீட்டு, வாரச்சீட்டு, மாதச்சீட்டு போன்ற வட்டி கடன்களை எந்தவித உறுத்தலும் இல்லாமல் நம் சமுதாய மக்கள் வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த வாரச்சீட்டு, மாதச்சீட்டு கடன் பெண்களுக்கு வீடு தேடி வந்து கொடுக்கப்படுகிறது.
இந்த கடனை மாடி வீட்டு பெண்களும் வாங்குகிறார்கள். இவர்கள் வீட்டு ஆண்கள் வெளிநாட்டில் இருக்கிறார்கள. வசதி இல்லாதவர்கள் கடன் வாங்குகிறார்கள் என்றால், இவர்கள் ஏன் கடன் வாங்குகிறார்கள் என்று என் மனதுக்குள் கேட்டுக்கொள்வேன் (அவர்களிடம் சென்று கேட்கமுடியாது). வெளிநாட்டில் வீட்டு ஆண்கள் இருந்தும், தங்க நகைகள் வைத்திருந்தும் சீட்டு கடன் வாங்க வேண்டிய காரணம் என்ன என்பதை ஆய்வு செய்தால் அக்கம் பக்கம் உள்ளவர்கள் இவரிடம் வந்து எதுவும் கடன் வாங்கி விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக இந்த சகோதரி வாரச்சீட்டு வட்டி கடனை வாங்குகிறார். (தெருவில் உள்ளவர்கள் இந்த பணக்கார பெண்மனியே வட்டிக்கு வாங்குகிறார். நாம் எப்படி இவரிடம் கடன் வாங்குவது என்று கேட்காமல் இருந்து விடுவார்கள்).
பிறமத ஆண்கள்தான் இந்த வசூலுக்கு சைக்கிளிலும், பைக்கிலும் வருகிறார்கள். முஸ்லிம்கள் அதிகம் வாழும் ஊர்களில் அதிக ஆண்கள் வெளிநாடுகளில். இப்படிப்பட்ட நேரத்தில் அந்நிய ஆணிடம் பழக்கம் ஏற்பட ஷைத்தானின் சூழ்ச்சி வலை பின்னப்படுகிறது. தமிழ்நாட்டில் நிறைய இடங்களில் தவறுகள் நடைபெறுவதை கேள்விப்படுகிறோம். தாயகத்தில் உள்ள நமது இளைஞர்கள், பெரியவர்கள் ஷைத்தானின் வட்டிகள் தெருவில் நடமாடுவதை கண்டும் காணாமல் இருந்து வருகிறார்கள். பிரச்சனை ஆகிவிட்டால் நடவடிக்கை என்று ஏதாவது செய்வார்கள். பின் மறந்து விடுவார்கள். முற்றாக ஒழிக்க என்ன செய்ய வேண்டும் என்ற செயல் திட்டம் யாரிடமும் இல்லை.
இந்தியாவிலும், உலகம் முழுவதும் இஸ்லாத்திற்கும். இஸ்லாமிய மக்களுக்கும் குறிப்பாக இஸ்லாமிய பெண்களுக்கும் எதிராக வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் மீடியாக்கள், கல்விக்கூடங்கள், மற்றும் பல வழிகளின் மூலமாகவும் இறை நிராகரிப்பாளர்கள் ஒன்றினைந்து செயல்பட்டு வருகிறார்கள். இதில் வட்டியின் அடிப்படையில் செயல்படும் காரியங்களும் முன்னிலையில் இருந்து வருகிறது. (பசி வந்தால் பத்தும் பரந்து போகும் என்பது பழமொழி. இதில் வறுமையும், வீண் ஆடம்பரமும் கண்களை மறைக்கும் காரணிகளாக உள்ளது).
காரணம் இதில் அந்நிய ஆண்களிடம் பழகும் வாய்ப்பு அதிகம் ஏற்படுகிறது. எல்லா இடங்களிலும் தவறுகள் இருந்தாலும். இதில் வட்டிக்கு பணம் வாங்க செல்லும் இடங்களிலும், வீடு தேடி வட்டியை வசூலிக்கும் ஆண்கள் மூலமும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. எல்லோரையும் குறை சொல்ல முடியாது.
தற்பொழுது நடந்த செய்தியை கேள்விப்பட்டு இருப்பீர்கள். முஸ்லிம் பெயர்தாங்கி (3கயவர்கள் இதில் ஒருவன் பிற மதத்தைச்சேர்ந்தவன் என்று நினைக்கிறேன்) இன்னொரு முஸ்லிம் குடும்பத்திற்கு வட்டிக்கு கொடுத்திருக்கிறான். வட்டியை வாங்க வீட்டுக்கு அடிக்கடி வருவார்களாம். கணவர் இல்லாத நேரத்தில் அந்தப்பெண்ணை சீரழித்ததோடு அல்லாமல் செல்போன் கேமராவில் படம் எடுத்து (அந்தப்பெண் வெளியே சொல்ல முடியாத அளவுக்கு) அதை காட்டியே மிரட்டி தொடர்ந்து கொடுமை படுத்தி தற்பொழுது கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். வட்டியினால் கிடைத்த துன்பத்தை நினைத்து அந்த குடும்பம் வேதனை அடைந்து கொண்டு இருக்கிறது. (நான் சொல்லியது சிறிதளவுதான், நிறைய இருக்கு பெண்களைப் பற்றிய செய்திகளாக அதிகம் உள்ளதால் தவிர்த்துக்கொண்டேன்).
ஷைத்தானின் வலையால் பின்னபட்டுள்ள தினச்சீட்டு, வாரச்சீட்டு, மாதச்சீட்டு, ஏலச்சீட்டு என்று எத்தனை வகையான சீட்டுக்கள் இருக்கிறதோ இதிலிருந்தும் மேலும் வங்கிகள், அடகு(வட்டி) கடைகள், கூட்டுறவு வங்கிகள் இது போன்ற இடங்களில் நம் சமுதாயப் பெண்கள், சென்று நகை கடன், சீட்டு கடன் வாங்குவதை தடுப்பதற்கு நாமும், சமூக அக்கரை கொண்டவர்களும் முயற்சி எடுக்க வேண்டும்.
அருமை சகோதரர்களே!
என்னருமை சகோதரர்களே! இஸ்லாத்தையும், இஸ்லாத்தை பின்பற்றுபவர்களையும அழிக்க சில கூட்டங்கள் திட்டமிட்டு முழு நேர வேலையாக (உலகளவில்) பெரிய வலைப்பின்னலில் தங்களின் நேரத்தையும் பணத்தையும் செலவழித்து கொண்டு இருக்கிறார்கள்.
அதனால் தூய்மையான இஸ்லாத்தை நாமும், நம் குடும்பத்தாரும், நம்மை சுற்றியுள்ளவர்களும் கடைபிடித்து வாழ்வதற்காக நமது நேரங்களை அதிகம் செலவிட வேண்டும். (வாழ்நாளை எவ்விதம் செலவழித்தாய் என்ற வல்ல அல்லாஹ்வின் கேள்விக்கு நாம் பதில் சொல்ல கடமைப்பட்டு இருக்கிறோம். அதனால் தங்களின் பொன்னான நேரத்தை நல்வழியில் நமக்கும் நம் சமுதாயத்திற்கும் பயனளிக்கும் வகையில் செலவிடுங்கள். பணம் போனால் திரும்ப வந்து விடும். நேரம் போனால்... போனதுதான்... திரும்பி வராது...).
காலத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரையும், உண்மையைப் போதித்து பொறுமையையும் போதித்துக் கொள்வோரையும் தவிர.(அல்குர்ஆன் : 103: 1,2,3)
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து விதமான கடனில் இருந்தும், வட்டியிலிருந்தும் நாமும் நமது உறவினர்களும், நமது குடும்பத்து பெண்களும் விலகி இருக்க நம்மால் ஆன முயற்சிகளை தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும்.
மேலும் வீட்டு செலவுகளுக்கு மாதா மாதம் பணத்தை சரியாக அனுப்பி வைத்து, வீட்டில் உள்ளவர்கள் கடன்களிலிருந்தும், கடன் என்ற பெயரில் வட்டி என்ற பாவத்தில் மாட்டிக்கொள்வதிலிருந்தும் அவர்களையும், தங்களையும் காத்துக்கொள்ளுங்கள். வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் சத்தியபாதையில் செலுத்தி, ஈருலகிலும் நாம் வெற்றியடைய தொடர்ந்து துஆச் செய்து கொண்டே இருப்போம்.
இன்ஷாஅல்லாஹ் கடன் - வட்டி இந்த இரண்டிலிருந்தும் நாம் விடுபட தீர்வுகளை வரும் தொடர்களில் பார்ப்போம்.
இன்ஷாஅல்லாஹ் வளரும்..
-- அலாவுதீன். S.
Labels:
இஸ்லாம்,
சுயமரியாதை,
படித்தவர்கள்,
மனித நேயம்
இஸ்லாமியப் பெண்களைக் கேவலப்படுத்தும் இராஜின் புதிய பாடல்
பாதாள உலகைச் சேர்ந்த காடையர் குழுவொன்றை காவல்துறை அதிகாரிகள் துரத்துகின்றனர். அவர்களிடமிருந்து தப்பித்து ஒரு ஒழுங்கைக்குள்ளால் ஓடும் முஸ்லிமற்ற நாயகன், அங்கு துணி கழுவிக் கொண்டிருக்கும் ஒரு இளவயது முஸ்லிம் பெண்ணிடம் அபயம் கேட்கிறான். அவள் துணி மறைப்புக்குள் அவனை ஒளித்துக் காப்பாற்றுகிறாள். அவள் முகத்திரையோடு, முழுமையான இஸ்லாமிய ஆடையணியும் பெண். பள்ளிவாசலில் சிறுவர்களுக்கு மார்க்கக் கல்வியைக் கற்றுக் கொடுக்கும் அவள், பள்ளிவாசலுக்கும், வகுப்புக்களுக்கும் சென்று வருகையில் இடைக்கிடையே அவனைக் கண்டு காதல் மலர்கிறது. காதலின் உச்சகட்டமாக இரவில் அவளது அறைக்கும் திருட்டுத்தனமாக வந்து அவளுடன் தங்கிச் செல்பவனை அவளது தந்தை காண்கிறார். இருவரது கரங்களையும் சேர்த்து வைத்து அவனுடனேயே தனது மகளை அனுப்பி வைக்கிறார் அத் தந்தை. தனது இஸ்லாமிய ஆடையைத் துறந்து செல்லும் அவளையும் அவனையும் வழிமறிக்கும் இன்னுமொரு எதிரிக் காடையர் குழுவில் ஒருவன், அவ்விருவரையும் சுட்டுக் கொல்கின்றான். அக் கொலைகாரனைச் சுட்டுக் கொல்கிறான் காடையர் குழுவில் இஸ்லாமிய ஆடையிலிருக்கும் இன்னும் ஓர் இளைஞன்.
இலங்கையின் பிரபல சிங்களப் பாடகர் இராஜின் புதிய பாடலான 'சித்தி மனீலா'வின் காட்சியமைப்பே இது. பாடலின் ஆரம்பத்திலும் இறுதியிலும் 'ஹய்ய அலல் ஃபலாஹ்' எனும் அஸானின் ஓசையையும் ஒலிக்கச் செய்கிறார்கள். பாடலில் ஒரு காட்சியை மாதம்பிட்டிய பள்ளிவாசலில் படம்பிடித்திருக்கிறார்கள். பாடலின் இடையிடையே சூதாட்டம் ஆடுபவர்களாகவும், காடையனாகவும் இஸ்லாமிய ஆடையோடிருக்கும் முஸ்லிம் இளைஞனொருவனைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். பாடலின் கருப்பொருளாக இஸ்லாமியரை எடுத்துக் கேவலப்படுத்தியிருக்கிறார்கள்.
சிறுவர்களுக்கு மார்க்கக் கல்வியைக் கற்றுக் கொடுக்கும், வீதியில் செல்லும் போதும் முகத் திரை அணியும் முஸ்லிம் பெண்ணொருத்தி, இரவில் களவாக அந்நியன் ஒருவனைத் தனது அறைக்குள் வரவழைத்துக் கொள்ளும் அளவுக்கு ஈமானற்றவளாகக் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது. அதனைப் பார்க்கும் அனைவருக்கும் இராஜ் சொல்ல வரும் சேதியென்ன? 'முஸ்லிம் பெண்கள் தனது வீட்டில் கண்டித்துச் சொல்லப்படுவதால்தான் இவ்வாறான ஆடைகள் அணிகிறார்களென்றும், இஸ்லாமிய நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்களென்றும், வாய்ப்புக் கிடைக்கும்போது அதனை எளிதில் துறந்துவிடலாமென்றும், அவர்களது ஈமான் வெளித்தோற்றத்தோடு மட்டும்தான்...மனதளவில் இல்லை' ஆகிய பொய்யான கருத்துக்களைத்தானே?
'இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.' (அல்குர்ஆன் 24:31)
'நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக; அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.' (அல்குர்ஆன் 33:59)
'நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால் (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனென்றால் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ அ(த்தகைய)வன் ஆசை கொள்வான். இன்னும் நீங்கள் நல்லவற்றையே பேசுங்கள்.' (அல்குர்ஆன் 33:32)
என அல்குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளதை முழுமையாக ஏற்று நடைமுறைப்படுத்தும் உண்மையான நமது முஸ்லிம் சகோதரியொருவர் , நாளை பூரணமான இஸ்லாமிய ஆடையில் வீதியில் செல்லநேரும் போது கூட, இப் பாடலைப் பார்த்திருக்கும் அந்நியர்கள் அவரைச் சுட்டிக் காட்டிக் கதைப்பவை பலவிதமான மோசமான கதைகளாக இருக்கக் கூடும் அல்லவா?
இஸ்லாமிய ஆடையிலிருக்கும் முஸ்லிம் பெண்கள் குறித்த, நிறையக் கேள்விகள் அந்நியர்கள் எல்லோரினதும் மனங்களிலே இருக்கின்றன. அவர்கள் ஏன் இவ்வாறு உடலை மூடி ஆடையணிகிறார்கள்? எது அவ்வாறு நிர்ப்பந்திக்கிறது? ஏன் அவர்கள் தங்கள் அழகினை அந்நியர்களுக்கு வெளிப்படுத்துவதில்லை? அவர்களை அரைகுறையாடைகளில் பார்ப்பது எப்படி? ஆகிய கேள்விகள் அவர்களைத் தூண்டிக் கொண்டே இருக்கின்றன. ஆகவேதான் உலகளாவிய ரீதியில் இஸ்லாமிய ஆடைகளுடனிருக்கும் முஸ்லிம் பெண்கள் கேவலப்படுத்தப்படுவது வெகு சாதாரணமாக நடந்து கொண்டிருக்கின்றன. அப் பெண்கள் உடுத்துக் கொண்டிருக்கும் ஆடைகள், அந்நியர்களுக்கு அரிப்பை ஏற்படுத்துவது போல பாடசாலைகளில், கல்லூரிகளில், வைத்தியசாலைகளில் ஏன் நீதிமன்றங்களில் கூட முக்காட்டை உருவி விடுகிறார்கள். அவர்களை இவ்வாறு செய்யச் செய்வது எது? அழகை மறைப்பதையும், மறைப்பதால் ஏற்படும் அழகையும் அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். தனது குடும்பத்துப் பெண்கள் அரைகுறையாடையோடு அந்நியர்கள் பலருடனும் அளவளாவிச் செல்கையில், பாதையில் முழுமையாக மறைத்து ஒரு முஸ்லிம் பெண் செல்வதைக் காணும்போது கிளர்ந்தெழும் பொறாமைதான் இவ்வாறு செய்யத் தூண்டுகிறது.
இலங்கையில் இவ்வாறாக முஸ்லிம் பெண்களைக் கேவலப்படுத்தும் பாடலான இது முதலாவதில்லை. இரண்டோ, மூன்றோ இருக்கின்றன. எல்லாவற்றிலும் முஸ்லிம் பெண்கள்தான் அந்நிய ஆண்களிடம் மையலுறுகிறார்கள். தனது இஸ்லாமிய ஆடையைத் துறந்து செல்கிறார்கள். இது இலங்கையில் மட்டுமல்ல. இந்தியத் தமிழ்த் திரைப்படங்களிலும் இதே கதைதான். மெல்லத் திறந்தது கதவு, பம்பாய், பொக்கிஷம்... எனப் பல திரைப்படங்களில் கதையின் நாயகி முஸ்லிம் பெண். அந்நிய மதத்திலொருவனைக் காதலித்து, அவனுடன் இணைவதற்காக குர்ஆனையும், இஸ்லாமிய ஆடையையும் துறந்து செல்வாள். இது இன்றோடு முடியும் ஒன்றில்லை. இனி வரும் காதல் கதைகளிலும், பாடல்களிலும் இதுவேதான் தொடரும். தப்பித் தவறியேனும் முஸ்லிம் இளைஞனொருவன் தங்கள் மதத்துப் பெண்ணொருத்தியைக் காதலிப்பதாகக் காட்டமாட்டார்கள். அவ்வாறு காட்டினால் தங்கள் மதத்துப் பெண், எளிதில் அந்நிய ஆண்களிடம் வசப்பட்டு விடக் கூடியவள் என்றும் காதலுக்காக அவ்வளவு காலமும் அன்பாக வளர்த்த குடும்பத்தை விட்டும் ஓடி விடுபவள் என்றும், ஒழுக்கமற்றவள் என்றும் அர்த்தமாகிவிடும் அல்லவா? அதன்பிறகு அப்படத்தின், பாடலின் இயக்குனரை அவரது மதத்தைச் சேர்ந்தவர்கள் உண்டு, இல்லையென்று ஆக்கிவிடுவார்கள்.
ஆனால் இலங்கையில் கதாநாயகியை சிறுபான்மையாக இருக்கும் இஸ்லாமியப் பெண்ணாகக் காட்டினால் யாரால் என்ன செய்ய முடியுமென்ற தைரியம் இந்தப் பெரும்பான்மை இயக்குனர்களை, பாடகர்களைத் தொடர்ந்தும் இயங்கச் செய்கிறது. மிகத் துணிச்சலாக காட்சிகளைப் படம்பிடித்து எளிதாக ஒளிபரப்பிவிட முடிகிறது. இதுவே ஒரு பௌத்தப் பெண்ணை, வேறு மதத்தவனொருவன் இழுத்துக் கொண்டு ஓடுவதாகக் காட்டினால் அடுத்தநாள் கல்லெறிக்குள்ளாவோமென அவர்களுக்குத் தெரியும். பௌத்த மதத்தை அவமதித்த ஒரே காரணத்துக்காக, சமீபத்தில் இலங்கை வரவிருந்த அமெரிக்கப் பொப்பிசைப் பாடகரான அகோனுக்கு இலங்கை அரசு விசாவை மறுத்ததையும் இப் பாடலை ஒளிபரப்பிய சிரச மற்றும் எம்.டீ.வி நிறுவனங்கள் கல்லெறிதலுக்குள்ளானதையும் அண்மையில் அறிந்திருப்பீர்கள்.
ஒரு சிறு காட்சியினால் தமது மதத்துக்கு ஏற்படும் கலாசாரச் சீரழிவினை அவர்கள் அறிந்திருப்பதனால்தான் இவ்வாறான எதிர்வினையைக் காட்டிவிட முடிகிறது. ஆனால் நாம் மௌனமாக இருந்துவிடுகிறோம். இவ்வாறான பாடல்களை அனுமதிப்பதன் மூலம் நாம் வாழும் சமூகத்தில் எவ்வாறான தீமைகள் நிகழக் கூடுமென்பதைப் பற்றி நாம் ஒவ்வொருவரும் சிந்திக்கவேண்டும்.
சமீபத்தில், இந்தியா, தமிழ்நாட்டில் இந்து முன்ணனி தலைவர் இராமகோபாலன் ஒரு அறிவிப்பை விடுத்துள்ளார். "ஒரு முஸ்லிம் பெண்ணைக் காதலித்து, இந்துவாக்கி மணம் புரியும் ஆணுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு" என அந்த அறிவிப்பு சொல்கிறது. அத்துடன் எப்படி முஸ்லிம் பெண்களை தங்கள் காதல் வலையில் வீழ்த்தி அவர்களின் ஒழுக்கத்தையும் மார்க்கத்தையும் சூறையாடுவது என்ற பயிற்சியும் அவ்வியக்கத்திலிருக்கும் இந்து இளைஞர்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக என்றுமில்லாதவகையில் முஸ்லிம் இளம்பெண்கள் அந்நிய மதத்தவரோடு காதலுறுவதும், ஓடிப் போவதுவும் தமிழகத்தில் அதிகளவாக நிகழ்ந்து வருகிறது. இந்து அமைப்புக்களின் உதவியோடு கன்னியாகுமரி எனும் மாவட்டத்திலிருந்து மட்டும் அதிகளவான முஸ்லிம் பெண்கள மாற்று மத ஆண்களுடன் ஓடிப்போய் இந்துவாக மதம் மாறி திருமணம் முடித்த நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. பணத்திற்காக இதனைச் செய்யும் இளைஞர்கள் பணம் கிடைத்ததும் கூட வந்த பெண்ணை நடுத்தெருவில் தள்ளி விடுகின்றனர். இதற்கு அந்த இயக்கங்களை மட்டும் குறைசொல்லிப் பயனில்லை. முஸ்லிம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை முழுமையாகக் கவனிக்கத் தவறுவது, பணத்தையும், பாவத்தின் பக்கம் இட்டுச் செல்லக் கூடிய நவீன தொடர்பு சாதனங்களையும் கட்டுப்பாடின்றி பிள்ளைகளைப் பாவிக்க விடுவது போன்ற இன்றைய எமது சமூகத்திலிருக்கும் ஓட்டைகளும் இதற்குக் காரணம் அல்லவா?
இப் பாடலை இணையத்திலும் ( http://www.youtube.com/watch?v=2r3M8dh1PJQ&feature=related ) ஒளிபரப்பச் செய்திருப்பதன் மூலம் உலகிலுள்ள எல்லா மக்களுக்கும் இதை இப்பொழுது பார்க்க முடியும். எளிதாக ஆண்களிடம் மையலுற்றுவிடக் கூடியதாக, இலங்கை முஸ்லிம் பெண்கள் குறித்த கேவலமான சித்திரமொன்றைப் பார்வையாளர்களின் மனதில் இலகுவாகத் தீட்டி விட முடியும். இதன் மூலம் முஸ்லிம்கள் மத்தியில் கோபத்தைக் கிளர்ந்தெழச் செய்தும், அந்நிய மதத்தவர்கள் மத்தியில் முஸ்லிம் பெண்களின் ஒழுக்கம் குறித்துக் கேள்வியெழுப்பியும் இப் பாடலின் மூலம் கிடைக்கக் கூடிய பிரபலம், இராஜை இப்படிச் செய்யத் தூண்டியிருக்கவேண்டும். புகழல்ல. பிரபலம். புகழுக்கும் பிரபலத்துக்கும் பாரிய அளவு வித்தியாசமிருக்கின்றது. ஒருவன் இன்னொருவனைக் கொன்றுவிட்டும் உடனடியாகப் பிரபலமடைந்துவிடலாம். ஆனால் மனிதர்கள் மத்தியில் நற்புகழைப் பெற நீண்ட காலம் உழைக்கவேண்டும். இலகுவாகப் பிரபலமடைந்துவிடலாம். புகழ் பெற்றுவிடுவது கடினம். இங்கு இசைக் கலைஞர் இராஜ் மற்றவர்களின் மனதைக் கொன்று இலகுவாகப் பிரபலமடையும் வழிமுறையை நன்கு அறிந்திருக்கிறார். இலங்கையில் மற்றும் உலகம் முழுதும் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய ஒரு மதத்தினரைத் தனது பாடலில் வக்கிரமாகக் காட்சிப்படுத்துவதன் மூலம் எழும் பரபரப்பைக் கொண்டு, இப் பாடலைப் பிரபலப்படுத்துவது அவரது நோக்கமாக இருக்கலாம்.
இலங்கையில் சியத தொலைக்காட்சியின் 'ஹட்ச் டொப் டென்' எனும் நிகழ்ச்சியில் இப்பொழுதும் ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருக்கும் இப் பாடல் குறித்து, நியாயமான கேள்விகள் சிலதை எனக்கு மின்னஞ்சலில் அனுப்பியிருக்கிறார் ஒரு இஸ்லாமியச் சகோதரர்.
1. பள்ளிவாசல் வட்டாரத்துக்குள் இப் பாடலைப் படம் பிடிக்க ஏன் அனுமதித்தார்கள்?
2. அஸானின் வரிகளை இந்த பாடலில் பயன்படுத்த யார் அனுமதி கொடுத்தது?
3. ஜம்மியத்துல் உலமாவுக்கு யாராவது இப் பாடல் குறித்து அறிவித்தார்களா? அறிவித்தார்களெனில், இப் பாடல் குறித்து அவர்களது நிலைப்பாடு என்ன?
4. அந்நியப் பெண்ணொருவர் (முகத்திரையுடன் கூடிய ஹிஜாப், ஹபாயாவுடன்) இஸ்லாமிய ஆடையணிந்து, இஸ்லாத்தைக் கேவலப்படுத்துவதை அனுமதிக்கலாமா?
அவர் எழுப்பியிருக்கும் கேள்விகள் இதை வாசிக்கும் அநேக இஸ்லாமியர்களது மனங்களிலெழும் கேள்விகள்தான். இலங்கையில் நிலவும் ஊடக சுதந்திரமானது, இவ்வாறாக ஒரு இனத்தை மாத்திரம் கேவலப்படுத்தும் அளவுக்கு வருமிடத்து அதைத் தடுத்து நிறுத்த வேண்டாமா? இலங்கை முஸ்லிம்களைக் கேவலமாகச் சித்தரிக்கும் இவை போன்ற ஒளிப்பதிவுகள் உடனடியாகத் தடை செய்யப்பட வேண்டியவை. இதற்காக நாம் ஒவ்வொருவரும் முன்வர வேண்டும்.
"உங்களில் எவரேனும் தீயசெயல் நடப்பதைக் கண்டால் அவர் அதனைத் தம் கரங்களால் தடுக்கட்டும்; இயலாவிட்டால் நாவினால் தடுக்கட்டும்; (அதற்கும்) இயலா விட்டால் இதயத்தால் தடுத்து (ஒதுங்கி)க் கொள்ளட்டும். இது ஈமானின் பலவீனமான (இறுதி) நிலையாகும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ சயீத் (ரலி); ஆதாரம்: புகாரி.
நாம் என்ன செய்யப் போகிறோம்? இப் பாடலை ஒளிபரப்பக் கூடாதென எல்லா முஸ்லிம்களும் இணைந்து ஆர்ப்பாட்டம் செய்வதால், இப் பாடல் இன்னும் பிரபலம் அடைவதோடு பாடலின் வெற்றிக்கும் அது வழிவகுக்கும். பாடலைப் பார்த்திராதவர்களுக்கும் பார்க்கும் ஆவலை ஏற்படுத்திவிடும். அத்தோடு இலங்கையிலுள்ள இஸ்லாமியர்களை 'கலகம் செய்பவர்கள்' என்ற போர்வைக்குள் தள்ளிவிடும். ஆகவே முஸ்லிம்களாகிய நாம் எமது ஜம்மிய்யத்துல் உலமாவுக்கு இது பற்றி அறிவித்து, அவர்கள் முஸ்லிம் கலாசார அமைச்சைத் தொடர்பு கொண்டு அவர்கள் மூலமாக இப் பாடலை எங்கும் ஒளிபரப்பவிடாதபடி தடை செய்யச் சொல்லத் தூண்ட வேண்டும். அத்தோடு இப் பாடல்காட்சியில் சம்பந்தப்பட்டிருக்கும் அனைவரையும் பொது மன்னிப்புக் கேட்க வைத்தால்தான் இலங்கையில் மீண்டுமொருமுறை இவை போன்ற ஒளிப்பதிவுகள் வெளிவராது. விட்டுவிடுவோமேயானால் இப் பாடலின் பிரபலத்தோடும் வெற்றியோடும் தொடர்ந்து வரக் கூடிய இது போன்ற பாடல்களையும், விளம்பரங்களையும், திரைப்படங்களையும் எதுவும் செய்ய இயலாமல் போய்விடும். விஷச் செடியொன்றை நிலத்திலிருந்து முளைத்தவுடனேயே விரல்களால் நசுக்கிவிடுவது இலகு. வேர் பிடித்து, கிளை விரித்து நன்றாக வளர்ந்த பின்னர் வெட்ட முயற்சித்தால் நிலத்துக்கும் சேதம். சுற்றியிருக்கும் எல்லாவற்றுக்கும் சேதம். சிந்திப்போம் சகோதரர்களே !
- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.
நன்றி
# அல்ஹசனாத் இதழ், நவம்பர் 2010
# விடிவெள்ளி இதழ் ( புகைப்படங்கள்)
நன்றிhttp://rishanshareef.blogspot.com/2010/11/blog-post.html
இலங்கையின் பிரபல சிங்களப் பாடகர் இராஜின் புதிய பாடலான 'சித்தி மனீலா'வின் காட்சியமைப்பே இது. பாடலின் ஆரம்பத்திலும் இறுதியிலும் 'ஹய்ய அலல் ஃபலாஹ்' எனும் அஸானின் ஓசையையும் ஒலிக்கச் செய்கிறார்கள். பாடலில் ஒரு காட்சியை மாதம்பிட்டிய பள்ளிவாசலில் படம்பிடித்திருக்கிறார்கள். பாடலின் இடையிடையே சூதாட்டம் ஆடுபவர்களாகவும், காடையனாகவும் இஸ்லாமிய ஆடையோடிருக்கும் முஸ்லிம் இளைஞனொருவனைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். பாடலின் கருப்பொருளாக இஸ்லாமியரை எடுத்துக் கேவலப்படுத்தியிருக்கிறார்கள்.சிறுவர்களுக்கு மார்க்கக் கல்வியைக் கற்றுக் கொடுக்கும், வீதியில் செல்லும் போதும் முகத் திரை அணியும் முஸ்லிம் பெண்ணொருத்தி, இரவில் களவாக அந்நியன் ஒருவனைத் தனது அறைக்குள் வரவழைத்துக் கொள்ளும் அளவுக்கு ஈமானற்றவளாகக் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது. அதனைப் பார்க்கும் அனைவருக்கும் இராஜ் சொல்ல வரும் சேதியென்ன? 'முஸ்லிம் பெண்கள் தனது வீட்டில் கண்டித்துச் சொல்லப்படுவதால்தான் இவ்வாறான ஆடைகள் அணிகிறார்களென்றும், இஸ்லாமிய நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்களென்றும், வாய்ப்புக் கிடைக்கும்போது அதனை எளிதில் துறந்துவிடலாமென்றும், அவர்களது ஈமான் வெளித்தோற்றத்தோடு மட்டும்தான்...மனதளவில் இல்லை' ஆகிய பொய்யான கருத்துக்களைத்தானே?
'இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.' (அல்குர்ஆன் 24:31)
'நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக; அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.' (அல்குர்ஆன் 33:59)
'நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால் (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனென்றால் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ அ(த்தகைய)வன் ஆசை கொள்வான். இன்னும் நீங்கள் நல்லவற்றையே பேசுங்கள்.' (அல்குர்ஆன் 33:32)
என அல்குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளதை முழுமையாக ஏற்று நடைமுறைப்படுத்தும் உண்மையான நமது முஸ்லிம் சகோதரியொருவர் , நாளை பூரணமான இஸ்லாமிய ஆடையில் வீதியில் செல்லநேரும் போது கூட, இப் பாடலைப் பார்த்திருக்கும் அந்நியர்கள் அவரைச் சுட்டிக் காட்டிக் கதைப்பவை பலவிதமான மோசமான கதைகளாக இருக்கக் கூடும் அல்லவா?
இஸ்லாமிய ஆடையிலிருக்கும் முஸ்லிம் பெண்கள் குறித்த, நிறையக் கேள்விகள் அந்நியர்கள் எல்லோரினதும் மனங்களிலே இருக்கின்றன. அவர்கள் ஏன் இவ்வாறு உடலை மூடி ஆடையணிகிறார்கள்? எது அவ்வாறு நிர்ப்பந்திக்கிறது? ஏன் அவர்கள் தங்கள் அழகினை அந்நியர்களுக்கு வெளிப்படுத்துவதில்லை? அவர்களை அரைகுறையாடைகளில் பார்ப்பது எப்படி? ஆகிய கேள்விகள் அவர்களைத் தூண்டிக் கொண்டே இருக்கின்றன. ஆகவேதான் உலகளாவிய ரீதியில் இஸ்லாமிய ஆடைகளுடனிருக்கும் முஸ்லிம் பெண்கள் கேவலப்படுத்தப்படுவது வெகு சாதாரணமாக நடந்து கொண்டிருக்கின்றன. அப் பெண்கள் உடுத்துக் கொண்டிருக்கும் ஆடைகள், அந்நியர்களுக்கு அரிப்பை ஏற்படுத்துவது போல பாடசாலைகளில், கல்லூரிகளில், வைத்தியசாலைகளில் ஏன் நீதிமன்றங்களில் கூட முக்காட்டை உருவி விடுகிறார்கள். அவர்களை இவ்வாறு செய்யச் செய்வது எது? அழகை மறைப்பதையும், மறைப்பதால் ஏற்படும் அழகையும் அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். தனது குடும்பத்துப் பெண்கள் அரைகுறையாடையோடு அந்நியர்கள் பலருடனும் அளவளாவிச் செல்கையில், பாதையில் முழுமையாக மறைத்து ஒரு முஸ்லிம் பெண் செல்வதைக் காணும்போது கிளர்ந்தெழும் பொறாமைதான் இவ்வாறு செய்யத் தூண்டுகிறது.
இலங்கையில் இவ்வாறாக முஸ்லிம் பெண்களைக் கேவலப்படுத்தும் பாடலான இது முதலாவதில்லை. இரண்டோ, மூன்றோ இருக்கின்றன. எல்லாவற்றிலும் முஸ்லிம் பெண்கள்தான் அந்நிய ஆண்களிடம் மையலுறுகிறார்கள். தனது இஸ்லாமிய ஆடையைத் துறந்து செல்கிறார்கள். இது இலங்கையில் மட்டுமல்ல. இந்தியத் தமிழ்த் திரைப்படங்களிலும் இதே கதைதான். மெல்லத் திறந்தது கதவு, பம்பாய், பொக்கிஷம்... எனப் பல திரைப்படங்களில் கதையின் நாயகி முஸ்லிம் பெண். அந்நிய மதத்திலொருவனைக் காதலித்து, அவனுடன் இணைவதற்காக குர்ஆனையும், இஸ்லாமிய ஆடையையும் துறந்து செல்வாள். இது இன்றோடு முடியும் ஒன்றில்லை. இனி வரும் காதல் கதைகளிலும், பாடல்களிலும் இதுவேதான் தொடரும். தப்பித் தவறியேனும் முஸ்லிம் இளைஞனொருவன் தங்கள் மதத்துப் பெண்ணொருத்தியைக் காதலிப்பதாகக் காட்டமாட்டார்கள். அவ்வாறு காட்டினால் தங்கள் மதத்துப் பெண், எளிதில் அந்நிய ஆண்களிடம் வசப்பட்டு விடக் கூடியவள் என்றும் காதலுக்காக அவ்வளவு காலமும் அன்பாக வளர்த்த குடும்பத்தை விட்டும் ஓடி விடுபவள் என்றும், ஒழுக்கமற்றவள் என்றும் அர்த்தமாகிவிடும் அல்லவா? அதன்பிறகு அப்படத்தின், பாடலின் இயக்குனரை அவரது மதத்தைச் சேர்ந்தவர்கள் உண்டு, இல்லையென்று ஆக்கிவிடுவார்கள்.
ஆனால் இலங்கையில் கதாநாயகியை சிறுபான்மையாக இருக்கும் இஸ்லாமியப் பெண்ணாகக் காட்டினால் யாரால் என்ன செய்ய முடியுமென்ற தைரியம் இந்தப் பெரும்பான்மை இயக்குனர்களை, பாடகர்களைத் தொடர்ந்தும் இயங்கச் செய்கிறது. மிகத் துணிச்சலாக காட்சிகளைப் படம்பிடித்து எளிதாக ஒளிபரப்பிவிட முடிகிறது. இதுவே ஒரு பௌத்தப் பெண்ணை, வேறு மதத்தவனொருவன் இழுத்துக் கொண்டு ஓடுவதாகக் காட்டினால் அடுத்தநாள் கல்லெறிக்குள்ளாவோமென அவர்களுக்குத் தெரியும். பௌத்த மதத்தை அவமதித்த ஒரே காரணத்துக்காக, சமீபத்தில் இலங்கை வரவிருந்த அமெரிக்கப் பொப்பிசைப் பாடகரான அகோனுக்கு இலங்கை அரசு விசாவை மறுத்ததையும் இப் பாடலை ஒளிபரப்பிய சிரச மற்றும் எம்.டீ.வி நிறுவனங்கள் கல்லெறிதலுக்குள்ளானதையும் அண்மையில் அறிந்திருப்பீர்கள்.
ஒரு சிறு காட்சியினால் தமது மதத்துக்கு ஏற்படும் கலாசாரச் சீரழிவினை அவர்கள் அறிந்திருப்பதனால்தான் இவ்வாறான எதிர்வினையைக் காட்டிவிட முடிகிறது. ஆனால் நாம் மௌனமாக இருந்துவிடுகிறோம். இவ்வாறான பாடல்களை அனுமதிப்பதன் மூலம் நாம் வாழும் சமூகத்தில் எவ்வாறான தீமைகள் நிகழக் கூடுமென்பதைப் பற்றி நாம் ஒவ்வொருவரும் சிந்திக்கவேண்டும்.
சமீபத்தில், இந்தியா, தமிழ்நாட்டில் இந்து முன்ணனி தலைவர் இராமகோபாலன் ஒரு அறிவிப்பை விடுத்துள்ளார். "ஒரு முஸ்லிம் பெண்ணைக் காதலித்து, இந்துவாக்கி மணம் புரியும் ஆணுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு" என அந்த அறிவிப்பு சொல்கிறது. அத்துடன் எப்படி முஸ்லிம் பெண்களை தங்கள் காதல் வலையில் வீழ்த்தி அவர்களின் ஒழுக்கத்தையும் மார்க்கத்தையும் சூறையாடுவது என்ற பயிற்சியும் அவ்வியக்கத்திலிருக்கும் இந்து இளைஞர்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக என்றுமில்லாதவகையில் முஸ்லிம் இளம்பெண்கள் அந்நிய மதத்தவரோடு காதலுறுவதும், ஓடிப் போவதுவும் தமிழகத்தில் அதிகளவாக நிகழ்ந்து வருகிறது. இந்து அமைப்புக்களின் உதவியோடு கன்னியாகுமரி எனும் மாவட்டத்திலிருந்து மட்டும் அதிகளவான முஸ்லிம் பெண்கள மாற்று மத ஆண்களுடன் ஓடிப்போய் இந்துவாக மதம் மாறி திருமணம் முடித்த நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. பணத்திற்காக இதனைச் செய்யும் இளைஞர்கள் பணம் கிடைத்ததும் கூட வந்த பெண்ணை நடுத்தெருவில் தள்ளி விடுகின்றனர். இதற்கு அந்த இயக்கங்களை மட்டும் குறைசொல்லிப் பயனில்லை. முஸ்லிம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை முழுமையாகக் கவனிக்கத் தவறுவது, பணத்தையும், பாவத்தின் பக்கம் இட்டுச் செல்லக் கூடிய நவீன தொடர்பு சாதனங்களையும் கட்டுப்பாடின்றி பிள்ளைகளைப் பாவிக்க விடுவது போன்ற இன்றைய எமது சமூகத்திலிருக்கும் ஓட்டைகளும் இதற்குக் காரணம் அல்லவா?
இப் பாடலை இணையத்திலும் ( http://www.youtube.com/watch?v=2r3M8dh1PJQ&feature=related ) ஒளிபரப்பச் செய்திருப்பதன் மூலம் உலகிலுள்ள எல்லா மக்களுக்கும் இதை இப்பொழுது பார்க்க முடியும். எளிதாக ஆண்களிடம் மையலுற்றுவிடக் கூடியதாக, இலங்கை முஸ்லிம் பெண்கள் குறித்த கேவலமான சித்திரமொன்றைப் பார்வையாளர்களின் மனதில் இலகுவாகத் தீட்டி விட முடியும். இதன் மூலம் முஸ்லிம்கள் மத்தியில் கோபத்தைக் கிளர்ந்தெழச் செய்தும், அந்நிய மதத்தவர்கள் மத்தியில் முஸ்லிம் பெண்களின் ஒழுக்கம் குறித்துக் கேள்வியெழுப்பியும் இப் பாடலின் மூலம் கிடைக்கக் கூடிய பிரபலம், இராஜை இப்படிச் செய்யத் தூண்டியிருக்கவேண்டும். புகழல்ல. பிரபலம். புகழுக்கும் பிரபலத்துக்கும் பாரிய அளவு வித்தியாசமிருக்கின்றது. ஒருவன் இன்னொருவனைக் கொன்றுவிட்டும் உடனடியாகப் பிரபலமடைந்துவிடலாம். ஆனால் மனிதர்கள் மத்தியில் நற்புகழைப் பெற நீண்ட காலம் உழைக்கவேண்டும். இலகுவாகப் பிரபலமடைந்துவிடலாம். புகழ் பெற்றுவிடுவது கடினம். இங்கு இசைக் கலைஞர் இராஜ் மற்றவர்களின் மனதைக் கொன்று இலகுவாகப் பிரபலமடையும் வழிமுறையை நன்கு அறிந்திருக்கிறார். இலங்கையில் மற்றும் உலகம் முழுதும் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய ஒரு மதத்தினரைத் தனது பாடலில் வக்கிரமாகக் காட்சிப்படுத்துவதன் மூலம் எழும் பரபரப்பைக் கொண்டு, இப் பாடலைப் பிரபலப்படுத்துவது அவரது நோக்கமாக இருக்கலாம்.
இலங்கையில் சியத தொலைக்காட்சியின் 'ஹட்ச் டொப் டென்' எனும் நிகழ்ச்சியில் இப்பொழுதும் ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருக்கும் இப் பாடல் குறித்து, நியாயமான கேள்விகள் சிலதை எனக்கு மின்னஞ்சலில் அனுப்பியிருக்கிறார் ஒரு இஸ்லாமியச் சகோதரர்.
1. பள்ளிவாசல் வட்டாரத்துக்குள் இப் பாடலைப் படம் பிடிக்க ஏன் அனுமதித்தார்கள்?
2. அஸானின் வரிகளை இந்த பாடலில் பயன்படுத்த யார் அனுமதி கொடுத்தது?
3. ஜம்மியத்துல் உலமாவுக்கு யாராவது இப் பாடல் குறித்து அறிவித்தார்களா? அறிவித்தார்களெனில், இப் பாடல் குறித்து அவர்களது நிலைப்பாடு என்ன?
4. அந்நியப் பெண்ணொருவர் (முகத்திரையுடன் கூடிய ஹிஜாப், ஹபாயாவுடன்) இஸ்லாமிய ஆடையணிந்து, இஸ்லாத்தைக் கேவலப்படுத்துவதை அனுமதிக்கலாமா?
அவர் எழுப்பியிருக்கும் கேள்விகள் இதை வாசிக்கும் அநேக இஸ்லாமியர்களது மனங்களிலெழும் கேள்விகள்தான். இலங்கையில் நிலவும் ஊடக சுதந்திரமானது, இவ்வாறாக ஒரு இனத்தை மாத்திரம் கேவலப்படுத்தும் அளவுக்கு வருமிடத்து அதைத் தடுத்து நிறுத்த வேண்டாமா? இலங்கை முஸ்லிம்களைக் கேவலமாகச் சித்தரிக்கும் இவை போன்ற ஒளிப்பதிவுகள் உடனடியாகத் தடை செய்யப்பட வேண்டியவை. இதற்காக நாம் ஒவ்வொருவரும் முன்வர வேண்டும்.
"உங்களில் எவரேனும் தீயசெயல் நடப்பதைக் கண்டால் அவர் அதனைத் தம் கரங்களால் தடுக்கட்டும்; இயலாவிட்டால் நாவினால் தடுக்கட்டும்; (அதற்கும்) இயலா விட்டால் இதயத்தால் தடுத்து (ஒதுங்கி)க் கொள்ளட்டும். இது ஈமானின் பலவீனமான (இறுதி) நிலையாகும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ சயீத் (ரலி); ஆதாரம்: புகாரி.
நாம் என்ன செய்யப் போகிறோம்? இப் பாடலை ஒளிபரப்பக் கூடாதென எல்லா முஸ்லிம்களும் இணைந்து ஆர்ப்பாட்டம் செய்வதால், இப் பாடல் இன்னும் பிரபலம் அடைவதோடு பாடலின் வெற்றிக்கும் அது வழிவகுக்கும். பாடலைப் பார்த்திராதவர்களுக்கும் பார்க்கும் ஆவலை ஏற்படுத்திவிடும். அத்தோடு இலங்கையிலுள்ள இஸ்லாமியர்களை 'கலகம் செய்பவர்கள்' என்ற போர்வைக்குள் தள்ளிவிடும். ஆகவே முஸ்லிம்களாகிய நாம் எமது ஜம்மிய்யத்துல் உலமாவுக்கு இது பற்றி அறிவித்து, அவர்கள் முஸ்லிம் கலாசார அமைச்சைத் தொடர்பு கொண்டு அவர்கள் மூலமாக இப் பாடலை எங்கும் ஒளிபரப்பவிடாதபடி தடை செய்யச் சொல்லத் தூண்ட வேண்டும். அத்தோடு இப் பாடல்காட்சியில் சம்பந்தப்பட்டிருக்கும் அனைவரையும் பொது மன்னிப்புக் கேட்க வைத்தால்தான் இலங்கையில் மீண்டுமொருமுறை இவை போன்ற ஒளிப்பதிவுகள் வெளிவராது. விட்டுவிடுவோமேயானால் இப் பாடலின் பிரபலத்தோடும் வெற்றியோடும் தொடர்ந்து வரக் கூடிய இது போன்ற பாடல்களையும், விளம்பரங்களையும், திரைப்படங்களையும் எதுவும் செய்ய இயலாமல் போய்விடும். விஷச் செடியொன்றை நிலத்திலிருந்து முளைத்தவுடனேயே விரல்களால் நசுக்கிவிடுவது இலகு. வேர் பிடித்து, கிளை விரித்து நன்றாக வளர்ந்த பின்னர் வெட்ட முயற்சித்தால் நிலத்துக்கும் சேதம். சுற்றியிருக்கும் எல்லாவற்றுக்கும் சேதம். சிந்திப்போம் சகோதரர்களே !
- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.
நன்றி
# அல்ஹசனாத் இதழ், நவம்பர் 2010
# விடிவெள்ளி இதழ் ( புகைப்படங்கள்)
நன்றிhttp://rishanshareef.blogspot.com/2010/11/blog-post.html
Labels:
ஈமான்,
பள்ளிவாசல். ஜம்மியத்துல் உலமா,
ழக முஸ்லிம்கள
முரண்பாடுகளை முறியடிப்போம்
உயர்ந்த கட்டிடங்கள் கட்டுகின்றோம்,
தாழ்வான எண்ணங்களில் உள்ளோம்;
விரிவான பாதைகள் அமைக்கின்றோம்,
குறுகிய மனப்பான்மையிலே உள்ளோம்;
நிறைய செலவு செய்கின்றோம்,
குறைவாகவே பெறுகின்றோம்;
பெரிய வீடுகள் உள,
சிரிய குடும்பமே வசிக்கின்றது;
நிரம்ப வசதிகள் உள,
குறைவான நேரங்களே கிடைக்கின்றன;
பட்டங்கள் நிரம்பப் பெறுகின்றோம்,
பட்டறிவு குறைவாகவே பெற்றுள்ளோம்;
நிறைய அறிந்திருந்தாலும்,
அரைகுறையாகவே நீதி வழங்குகின்றோம்;
அறிஞர்கள் அதிகமானதால்,
குழப்பங்களும் கூடி விட்டன;
மருந்துகள் பெருகிவிட்டன,
நிவாரணம் அருகிவிட்டன;
உடைமைகளைப் பெருக்கிவிட்டோம்,
அதன் மதிப்பைச் சுருக்கிவிட்டோம்;
அதிகமாகவே பேசுகின்றோம்,
அன்பைச் சுருக்கி; வெறுப்பைப் பெறுக்கிவிட்டோம்;
வாழ்வாதாரங்களை உருவாக்கக் கற்று கொண்டோம்,
வாழ்க்கையை அல்ல;
ஆயுளுக்கு ஆண்டுகளைச் சேர்க்கும் நாம்,
வாழும் பருவத்துக்கு உயிரைச் சேர்ப்ப்தில்லை;
விண்ணுக்குச் சென்று திரும்பும் நாம்,
மண்ணில் அண்டை வீட்டாரைக் காண்பதேயில்லை;
வெளிக்கட்டமைப்புகள் யாவற்றையும் வென்றாலும்,
உள்கட்டமைப்புகளை ஒழுங்குபடுத்துவதில் தோற்றுவிட்டோம்;
காற்று வெளியாவும் தூய்மைப் படுத்தி விட்டோம்,
ஆற்றல் மிகு ஆன்மாவை தூய்மைப் படுத்தவேத் தவறிவிட்டோம்;
அணுவைப் பிளக்கும் அறிவைப் பெற்றோம்,
அகத்தின் அழுக்காறு பிளந்தெடுக் கற்றோமா..?
உயர்வான ஊதியம் காணுகின்றோம்,
குறைவாகவே ஒழுக்கம் பேணுகின்றோம்;
அளவையிலே நிறைந்துள்ளோம்,
தரத்தினிலே குறைந்துள்ளோம்;
இலாபத்தைப் பெருக்கி விட்டோம்,
உறவுகளை கழித்து விட்டோம்;
"உலக அமைதி"க்கு உச்சி மாநாடு,
கலகம் உருவாக்கி உள்நாடே ம்யானக்காடு..!;
வகைவகையான உணவு பதார்த்தங்கள்,
மிகமிக குறைவான சத்துக்களே- என்பதே யதார்த்தம்;
இருவழிப் பாதையாக வருமானம்,
ஒருவ்ழிப் பாதையாக "விவாகரத்து" பெருகுவதே அவமானம்;
அலங்கார இல்லங்கள்,
அலங்கோல உள்ள்ங்கள்;
காட்சிக்கு அழகான ஜன்னல்கள் வெளியே,
வைப்பறையில் ஒன்றுமேயில்லை உள்ளே;
தொழில் நுட்பம் பெருகி விட்ட இவ்வேளையிலே
அழித்து விடாதீர் இவ்வரிய வரிகளை.......................!!!!!

“கவியன்பன்’, கலாம், அதிராம்பட்டினம்
Labels:
"உலக அமைதி",
உயர்ந்த கட்டிடங்கள்,
பட்டங்கள்,
விரிவான பாதைகள்
Monday, November 1, 2010
சின்ன சின்ன சுவாரசியம்
இன்னும் திறக்கப்பட்டு வாசிக்கப்படாத டைரி, கிழிக்கப்பட்ட துப்பறியும் நாவலின் கடைசிப்பக்கங்கள், டெலிவரி செய்யப்படாமல் சுற்றிவரும் அவசரம் தாங்கிய குரியர், வெளியிடப்படாத தேர்தல் மற்றும் பரிட்சை ரிசல்ட் இவைகளில் எல்லாம் எதோ ஒரு விதமான சுவராஸ்யமும், பரபரப்புடன் கூடிய படபடப்பும் ஒளிந்திருப்பதை அன்றாட வாழ்வில் நாம் அறியாமல் அறிந்து வருகிறோம்.
சவுதி ஜித்தா இந்தியத் தூதரகத்தில் WELFARE CONSUL ஆக சமீபத்தில் பதவி உயர்வு பெற்று பொறுப்பேற்றுள்ள சகோதரர். மூர்த்தி அவர்கள் கூடுதல் பொறுப்பாக புனித ஹஜ் டிபார்ட்மெண்டையும் ஏற்று அதன் மூலம் அற்புதமான பணியை செய்து வருகிறார்கள்.
"ஏற்பு மதத்தவரை விட மாற்று மதத்தவரான இவரால் எப்படி இவ்வளவு சிறப்பாக ஹித்மத் (service) செய்ய முடிகிறது?! என்று விமான தளத்தில் அவர் காது படவே நம் ஹாஜிகளின் ஆச்சரியம் கலந்த முனுமுனுப்பு!
"ஏற்பு மதத்தவரை விட மாற்று மதத்தவரான இவரால் எப்படி இவ்வளவு சிறப்பாக ஹித்மத் (service) செய்ய முடிகிறது?! என்று விமான தளத்தில் அவர் காது படவே நம் ஹாஜிகளின் ஆச்சரியம் கலந்த முனுமுனுப்பு!
மாற்று மத அன்பராக இருந்த பொழுதிலும் அவருக்காக அவர்கள் அனைவரும் மனமார து'ஆச்செய்வதை நேரிலேயே காண முடிந்தது.
ஒரு நாள் ஒரு காலை பொழுது ஜித்தா தமிழ்ச்சங்கத்தின் சார்பாக மத நல்லிணக்கக் கூட்டம் நடத்தலாமா? என்ற யோசனையுடனும் ஆர்வத்துடனும் திரு. மூர்த்தி அவர்களின் அலுவலகம் சென்றிருந்தோம். பல விடயங்கள் பேசிக் கொண்டிருந்தபோது தனக்கு வந்த மின்னஞ்சல்களில் ஒன்றை மட்டும் குறிப்பிட்டு நம்மிடம் அவர் காண்பிக்க, அதை சற்றே வாசிக்க நேர்ந்தது. அதில் சுருக்கமாக வரையப்பட்ட அர்த்தங்கள் ஆயிரம் சொல்லும் வார்த்தைகளை உங்களின் பார்வைக்கு இங்கு வழங்க விரும்புகிறேன்.
------------ ------------------ ----------------------------
அய்யா!
பல நாட்களுக்கு முன்னர் என் தந்தை அவர்களுக்கு தாங்கள் எழுதியனுப்பிய மின்னஞ்சலை (பிரிக்கப்படாமிலிருந்ததை )இப்பொழுது தான் படிக்க இயன்றது. எதற்கோ அவருக்கு தாம் உதவி செய்திருக்கிறீர்கள். எதற்கென்று இத்தருணம் வரை நான் அறியேன். ரொம்ப சந்தோசம். அவர் சார்பாக என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். (சில மாதங்களுக்கு முன் என் தந்தை இறந்து விட்டார் என்பது தங்களுக்கு தெரியுமோ இல்லை தெரியாதோ..?! என்று எனக்கு தெரியவில்லை).
நன்றி!
ரியாதிலிருந்து.
------------------------ ------------------------ -----------------------------------
சுப ஹானல்லாஹ் ! நேற்று பெற்ற உதவியை இன்று மறந்து விடும் இக்காலத்தில் அதுவும் பலன் அடைந்தோரே பராமுகமாகிவிடும் இந்நாளில் இப்படியுமா? என அச்சகோதரியின் மின்னஞ்சலை என் அகக்கண் முன்னே நிறுத்தியவனாக நன்றி மறப்பது என்றும் நன்றன்று .. என உள்ளத்துக்குள் முனுமுனுத்தவனாக 'மத நல்லிணக்க' கூட்டம் பற்றி அலோசிக்காமலேயே வெளியே வந்து விட்டேன்!
இறைவன் இது போன்ற ஆயிரமாயிரம் நல்லெண்ணம் கொண்ட மாற்று மத சகோதர, சகோதரிகளை நம் உன்னத மார்க்கமாம் இஸ்லாத்தின் பக்கம் ஆர்வமுடன் வந்திணைந்து ஈருலக பாக்கியங்களை பெற அவனிடமே து'ஆச்செய்து அதற்காக நம் அன்றாட அலுவல்களுடன் முயற்சிப்போமாக என அன்புடன் கேட்டுக்கொண்டவனாக உங்களிடமிருந்து விடை பெறுகிறேன் என் அடுத்த ஆக்கம் வரை.
வஸ்ஸலாம்.
வஸ்ஸலாம்.
வாழ்க வளமுடன்.!
மு.செ.மு. ரஃபியா
ஜித்தாவிலிருந்து.
Source : http://adirainirubar.blogspot. com/2010/11/blog-post.html
Source : http://adirainirubar.blogspot.
Labels:
சவுதி ஜித்தா,
தேர்தல்,
மத நல்லிணக்கம்
Subscribe to:
Posts (Atom)